தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வெளிநாட்டில் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு

வெளிநாட்டில் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு

வெளிநாட்டில் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு


மார் 07, 2011 12:00 AM

மார் 07, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 07, 2011 12:00 AM மார் 07, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய கல்வி முறைக்கும், வெளிநாட்டு கல்வி முறைக்கும் அதிகபட்ச வித்தியாசங்கள் உள்ளன. நீங்கள் வெளிநாடு சென்று படிக்க விரும்பினால் முதலில் அந்த நாட்டின் கல்வி முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அயல்நாட்டு கல்வி நிலையங்களில் வெறும் பாடங்கள் மட்டுமே கல்வி அல்ல. குழு கலந்துரையாடல், செய்முறை, கட்டுரைகள் எழுதுதல், ப்ராஜக்ட் வேலைகள் என தொடர்ந்து மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் முறைகளைக் கொண்டதாக அமைகிறது.

இந்திய மாணவர்கள் பெரும்பாலும் இந்த முறைகளை எளிதில் பழக்கிக் கொள்கிறார்கள் என்பது பொதுவான கருத்தாகும். வெறும் படிப்பு மட்டுமல்லாமல், இதர நடவடிக்கைகளுக்கும் இங்கு மதிப்பளிக்கப்படுகிறது. வெறும் பாடப்புத்தகத்தை  வைத்துக் கொண்டு இல்லாமல், ஒரு ஆல் ரவுண்டராக மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே இங்குள்ள பல்கலைக்கழகங்களின் லட்சியமாகும்.

நீங்கள் செல்ல விரும்பும் நாட்டின் கல்வி முறை, மொழி, உணவுப் பழக்க வழக்கம், வாழ்க்கை முறை போன்றவை நாளடைவில் உங்களால் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்க வேண்டும்.

வெளிநாடு சென்று பயிலும் போது சில பிரச்சினைகளும், பல நல்ல விஷயங்களும் நடக்கும். எதுவாக இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் மனத்துணிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வெளிநாடு செல்லும் மாணவர்களை புதிய கலாச்சாரம், பெற்றவர்களைப் பிரிந்த சோகம், புதிய கல்வி முறை, புரியாத மொழி போன்ற பிரச்சினைகள் ஒரே சமயத்தில் தொற்றிக் கொள்ளும். ஆனால் இவை அனைத்துமே நாளடைவில் உங்களுக்கு பழகிவிடும் என்ற நம்பிக்கை வேண்டும்.

செலவுகளை திட்டமிடல், குழுவாக தங்குதல், அந்நாட்டு மொழியை கற்றுக் கொள்ளுதல், உங்களது வேலைகளை நீங்களே செய்த கொள்வது போன்றவை உங்கள் புதிய வாழ்க்கையை எளிதாக்கும்.

இந்திய மாணவர்கள் சுறுசுறுப்பு, கடின உழைப்பு, ஆர்வம், பிற மொழிகளை எளிதாக பேசுதல், மற்றவர்களுடன் பழகுதல் போன்றவற்றிலும் முதன்மையானவர்களாக உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டிற்கு சென்று படிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் உடனடியாக அதற்கான வேலைகளில் இறங்குங்கள். ஏனெனில் இந்த கனவு நனவாக சில காலம் பிடிக்கும். உங்கள் பண வசதி, படிக்க விரும்பு நாடு, பல்கலைக்கழகம், பாடப்பிரிவு அனைத்தும் பற்றி தெளிவான முடிவினை எடுப்பதும் நல்லது.

முக்கியமாக இவை அனைத்திற்கும் உங்கள் கல்வித் தகுதிதான் அடிப்படையாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us