தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உதவித் தொகை

ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உதவித் தொகை

ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உதவித் தொகை


மார் 14, 2011 12:00 AM

மார் 14, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 14, 2011 12:00 AM மார் 14, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

யு.கே.யில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பிஎச்.டி. படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அங்கு அனுமதிக் கிடைத்தாலே அது மகிழ்ச்சியானதுதான். அதிலும் சுமார் 45 லட்ச ரூபாய் உதவித் தொகையும் கிடைத்தால் சொல்லவா வேண்டும்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் போஸ்ட் டாக்டோரல் எனப்படும் பிஎச்.டி. படிக்கும் 8 மாணவர்களுக்கு ஆந்த்ரு மெல்லன் அறக்கட்டளை சார்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

உதவித் தொகை எதற்கு

பொதுவாக பிஎச்.டி. படிக்கும் மாணவர்கள் இறுதி ஆண்டில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். இதனால் அவர்களது ஆராய்ச்சிக்கு பணிச்சுமை அழுத்தத்தைக் கொடுக்கும். ஆராய்ச்சி மாணவர்கள் பணிச்சுமையின்றி தங்களது கவனத்தை ஆராய்ச்சியில் செலுத்துவதற்காக இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தகுதி என்ன

பிஎச்.டி. கல்வியில் நீங்கள் புதிதாக சேர்ந்திருக்கும் நபராக இருப்பின் இந்த உதவித் தொகையைப் பெற தகுதியானவர். பெண்கள் மற்றும் பின்தந்திய வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை

உதவித் தொகை பெறும் மாணவர்களை தேர்ந்தெடுக்க குழு ஒன்று அமைக்கப்படும். அந்த குழுவினரிடம், பிஎச்.டி.யில் சேர்ந்திருப்பவர்கள் தங்களது ஆராய்ச்சி குறித்து அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஆராய்ச்சியின் அடிப்படை, முக்கியத்துவம் போன்றவற்றைக் கொண்டு உதவித் தொகை பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பங்கள்

உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை மார்ச் 23ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு மேலும் விவரங்கள் அறிய  என்ற இணைய முகவரிகளில் காணலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us