தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வானியல் படிப்பு

வானியல் படிப்பு

வானியல் படிப்பு


மார் 01, 2011 12:00 AM

மார் 01, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 01, 2011 12:00 AM மார் 01, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வானியல் துறை படிப்புகள் அதிசயம், ஆச்சரியம் மிக்கவை. இதில் நாளுக்கு நாள் புதுப்புது விஷயங்கள் கண்டுபிடிக்கப்படுவதால் ஆர்வத்துடன் இந்த துறை படிப்புகளை பயில முடியும். இது பழமையான அறிவியல். இந்த துறை படிப்புகளில் கோள்கள், அதில் உள்ள பொருட்கள், செயல்பாடுகள், தோற்றங்கள் ஆகியவை கற்றுத்தரப்படுகிறது.

இந்த துறை பணிகள் ஆராய்ச்சியை மையமாக கொண்டதால் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக தனிப்பட்ட ஆர்வம், முயற்சி இருந்தால் வானியலில் முத்திரை பதிக்கலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவுடன், வானியல்துறையில் ஆர்வமிருப்பவர்கள் இளநிலை வானியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இந்த துறையில் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள், இளநிலை, முதுநிலை, பிஎச்.டி., படிப்புகள் ஆகியவை உள்ளன. பொதுவாக இந்தியாவில் உள்ள முக்கிய பல்கலைக்
கழகங்கள் அனைத்திலும் வானியல் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

வானியல் துறையில்
இந்தியா, வெளிநாடுகளில் ஏராளமான பணிவாய்ப்புகள் உள்ளன. ஆரம்ப நிலையில் ரூபாய் 10 ஆயிரம் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது. பின்னர் திறமை, அனுபவத்துக்கு ஏற்ப ஊதியம் பல மடங்கு உயரும். விண்வெளியில் இயற்கையின் தன்மையை ஆராய்வதால் ஆர்வத்துடன் இத்துறையில் பணியாற்றலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us