தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பயோஇன்பர்மேடிக்ஸ் துறையின் பணிகள்

பயோஇன்பர்மேடிக்ஸ் துறையின் பணிகள்

பயோஇன்பர்மேடிக்ஸ் துறையின் பணிகள்


ஜூன் 10, 2011 12:00 AM

ஜூன் 10, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 10, 2011 12:00 AM ஜூன் 10, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிமுகம்:

பயோஇன்பர்மேடிக்ஸ் என்ற வார்த்தை இன்று பல மாணவர்களிடையே பிரபலமாகி வருகிறது. ஆனால் அதேசமயம் அதைப்பற்றி அனைவருக்கும் தெரிந்திருப்பதில்லை. பயாலஜி துறையையும், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையையும் இணைத்தால் உருவாவதுதான் பயோஇன்பர்மேடிக்ஸ்.

பயோஇன்பர்மேடிக்ஸ் என்பது, பயாலஜிகல் டேட்டா தொடர்பான பலவித பணிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது. மேலும், டேட்டா அனலிசிஸ் டூல்ஸ் மேம்பாடு, பயாலஜிகல் மேக்ரோ மாலிகியூல்ஸ் மாடலிங், மெடபாலிக் பாத்வேய்ஸ், டிசைனிங் ஆப் நியூ மாலிகியூல்ஸ், பெப்டைட் வேசின்ஸ், ப்ரோடீன்ஸ் உள்ளிட்ட பல பணிகள் இதில் அடங்கும்.

பயோஇன்பர்மேடிக்ஸ் என்பது, 4 தொடர்புடைய, அதேசமயம் இன்னும் பெரிய சிக்கல் உள்ள விஷயங்களை தீர்க்க பயன்படுகிறது.

* பயாலஜிகல் டேட்டாவின் அமைப்பு, கட்டுப்பாடு, இணைப்புகள், பகுப்பாய்வு உள்பட, அதை கையாளுதல் மற்றும் நிர்வகித்தல்.

* மக்கள் மத்தியில் தகவல்-தொடர்பு, பயாலஜிகல் ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள். மேற்கூறிய தகவல் தொடர்பானது, இ-மெயில், கோப்பு பரிமாற்றம், தொலைதூர லாக்-இன், கப்யூட்டர் கான்பெரன்சிங், எலெக்ட்ரானிக் புல்லெட்டின் போர்டுகள் அல்லது வலை அடிப்படையிலான தகவல் வளங்களை நிறுவுதல்.

* அமைப்பு, அணுகல், பயாலஜிகல் தகவலை ஆராய்தல் மற்றும் திரும்ப பெறுதல், ஆவணங்கள் மற்றும் விவரக் குறிப்புகள்.

* காட்சிப்படுத்தல், கணித மாடலிங் மற்றும் சிக்கலான பயாலஜிகல் அமைப்பின் உயர் இணை செயல்பாட்டிற்கான செயல் அமைப்பின் மேம்பாடு ஆகியவை உள்ளிட்ட கம்ப்யூடேஷனல் அணுகுமுறைகளின் மூலமாக, பயாலஜிகல் டேட்டாவை பகுப்பாய்தல் மற்றும் விளக்குதல்.

பயாலஜிகல் தகவல், பெறுதல், செயல்படுத்தல், சேமித்தல், விநியோகித்தல், பகுப்பாய்வு மற்றும் விளக்கம் ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு அறிவியல் விதிமுறையாக பயோஇன்பர்மேடிக்ஸ் குறிப்பிடப்படுகிறது. கணித நுட்பங்கள், கணிப்பொறி அறிவியல் மற்றும் பாலாஜி ஆகியவற்றின் கருவிகள் ஒருங்கிணைந்துள்ளன.

பயோஇன்பர்மேடிக்ஸ் மையத்தின் பணிகள்:

* ஒவ்வொரு சிறப்பு பிரிவிலும், ஒரு தகவல் தளமாக செயல்படுவது பயோஇன்பர்மேடிக்ஸ் மையத்தின் பிரதான நோக்கமாகும்.

* பயன்படுத்தும் விஞ்ஞானிகளுக்கான, தேர்ந்தெடுக்கப்பட்ட பைப்ளியோகிராபிக் தகவல்களுக்காக, சர்வதேச தரவு தளங்களுடன் தகவல்தொடர்பு இணைப்பை தருகிறது.

* பயனர் தேவைகளுக்கு ஏற்ப, மேம்பொருள் தொகுப்பு மற்றும் தரவு தளங்களை குறிப்பான வகையில் மேம்படுத்துதல்.

போன்றவை உள்ளிட்ட பல முக்கிய பணிகளை செய்கிறது.

பயோஇன்பர்மேடிக்ஸ் துறைக்கு தேவைப்படும் திறன்கள்:

பயாலஜியில் அதீத ஆர்வம், கணினி மென்பொருள் துறையில் நல்ல அறிவு, நல்ல விழிப்புணர்வு, நிர்வாக திறன்கள், தர்க்கரீதியான மற்றும் பகுப்பாய்வு திறன்கள் போன்றவை இத்துறை நிபுணர்களுக்கு தேவைப்படும் மனப்பான்மைகள் மற்றும் திறன்கள் ஆகும்.

இத்துறையிலுள்ள வேலை வாய்ப்புகள்:

இத்துறை நிபுணர்கள், பார்மசூடிகல் மற்றும் பயோடெக் கம்பெனிகள், முன்னணி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற பல இடங்களில் பணி வாய்ப்புகளை பெறலாம்.

சம்பள விவரம்:

அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீங்கள் பணிபுரிந்தால், உங்களின் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மாத சம்பளமாக பெறலாம். அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், அடிப்படை மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பெறலாம். அதேசமயம், தனியார் பார்மசூடிகல் கம்பெனிகள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோர், ஒரு வருடத்திற்கு ரூ.4,50,௦௦௦000 முதல் ரூ.6,00௦௦,௦௦௦000 வரை பெறலாம்.

கல்வி:

பயாலஜி பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள், எம்.எஸ்சி. பயோஇன்பர்மேடிக்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஏற்கனவே பயாலஜி பாடத்தில் எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்கள், பயோஇன்பர்மேடிக்ஸ் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.

இப்படிப்பிற்கான கல்வி நிறுவனங்கள்:

* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்

* நொய்டாவின் அமிட்டி பல்கலைக்கழகம்

* சென்னையிலுள்ள சத்யபாமா பல்கலைக்கழகம்

* சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

* வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம்

போன்றவை இந்த படிப்பை கொண்டிருக்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்.

 

 

 

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us