ஜன 18, 2011 12:00 AM
ஜன 18, 2011 12:00 AM
இன்று பெரும்பாலான நிறுவனங்கள் வேலைக்கு தேர்வு செய்யும்போது குழுவிவாதத்தை நடத்த தவறுவதில்லை. குழுவிவாதத்தில் ஜொலிக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..
* ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதே குழுவிவாதம்.
* எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன ஆகியவற்றை ஆராய்ந்து பேசுவதே குழுவிவாதத்தில் முக்கியமானது.
* எழுத்து தேர்விலிருந்து குழுவிவாதம் மாறுபட்டது. கிடைக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்தி அனைவரும் ஏற்கும் விதத்தில் உங்களது கருத்தை விவாதத்தில் பதிவு செய்ய வேண்டும்.
* எல்லா இடங்களிலும் குழு விவாதம் ஒரே மாதிரியாக இருக்காது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சில இடங்களில் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். மாறாக போட்டியாளர்களின் புத்திக்கூர்மைக்கு சவால் விடும் வகையிலான பொது விவாதங்களும் நடத்தப்படுகிறது.
* சில சமயங்களில் விவாதத்தை துவக்கி வைத்து பேசும் வாய்ப்பு உங்களை தேடி வரலாம். அவ்வாறான சூழ்நிலையில், மற்றவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு அதற்கேற்ப உங்களது கருத்துக்களை திட்டமிடும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இதுபோன்ற நேரங்களில் இன்னும் கூடுதல் கவனத்துடன் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.
* உங்களுக்கு தெரிந்த விஷயங்களை, எந்தவித தயக்கமுமின்றி சீராக தெளிவான உச்சரிப்புடன் கூற வேண்டும்.
* தனிப்பட்ட நபரை தாக்கி பேசும்விதமான கருத்துக்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
* எந்த சூழ்நிலையிலும் விவாதிக்கும் விஷயத்திலிருந்து, உங்களது கருத்துக்கள் மாறுபட்டு வேறுபக்கம் சென்றுவிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
* மற்றவர்கள் கூறும் கருத்துக்களையும் நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.
* அன்றாட நிகழ்வுகளை தெரிந்துகொள்வது, தகவல் தொடர்பு திறனை மேம்படுத்திக்கொள்வது ஆகிய தகுதிகள் குழுவிவாதத்திற்கு அவசியமானதாக கருதப்படுகிறது.
* உங்கள் நண்பர்களுடன் ஆரோக்கியமான குழுவிவாதத்தில் ஈடுபட்டு பயிற்சி மேற்கொள்ளலாம். இதில் ஒருவொருடைய தவறை மற்றவர்கள் சுட்டிக்காட்டுவதன்மூலம் தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
