பிப் 23, 2011 12:00 AM
பிப் 23, 2011 12:00 AM
சமீப காலமாக கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் தங்களுடைய சொந்த பிரச்னைகளுக்காக தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. விடுதி மற்றும் வீட்டில் இருந்து படிப்பவர்கள் இரு பிரிவினரும் இதில் அடங்குவர்.
இதற்கு ஆசிரியர்கள் அவமரியாதை, நண்பர்களின் கிண்டல், காதல் தோல்வி, படிப்பு கடினம், ராக்கிங் என பல்வேறு காரணங்களை அவர்கள் சொல்கின்றனர். இருந்தாலும் இந்த தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் மாணவிகளிடம் வாழ்க்கையை எதிர்கொள்ளத்தக்க போதிய தன்னம்பிக்கை இல்லாதது தான்.
தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம் உள்ளிட்ட இவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு கவுன்சிலிங் மிக மிக அவசியம். தமிழகத்தில் ஒரு சில கல்லூரிகளில் தான் முழுநேர "கவுன்சிலர்ஸ்' உள்ளனர். பெரும்பாலான கல்லூரிகள் இதனை நடைமுறைப் படுத்துவதில்லை. குறைந்தது பகுதிநேர கவுன்சிலிங்காவது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவேண்டும். இதனால் தற்கொலை முயற்சிகளை தடுக்க முடியும். இதன் மூலம் விலைமதிப்பற்ற மாணவர்களின் உயிர்களையும், அவர்களது எதிர்கால வாழ்க்கையையும் பாதுகாக்கலாம்.
