தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/விடுமுறை கூட வாழ்க்கையை மாற்றலாம்

விடுமுறை கூட வாழ்க்கையை மாற்றலாம்

விடுமுறை கூட வாழ்க்கையை மாற்றலாம்


மே 17, 2011 12:00 AM

மே 17, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 17, 2011 12:00 AM மே 17, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

படிப்பது என்றாலே சற்று கடினமானதாகவும், தேர்வை நோக்கியதாகவும் இல்லாமல், உங்களுக்குப் பிடித்தமானதாகவும், ஜாலியாகவும் இருந்தால் அதை ஏன் தவிர்க்க வேண்டும்.

ஆம், இந்த விடுமுறை வகுப்புகளைப் பற்றித்தான் கூறுகிறோம். விடுமுறையில் உங்களுக்குப் பிடித்த, அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்ட துறையில்  அல்லது ஏதேனும் ஒரு புதிய துறையில் பயிற்சி எடுப்பது நல்ல அனுபவமாகவே அமையும்.

நீங்கள் 10ம் வகுப்பு மாணவராக இருக்கலாம், உங்களுக்கு அறிவியலிலோ அல்லது கணினி தொடர்பான படிப்புகளிலோ ஆர்வம் இருக்கிறது என்றால், அது சம்பந்தப்பட்ட படிப்பினை கோடை கால பயிற்சியாக எடுத்துப் படிக்கும் போது, 11ம் வகுப்பில் எந்த பாடத்தை முதன்மை பாடமாக தேர்வு செய்வது என்பதை நீங்கள் எளிதாக தீர்மானிக்க முடியும்.

அதேப்போல, உயர் படிப்பு மாணவராக இருப்பின், உங்கள் பாடத்திற்கு உதவக் கூடிய, அதனுடன் தொடர்புடைய ஏதேனும் ஒரு பயிற்சியை நீங்கள் பெறுவதால், உங்கள் வகுப்பு மாணவர்களில் இருந்து நீங்கள் ஒரு படி உயர்ந்திருப்பதாக உணர்வீர்கள்.

மொழிப்பயிற்சி
வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவராக இருப்பின், அந்த நாட்டு மொழியை விடுமுறையில் பயிலலாம். நல்ல குரல் வளம் கொண்டு, செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்று கனவு இருந்தால், ரேடியோ ஜாக்கிகளுக்காக நடத்தப்படும் பயிற்சிகளில் பங்கேற்கலாம். ஆங்கில ப்ளூயன்ஸி சரியாக இல்லாதவர்கள், ஸ்பீக்கிங் இங்கிலீஷ் பயிலலாம்.

சுய மேம்பாட்டுப் பயிற்சி
ஆசிரியராகவோ, மேலாண்மை படிப்புகளையோ படிக்க விரும்பும் மாணவர்கள், அல்லது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், சுய மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை தேர்வு செய்யலாம். எவ்வாறு பேசுவது, பிரச்சினையை கையாளும் விதம், நடை, உடை என எல்லாவற்றையும் கற்றுத் தர சுய மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் உதவுகின்றன.

கணினி பயிற்சி
கணினியே அறிமுகம் இல்லாத மாணவர்கள், கணினியின் அடிப்படைக் கல்வியை கற்கலாம். எம்எஸ் ஆபிஸில் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் போன்றவற்றை அறிந்திருப்பது நல்லது. பல கணினி மையங்கள், கோடை விடுமுறையில் இதுபோன்ற வகுப்புகளை எடுக்கின்றன. அவற்றில் இணைந்து கணினியை படிப்பதால், உயர் கல்வியில் நமக்கு வரும் கணினி தொடர்பான பாடங்களை எளிதாக பயில முடியும். அதேப்போல, பி.காம்., பயிலும் மாணவர்கள் டேலியும் கற்கலாம். 1 மாத கால சாப்ட்வேர் பயிற்சியும், ஹார்ட்வேர் பயிற்சிகளையும் கூட கணினி மையங்கள் அளிக்கின்றன.

ஒருவேளை உங்களுக்கு இந்த கணினித் துறையில் ஏதேனும் ஒரு பிரிவில் அதிக ஆர்வம் ஏற்படின், அத்துறை சம்பந்தப்பட்ட உயர் கல்வி பயிலவும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் புத்திக் கூர்மையைப் பொறுத்து ஜாவா அல்லது சி++ போன்ற புரோக்ராமிங் படிப்புகளையும் தேர்வு செய்யலாம். எதைப் படிப்பதாக இருந்தாலும், நல்ல கணினி மையத்தைத் தேர்வு செய்து படிப்பது மிகவும் முக்கியம்.

தொழில்நுட்பப் படிப்புகள்
நீங்கள் தொழில்நுட்ப உயர்கல்வி பயிலும் மாணவராக இருப்பின், இந்த விடுமுறையை உங்கள் தகுதியை ஒரு படி மேலே உயர்த்திக் கொள்ள கிடைத்த சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனையோ அறிவியல் பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் கோடை விடுமுறையில் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சியை மேற்கொள்ளும் விதத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்கின்றன. இதுபோன்ற பயிற்சிகள் பற்றி அறிய ஐ.ஐ.டி., ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர். மற்றும் ஜே.என்.யு. போன்றவற்றின் இணையதளங்களை பார்க்கவும்.

கலைப் பயிற்சி
ஓவியம் வரைவது, தஞ்சாவூர் பெயின்டிங், கை வேலைப்பாடு போன்ற எத்தனையோ கலைப் பயிற்சிகளும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. அவற்றில் உங்களுக்கு ஆர்வம் இருப்பின் கோடை விடுமுறையில் அவற்றை கற்கலாம். எப்போதும் படித்துக் கொண்டே இருந்தவர்கள், சற்று மனதிற்குப் பிடித்தமான கலையை செய்வது மனதை எளிதாக்கும். சில சமயங்களில் இந்த துறையிலேயே கூட நல்ல எதிர்காலம் அமையும் வாய்ப்புகளும் உண்டு.

விடுமுறையில் எப்போதும் வீட்டிற்குள்ளேயே டிவி பார்த்து நேரத்தை போக்கிக் கொண்டிருப்பதை விட, இதுபோன்று கோடை விடுமுறை பயிற்சிகள் நிச்சயம் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். வாழ்த்துகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us