மே 13, 2011 12:00 AM
மே 13, 2011 12:00 AM
பள்ளிப் படிப்பிற்கே பல ஆயிரங்களை செலவழித்து படிக்க வைக்க வேண்டிய சூழ்நிலையில், உயர் கல்விக்கு ஆகும் செலவைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியுமா?
தற்போது உயர் கல்விக்கு வங்கிகள் கடன் வழங்குவதாலும், பல்வேறு உதவித் தொகைகள் கிடைப்பதாலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2011-12ம் கல்வி ஆண்டில், உயர்கல்வி படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
குறிப்பாக, மகாராஷ்டிரா அரசு, மாநில அரசு மற்றும் அரசின் நிதியுதவியுடன் செயல்படும் மருத்துவக் கல்லூரிக் கட்டணங்களை மூன்று மடங்கு உயர்த்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ரூ.18,000 ஆக இருந்த கல்விக் கட்டணம் தற்போது ரூ.45,000 ஆக உயர்ந்துள்ளது.
அதேப்போல, ஐ.ஐ.எம்.-சி.யில் ஒரு சேர்க்கையைப் பெறும் மாணவர் செலுத்தும் தொகை 7 லட்சத்தில் இருந்து 9 லட்சமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில், முதுநிலை பட்டப்படிப்பு படிக்க 6 முதல் 10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. லயோலா கல்லூரியில் ஒவ்வொரு செமஸ்டருக்கும் 6,000மும், பிரசிடென்சி கல்லூரியில் ஓராண்டுக்கு 10,000 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடும்.
எம்.பி.ஏ. பயில விரும்பும் மாணவர் ஒருவர் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் என்று எடுத்துக் கொண்டால், ஹைதராபாத்தில் உள்ள ஐ.எஸ்.பி.யில் 19,30,000 கட்ட வேண்டும்.
இதேப் படிப்பிற்கு அகமதாபாத் ஐ.ஐ.எம்.மில் 13,70,000மும், மும்பையில் உள்ள எஸ்.ஜே.எம்.எஸ்.ஓ.எம்.ல் 8,86,000ம் ரூபாயும், புனேயில் உள்ள சிம்பியாசிஸில் 8,76,000மும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 1,40,000மும் வசூலிக்கப்படுகிறது.
பி.டெக் பயில விரும்பும் மாணவர், என்சிஆரில் உள்ள என்.ஐ.ஐ.டி. பல்கலையில் சேர்ந்தால் 8,80,000 ரூபாயை கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதேப் படிப்பிற்கு மணிப்பாலில் உள் மணிப்பால் பல்கலையில் 7,30,000 ரூபாயும், பிட்ஸ், பிலானியில் 5,00,000மும், டெல்லியில் ஐபி பல்கலையில் 1,72,000மும், சென்னை ஐ.ஐ.டி.யில் 1,24,000 மும் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். பாடப்பிரிவிற்கு, மணிப்பாலில் உள்ள கஸ்தூர்பா மெடிக்கல் கல்லூரியில் 25,12,000 ரூபாயும், ஹைதராபாத் கிருஷ்ணா ஐ.எம்.எஸ்.யுவில் 19,75,000 ரூபாயும், பெல்காமில் உள்ள கே.எல்.இ. பல்கலையில் 15,00,000 லட்சமும், வேலூர் சி.எம்.சி.யில் 1,20,000மும், டெல்லி எம் ஆசாத் கல்லூரியில் 21,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சட்டப் படிப்பும் தற்போது அதிக கட்டணம் வசூலிக்கும் படிப்பாகிவிட்டது. என்.சி.ஆரில் உள்ள ஜின்டால் லா பள்ளியில் சட்டம் பயில 25,50,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அமிதி பல்கலையில் இதற்கு 8,80,000மும், பெங்களூர் என்.எல்.எஸ்.ஐ.யு. 8,50,000மும், என்.எல்.யு. போபாலில் 5,75,000மும், புனே ஐ.எல்.எஸ். சட்ட கல்லூரியில் 70,000மும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் 12,00,000 முதல் 1,80,000 வரை கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டி வரும். இது மாணவர்கள் தேர்வு செய்யும் கல்வி நிலையத்தைப் பொறுத்ததாகும்.
இதுபோன்ற உயர் கல்வியைக் கற்கும் மாணவர்கள், கல்விக் கட்டணத்தில் பெரும் தொகையை சுயமாக செலுத்த வேண்டி வரும். கல்விக் கடன், உதவித் தொகை, மாநில அரசின் உதவி என பல்வேறு உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் மாணவர்களது சுமை வெகுவாகக் குறையலாம்.
