ஜன 11, 2011 12:00 AM
ஜன 11, 2011 12:00 AM
மருத்துவம், பொறியியல் என்ற மிக முக்கியமான இருதுறைகளின் கூட்டுதான் உயிர் மருத்துவ பொறியியல். தற்போது வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் உயிர் மருத்துவ பொறியியல் முக்கியமான ஒன்று. பல விதமான நோய்களை துல்லியமாக கண்டு பிடித்து, சிகிச்சையளிக்க தேவைப்படும் கருவிகளை உருவாக்குவது தான் இத்துறையின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. இந்த துறையில் இருப்பவர்கள் மருத்துவம், பொறியியல் என இரு துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்டிருப்பது அவசியமாகிறது.
படிப்புகள்
* டிப்ளமோ இன் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்
* பி.டெக்., பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்
* எம்.எஸ்சி., பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ருமென்டேசன்
* எம்.எஸ்சி., பயோ மெடிக்கல் சயின்ஸ்
கல்வி நிறுவனங்கள்
* ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், டில்லி
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோரக்பூர்
* பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வாரணாசி
* அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
* காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, பெல்காம்
* துவாரகதாஸ் கே.சங்வி காலேஜ் ஆப் இன்ஜினியரிங், மும்பை
உயர் மருத்துவ பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு மருந்து உற்பத்தி, அறுவை சிகிச்சை கருவிகள் துறை ஆகிய துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
