தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/உயருகிறது கட்-ஆப் மார்க்

உயருகிறது கட்-ஆப் மார்க்

உயருகிறது கட்-ஆப் மார்க்


மே 10, 2011 12:00 AM

மே 10, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 10, 2011 12:00 AM மே 10, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த ஆண்டு முக்கிய பாடங்களில் 200/200 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் கட்-ஆப் மார்க் உயர வாய்ப்பு உள்ளது. .5 முதல் 1 வரை கட்-ஆப் உயரும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறியதாவது: "கடந்த ஆண்டு 197-கட் ஆப் மார்க் பெற்றவர்கள் இந்த முறை 197.5 பெற வேண்டும். 190 கட்-ஆப் மார்க் பெற்றவர்கள் 191 கட்-ஆப் பெற வேண்டும். 2 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக வைக்கப்பட்டுள்ளன. 62 மையங்களில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். போலி மதிப்பெண் சான்றிதழ்களை கண்டுபிடிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தேர்வு முடிவுகள் வெளியானதும், மதிப்பெண் என்ன என்ற கேள்வியை விட, கட்-ஆப் மார்க் என்ன என்ற கேள்விதான் அதிகமாக கேட்கப்படும்.

இதற்குக் காரணம், மருத்துவம் மற்றும் பொறியியல் பயில விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்திருப்பதே ஆகும்.

பொறியியல் மற்றும் மருத்துவத் துறையில் கல்வி பயில வேண்டும் என்றால் கட்-ஆப் மதிப்பெண் மிகவும் முக்கியம். ஒரு மார்க் குறைந்தாலும் 100 பேரைத் தாண்டி நீங்கள் இருப்பீர்கள் என்பதில் இருந்து கட்-ஆப் மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விவசாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட் தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் மாணவர்களது உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் கட்-ஆப் மார்க்கிற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் கட்-ஆப் மார்க்கிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

பொதுவாக ஆண்டு தோறும், இந்த முக்கியப் பாடங்களில் 200/200 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படும்.

இந்த ஆண்டு உயிரியல் பாடத்தில் 615 பேரும், கணிதத்தில் 2,720 பேரும், இயற்பியலில் 646 பேரும், வேதியியலில் 1,43 பேரும் 200/200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் 200/200 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண் 1 மார்க் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்-ஆப் கணக்கீடு
மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள், அவர்களது உயிரியல் அல்லது தாவரவியல் அல்லது விலங்கியல் மதிப்பெண்ணை 2 ஆல் வகுத்துக் கொள்ள வேண்டும். இயற்பியலிலும், வேதியியலிலும் எடுத்த மதிப்பெண்களைக் கூட்டி அதை 4 ஆல் வகுக்க வேண்டும்.

இப்போது வகுத்து வந்த மதிப்பெண்களைக் கூட்டினால் வருவதுதான் உங்களது கட்-ஆப் மதிப்பெண்ணாகும்.

இதேப்போல, பொறியியல் படிப்பில் சேருவதற்கு, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் தேவை.

கணிதத்தில் எடுத்த மதிப்பெண்ணை 2ஆல் வகுத்துக் கொள்ளவும். இயற்பியல், வேதியியல் மதிப்பெண்களைக் கூட்டி அதை 4ஆல் வகுக்கவும். வகுத்து வரும் மதிப்பெண்களைக் கூட்டினால் அதுதான் கட்-ஆப் மார்க்காகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us