தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இலக்கை எளியமுறையில் அடைய....

இலக்கை எளியமுறையில் அடைய....

இலக்கை எளியமுறையில் அடைய....


ஏப் 05, 2011 12:00 AM

ஏப் 05, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 05, 2011 12:00 AM ஏப் 05, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இலக்கு என்ற ஒரு வார்த்தை ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு அர்த்தத்தை கொடுக்கிறது. சிலருக்கு அது சாதாரண வேலையை நிறைவேற்றுவதாகவும் இருக்கலாம். சிலருக்கு அது பெரிய சாதனையை செய்து முடிப்பதாகவும் இருக்கலாம். ஒவ்வொரு மாணவரின் நம்பிக்கை மற்றும் திறனைப் பொறுத்து இலக்கு வேறுபடுகிறது. இலக்கே இல்லாத ஒரு வாழ்க்கை வெறுமையாகவே இருக்கும். உலகில் இலக்கில்லாத மனிதர்களே இல்லை எனலாம். இலக்கே, வாழ்க்கையை வாழ்வதற்கான தூண்டுகோலாக இருக்கிறது.

இலக்கை முயற்சிசெய்து அடைந்தவர்களும் உண்டு. அதை கனவிலேயே நிறைவேற்றி வாழ்ந்து சென்றவர்களும் உண்டு. செயல்பாட்டிற்கு வராதவரை இலக்கு என்பதற்கு மரியாதை இல்லை. ஒவ்வொரு மாணவருக்குமே இலக்கை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்ற தீராத ஆர்வம் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சதவிகித மாணவர்கள் மட்டுமே அதற்கான சரியான வழியில் தொடர்ந்து செல்வார்கள். பலர் முயற்சி செய்யாமலேயே இருந்து விடுவார்கள். நிலைமை இப்படி இருக்கையில், வாழ்வில் ஒரு இலக்கை நிர்ணயித்து, அதை உண்மையாக அடையத் துடிக்கும் மாணவர்களுக்கு இங்கே பல மதிப்பு வாய்ந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். இதைப் படித்து பயன் பெறவும்.

இலக்கை நிர்ணயித்தல்:

இலக்கை நிர்ணயிப்பது என்பது மிக முக்கியமான விஷயம். உங்களால் நிறைவேற்ற முடியக்கூடிய சாத்தியமான ஒன்றை உங்களின் இலக்காக தேர்ந்தெடுத்தல் நலம். உங்களின் சக்திக்கும், நடைமுறைக்கும் வெகுதூரம் என்று தோன்றும் விஷயத்தை இலக்காக நிர்ணயிப்பதை தவிர்ப்பதே சிறந்தது. மேலும் உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பல இலக்குகள் இருந்தால், அவற்றை வரிசைப்படுத்தி எழுதி வைப்பது நன்று. அப்போதுதான் முதன்மையானவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியும்.

இலக்கை நிறைவேற்றுவதற்கான வியூகங்களை வகுத்தல்:

இலக்கை நிர்ணயித்தவுடன், அதை அடைவதற்கான திட்டங்களையும், வியூகங்களையும் வகுக்க தொடங்க வேண்டும். உதாரணமாக, தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தால், அதற்கான படிக்கும் நேரத்தை அதிகரிப்பது பற்றி திட்டமிட வேண்டும். தேர்வுக்கு இத்தனை மணிக்குள் செல்ல வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்தால், எப்போது புறப்பட வேண்டும், பயணத்தை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி தீர்மானிக்க வேண்டும். வழிமுறையை ஆராயாமல் நினைத்ததை அடைய முடியாது.

செயல்படத் தொடங்குதல்:

இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை நிர்ணயித்தப் பின்னர், காலத்தை வீணாக்காமல் செயல்படத் துவங்க வேண்டும். செயல்பட தாமதிப்பதானது, இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படுத்தும். இடைவிடாமல், தளராமல், தயங்காமல் நீங்கள் வகுத்த வழிமுறையில் செயல்படத் தொடங்கினால், நீங்கள் விரும்பியது தொடும் தூரத்திலேயே இருக்கும்.

தன்னம்பிக்கை:

இலக்கை நிர்ணயித்தல் மற்றும் திட்டமிடுதல் ஆகிய அம்சங்களோடு சேர்த்து, தன்னம்பிக்கை என்ற மற்றொரு முக்கிய அம்சம் இலக்கை அடைவதில் இருக்க வேண்டும். ஏனெனில் அனைத்தும் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும். ஒரு விஷயத்தை செய்ய முடியும் என்று முதலில் நமக்குள் நாம் உறுதிபெற வேண்டும். அந்த நம்பிக்கைதான் அனைத்திற்கும் தொடக்கமாகவும், உந்து சக்தியாகவும் இருக்கிறது. இலக்கை அடைந்த அனைவருமே தங்களின் மீது சுய நம்பிக்கை வைத்தவர்கள்தான் என்பதை மறந்துவிடலாகாது.

மதிப்பீடு:

இலக்கை நோக்கிய முயற்சியில் நீங்கள் எவ்வளவு தூரம் சாதித்துள்ளீர்கள் என்பதை குறிப்பிட்ட இடைவெளிகளில் மதிப்பீடு செய்ய வேண்டும். திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் கவலையில்லை. ஆனால் தேக்கம் இருந்தால், பிரச்சினை எங்கே என்று ஆராய்ந்து அதை சரிசெய்ய முயல வேண்டும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் உதவிகளையும் கேட்கலாம். தொடர் மதிப்பீடு செய்வதே, நாம் விழிப்புணர்வாக இருக்க உதவும்.

உற்சாகமாய் இருத்தல்:

இலக்கை அடைவதற்கான பயணத்தில் உற்சாகம் என்பது மிகவும் முக்கியம். அதை எப்போதும் தக்கவைத்துக்கொள்ளும் விதத்தில், அது சம்பந்தமான புத்தகங்களையோ, சி.டி. -களையோ வாங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உற்சாகம் குறையாமல் இருப்பதானது, இலக்கை விரைந்து அடைய உதவும்.

 

 

 

 

 

 

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us