தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ரோபாடிக் சர்ஜரி

ரோபாடிக் சர்ஜரி

ரோபாடிக் சர்ஜரி


ஜன 18, 2011 12:00 AM

ஜன 18, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 18, 2011 12:00 AM ஜன 18, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்ஜரி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அறுவை சிகிச்சை பல்வேறு விதங்களில் செய்யப்படுகின்றன. "லேப்ராஸ்கோப்பி' அறுவை சிகிச்சை முறையின் அதிநவீன வடிவம் தான் "ரோபாடிக் சர்ஜரி'. இந்த அறுவை சிகிச்சைக்கு ரோபோவை பயன்படுத்துவதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை மேற்கொள்பவர்கள் "ரோபாடிக் சர்ஜன்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

கேமரா, ஆப்டிக்கல் சாதனங்கள் மற்றும் சிகிச்சை கருவிகள் உள்ளடக்கிய ரோபோவை உடலினுள் சிகிச்சை மேற்கோள்ளும் வகையில் இயக்குவதே ரோபாடிக் சர்ஜனின் வேலை. இருதயம், நெஞ்சகம் போன்றவற்றில் செய்யப்படும் கடினமான அறுவை சிகிச்சைகளுக்கு "ரோபாடிக் சர்ஜரி' முறையே சரியான தீர்வாக மருத்துவர்களால் பின்பற்றப்படுகிறது.

குறைந்தளவு மட்டுமே ரத்தம் வெளியேறுதல், குறைவான வலி, துல்லியமான சிகிச்சை, விரைவாக குணமடைதல் ஆகியன ரோபாடிக் சர்ஜரியின் பலன்கள். உடலினுள் செய்யப்படும் சிகிச்சையை வீடியோவில் பார்த்துகொண்டே அதற்கேற்ப ரோபோவை மருத்துவர்கள் இயக்குகிறார்கள். இதில் "ரோபா' சிகிச்சை கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவரின் திறமையே சிகிச்சையின் வெற்றியில் அடங்கி உள்ளது. இந்தியாவில் இத்தகைய சிகிச்சை முறை இன்னும் போதியளவு பிரபலமடையவில்லை. இதற்கு அதிக செலவு, போதிய விழிப்புணர்வின்மை போன்ற காரணங்கள் கூறப்படுகின்றது. இந்த கருவியை பராமரிக்க சிறப்பு பயிற்சி பெற்ற "பயோமெக்கானிக்கல்' பொறியாளர்களின் தயவு தேவைப்படுகிறது.

வேலைவாய்ப்பு
"ரோபாடிக் சர்ஜரி' படித்தவர்களுக்கு வேலை அவர்களை தேடி வரும். இவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வேண்டுமானாலும் வழங்க எய்ம்ஸ் உள்ளிட்ட முன்னணி மருத்துவமனை நிர்வாகங்கள் தயாராக உள்ளன. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதிக ஊதியத்துடன் எளிதாக வேலை கிடைக்கும். இந்தியாவில் குறைந்தளவு ரோபாடிக் சர்ஜன்களே உள்ளதால் இவர்களுக்கு இங்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

கல்வி நிறுவனங்கள்
"என்டியூராலாஜிக்கல் சொசைட்டி', "சொசைட்டி ஆப் யூராலஜிக் ஆன்க்காலஜி' ஆகிய இரு அமைப்புகளே ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள இப்படிப்புகளுக்கு அங்கீகாரத்தை வழங்குகின்றன. இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் ரோபாடிக் சர்ஜரி கற்பிக்கப்படவில்லை.

ஆனால் அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவை முதுநிலை ஆராய்ச்சி படிப்புகளாக கற்பிக்கப்படுகின்றது. இதனை படிக்க வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இப்படிப்புக்கு உள்ள வரவேற்பையடுத்து, இந்தியாவிலும் இப்படிப்பு விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us