மார் 10, 2011 12:00 AM
மார் 10, 2011 12:00 AM
"நரோடம் சாரியா பவுண்டேஷன்' அமைப்பு இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு அதிகபட்சமாக 10 லட்ச ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெற 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்திய மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதனை பெற வரும் மார்ச் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.nsscholarship.net
சிங்கப்பூர் கல்வி சில தகவல்கள்
பன்முகக் கலாசாரம் கொண்ட சிங்கப்பூர் பற்றி நாம் பேசுவது அதன் வளமான பொருளாதாரத்திற்காகவும் வேலை மற்றும் சுற்றுலா பற்றிய தகவல்களுக்காகவும் தான் அல்லவா? ஆனால் மிகச் சிறந்த கல்வியைத் தரும் நாடாக விளங்குவது பற்றி பொதுவாக செய்திகள் இல்லை. சிங்கப்பூர் தரமான உயர் கல்வியைத் தரும் பல கல்வி நிறுவனங்களை கொண்டுள்ளது. உலகத் தரத்திலான கல்வியுடன் மேலை நாடுகளில் தரப்படும் கல்வி தவிர்த்த பிற திறன்களும் சிங்கப்பூர் கல்வியின் முக்கியமான அம்சமாக விளங்குகிறது.
அந்த நாட்டில் 4 அரசு உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு இன்ஜினியரிங் தவிர பயோமெடிக்கல் போன்ற நவீன துறைகளிலும் படிப்புகள் தரப்படுகின்றன. இந்த நாட்டின் பல உயர் கல்வி நிறுவனங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சிறப்பான பல்கலைக்கழகங்களுடன் உடன்படிக்கை கொண்டுள்ளன.
என்.யு.எஸ்., எனப்படும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கல்வி, ஆய்வு மற்றும் களப்பணிகளுடன் கூடிய படிப்புகளை நடத்துகிறது. என்.டி.யு., எனப்படும் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அறிவியல், இன்ஜினியரிங், வணிகம், கலை போன்ற பல பிரிவுகளில் சிறப்புப் படிப்புகளை நடத்துகிறது. எஸ்.யு.டி.டி., எனப்படும் சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்புப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மசாசூட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிறப்புப் படிப்புகளை விரைவில் தரவுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகங்களின் எம்.பி.ஏ., படிப்புகளுக்கு உலக அளவில் கடுமையான போட்டி உள்ளது. சிம் எனப்படும் சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தும் மேலாண்மைப் படிப்புகள் உலகப் போட்டியை உள்ளடக்கியுள்ளன. இதுதவிர சிங்கப்பூரின் சுற்றுலா மேலாண்மை படிப்புகளை நடத்தும் பல சிறப்பு கல்வி நிறுவனங்களும் உள்ளன.
தெரியாத மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களை விட நமக்கு அண்மையில் உள்ள சிங்கப்பூரின் சிறப்புக் கல்வி நிறுவனங்களின் படிப்புகளை அறிந்து சேரும் போது நமது மாணவர்களுக்குத் தரமான கல்வியுடன் பொருளாதார ரீதியாகவும் செலவு குறைகிறது என்பதே உண்மை.
