தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆசிரியர்களை அதிகரிப்பதே வளர்ச்சிக்கு வழி: சூப்பர் 30 நிறுவனர்

ஆசிரியர்களை அதிகரிப்பதே வளர்ச்சிக்கு வழி: சூப்பர் 30 நிறுவனர்

ஆசிரியர்களை அதிகரிப்பதே வளர்ச்சிக்கு வழி: சூப்பர் 30 நிறுவனர்


ஜன 25, 2011 12:00 AM

ஜன 25, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 25, 2011 12:00 AM ஜன 25, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்படும் "சூப்பர்  30' என்னும் பயிற்சி நிறுவனம் ஆண்டு தோறும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள 30 மாணவர்களுக்கு உணவு, உறைவிடம் உட்பட அடிப்படை வசதிகளைத் தந்து சிறப்பான இலவசப் பயிற்சியையும் தந்து எண்ணற்ற மாணவர்களை இந்தியாவிலேயே கடுமையான ஜே.இ.இ., எனப்படும் ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் வெற்றி பெறச் செய்வதைப் பற்றி கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளிவருகின்றன.

கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்கான அவசியத் தேவையாக ஆசிரியர்களை அதிகரிப்பதைக் கூறியுள்ளார். உலகெங்கும் அவரது கருத்துக்கள் பரவலாக பல கல்வி நிறுவனங்களில் விவாதிக்கப்படுகின்றன.

மத்திய அரசின் கல்வி தொடர்புடைய முயற்சிகளும் சூப்பர் 30ன் மாதிரி யிலான அடிப்படைகளைக் கொண்டிருந்தால் ஏழை மாணவர்கள் பயனடைவர் என்றும் ஆனந்த் கருத்துக் கூறியுள்ளார். நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கும் ஆனந்த் கொண்டுள்ள சில கருத்துக்கள்.

* தனிநபராக நடத்தமல் மத்திய அரசினால் நடத்தப்படும் போது இது மாதிரியான பயிற்சி சென்றடையும் வீச்சும் உபயோகமும் பரந்துபட்டவையாக இருக்கும். ஐ.ஐ.டி., யின் ஜே.இ.இ., தேர்வை மையப்படுத்திய இந்தியாவின் உயர்நிலைப் பள்ளி அமைப்பில் செய்ய வேண்டிய சில எளிய வழிமுறைகள் குறித்து அவரது பிற கருத்துக்கள்....

* பள்ளிகளில் தரம் வாய்ந்த மாணவர்கள், சராசரி மாணவர்கள் என்ற நிலையைப் பொறுத்து தனித்தனியாக 2 பாடமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலமாக தரம் வாய்ந்த மாணவர்கள் ஆரம்ப நிலையிலேயே பாடங்கள் குறித்த
விரிவான சிந்தனைகளைப் பெறும் வாய்ப்பு உருவாகும்.

* கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள கல்வி வேறுபாடு நிலையை கருத்தில் கொண்டு ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வுகளில் ஏழை மாணவர்களுக்கு 3 தடவை விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

* இத் தேர்வில் சமீபத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் கணக்குப் பகுதியில் பக்கம் பக்கமாக வியைடளிக்க
வேண்டியிருப்பதால் கிராமப் புற மாணவர்களுக்கு அது மிகவும் கடினமாக உள்ளது. எனவே இவை பிளஸ் 2 தரத்தில் இருக்குமாறு
கேட்கப்படலாம்.

* இத் தேர்வு முடிவு வெளியிடப்படும் போது இ.எம்.எல்., என்னும் அடிப்படையில் முதல் 50 ஆயிரம் மாணவர்களின் பட்டியலும் வெளியிடப்படுகிறது. இதைத் தவறாக பயன்படுத்தும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. எனவே இந்த பட்டியலை தேர்வு முடிவு வெளியான சில நாட்களுக்குப் பின்பே வெளியிட வேண்டும்.

* விடைத்தாளை எச்.பி., பென்சிலால் குறியிடுவதைவிட்டு கறுப்புப் பேனாவால் குறியிடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த சூப்பர் 30 நிறுவனம் வழியாக இதுவரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சியான ஆனால் ஆச்சரிய மூட்டும் தகவலாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us