தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ட்ரை-வேலி பொறியில் சிக்கிய மாணவர்கள்

ட்ரை-வேலி பொறியில் சிக்கிய மாணவர்கள்

ட்ரை-வேலி பொறியில் சிக்கிய மாணவர்கள்


மார் 12, 2011 12:00 AM

மார் 12, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 12, 2011 12:00 AM மார் 12, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கலிபோர்னியாவில் உள்ள ட்ரை-வேலி பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களின் நிலை பொறியில் சிக்கிய எலியின் நிலையானது.

வெளிநாட்டுக் கல்வியைப் பயில அமெரிக்காவில் உள்ள ட்ரை-வேலி பல்கலைக் கழகத்தை தேர்வு செய்ய பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது குறைந்த கட்டணம். இதனைப் பயன்படுத்தி பல்கலைக்கழக நிர்வாகம், விசா நடைமுறையில் பல்வேறு குளறுபடிகளைச் செய்து சட்டத்திற்கு விரோதமாக ஏராளமான வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொண்டது.

இந்த பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களில் அதிகப்படியானவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டது என்னவோ பல்கலைக்கழக நிர்வாகம். ஆனால் குற்றவாளிகளாக்கப்பட்டது நம் நாட்டு மாணவர்கள்தான்.

ட்ரை-வேலி பல்கலைக்கழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதிலாக மாணவர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்தது. இறுதியாக, இந்திய மாணவர்களின் காலில் கண்காணிப்புக் கருவியை அமெரிக்க புலனாய்வுக் கழகம் மாட்டிவிட்டதுதான் அதிக எதிர்ப்பைக் கிளப்பியது.

சில மாணவர்களுக்கு, வேறு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை கிடைத்தது. பெரும்பாலான மாணவர்கள் வலுக்கட்டாயமாக அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.

உண்மையில் நடந்தது என்ன? பல்கலைக் கழகம் செய்த அத்துமீறல்கள் என்ன? மாணவர்கள் இதில் குற்றவாளிகளாக்கப்பட்டது சரியா என்பது குறித்து அனைவரது பார்வையும் கேள்வியெழுப்புகிறது.

அமெரிக்காவில் உயர்கல்வி படிக்கும் ஆர்வத்துடன் வரும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்துடன் கல்வி வழங்குகிறோம் என்ற விளம்பரத்துடன் வரவேற்றது ட்ரை-வேலி பல்கலைக்கழகம்.

ட்ரை-வேலி பல்கலைக்கழகம் விசா நடைமுறைகளில் பல சட்டவிரோத செயல்களை செய்து, ஏராளமான வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொண்டது. இந்த சட்டவிரோத நடவடிக்கை வெளியானதன் மூலம் ட்ரை-வேலி பல்கலைக்கழகத்தின் உண்மைத்தன்மை வெட்டவெளிச்சமாகிவிட்டதல்லவா?

இதனால் லாபம் அடைந்தது யார், குறைந்த கல்விக் கட்டணத்தில் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவர்களா? அல்லது ஏராளமான மாணவர்களை சேர்த்து அதனால் அதிக கட்டணம் பெற்ற பல்கலைக்கழகமா?

நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளது அப்பாவி மாணவர்கள்தானே? குற்றவாளிகளான பல்கலைக்கழக நிர்வாகிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

பொதுவாக, அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள், அவர்கள் படிக்கும் படிப்பு முடிந்ததும், அமெரிக்காவில் தங்க தகுதியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். எனவே, தாங்கள் பயிலும் படிப்பு முடிந்ததும், வெளிநாட்டு மாணவர்கள் என்ற தகுதியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, சிலர் வேறு பள்ளி அல்லது கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுவிடுகின்றனர்.

இதிலும் ட்ரை-வேலி பல்கலைக்கழகம் சட்ட விரோதமாக மாணவர்களை சேர்த்துக் கொண்டுள்ளது.

தற்போது படிப்பும் இல்லாமல், வழக்கிலும் சிக்கிக் கொண்டு எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ள மாணவர்கள் பலரும் என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பியுள்ளனர்.

அவர்கள் வைத்துள்ள ஐ-20 விசா முறையை நீட்டிக்க என்ன செய்யலாம் என்று சில நிபுணர்களிடம் கேட்டதற்கு, அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் பலரும், அவர்களது தாயகத்திற்கு திரும்பி, சூழ்நிலை சரியானதும் மீண்டும் வேறு விசா முறையில் அமெரிக்கா வர விரும்புகின்றனர். அதற்கு காரணம், அமெரிக்காவில் இருக்க தேவைப்படும் பணம், ஸ்டூடன்ட் விசாவை மாற்றுவதற்குத் தேவையான பணம் மற்றும் விசா கிடைக்கும் என்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மை ஆகியவைதான்.

ஆனால் இந்த முடிவு சரியானதும் அல்ல, இதனை நாங்கள் பரிந்துரைக்கவும் மாட்டோம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எந்த மாணவர் ஐ-20 விசாவில் உள்ளாரோ அவர் உடனடியாக ஐ-539 விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு என்.டி.ஏ. எனப்படும் நேரில் ஆஜராகும் நோட்டீஸ் மாணவர்களுக்கு கிடைத்தாலும் அதற்குள் ஐ-539 பதிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு உதவக் கூடும்.

மாணவர்கள் உடனடியாக கிளம்பி நாட்டிற்குச் சென்று மீண்டும் நுழைவதற்கான புதிய ஐ-20 விசா கிடைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஹோம்லேன்ட் செக்யூரிட்டி துறையில் ட்ரை-வேலி பல்கலைக்கழகம் சமர்ப்பித்த விசா தொடர்பான கோப்புகளும், மற்ற அனைத்து கோப்புகளுமே போலியானவை என்று தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற சிக்கல் மீண்டும் எழாமல் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us