ஜூன் 10, 2011 12:00 AM
ஜூன் 10, 2011 12:00 AM
தோட்ட வேளாண்மை(தோட்டக்கலை) என்பது விவசாயத்தின் ஒரு முக்கிய பகுதி. பழங்கள்,காய்கறிகள், கொட்டைகள், அழகுச் செடிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய தோட்ட வளர்ப்பு முக்கியம். இந்தியாவில் பலவித காலநிலைகள் நிலவுவதால், தோட்ட வேளாண்மை என்பது பெரும் வாய்ப்பினைக் கொண்ட துறையாக திகழ்கிறது. திசுத் தொகுதி மற்றும் முளைக்கரு ஆராய்ச்சிகளும் சேர்ந்துள்ளதால், இன்று இந்த துறையானது, ஒரு ஆராய்ச்சி துறையாக உருவாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில், போன்சாய் போன்ற அழகு செடிகளுக்கு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் மவுசு அதிகரித்துள்ளதால், தோட்ட வேளாண்மை தொழில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த
துறையில் நுழைவது எப்படி:பள்ளி
படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படித்தவர்கள், பி.எஸ்சி இளநிலை படிப்பில் விவசாயம் படிக்கலாம். சில கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகள், பள்ளி படிப்பில் படித்திருக்க வேண்டிய பாடங்களுடன், ஆங்கில அறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்துள்ளன. உங்களின் இளநிலை படிப்பை முடித்தவுடன், நீங்கள் இதே துறையில் முதுநிலை மற்றும் எம்.பில். படிப்புகளை மேற்கொள்ளலாம். சில வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், தோட்ட வேளாண்மை மருத்துவம் தொடர்பாக இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன. இந்தியாவில், இத்துறைக்கு, தகுதியான மாணவர்களை ஈர்க்க, பலநிலைகளில் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.வேலை
வாய்ப்பு:இத்துறையில்
நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இளநிலை பட்டப் படிப்பில் வேளாண்மை அல்லது தொட்ட வேளாண்மை படித்த ஒருவர், மாவட்ட தொட்ட வேளாண்மை அதிகாரி அல்லது மாவட்ட விவசாய அதிகாரி போன்ற நிலைகளில் பணிபுரியலாம். இந்த பணிகளுக்கான போட்டி தேர்வுகள் மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படுகின்றன.இவைத்தவிர
, தோட்ட வேளாண்மை ஆய்வாளர், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆய்வாளர், சந்தைப்படுத்தல் ஆய்வாளர், பிரிவு அதிகாரி, தோட்ட வேளாண்மை நிபுணர் அல்லது மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், விவசாய பல்கலைகள், ஐ.சி.ஏ.ஆர், டி.ஆர்.டி.ஓ, ஐ.ஏ.ஆர்.ஐ, சி.எஸ்.ஐ.ஆர் போன்ற நிறுவனங்களில் தொழில்நுட்ப அதிகாரி, பண்ணை மேற்பார்வையாளர், வேளாண் ஆய்வாளர், வேளாண் மேம்பாட்டு அதிகாரி, கிராம அளவிலான பணியாளர் போன்ற பலவித பணிகள் இத்துறையில் உள்ளன.வேளாண்
விஞ்ஞானி என்ற நிலைக்கான போட்டித் தேர்வை, வேளாண் விஞ்ஞானி பணியமர்த்தும் வாரியம் நடத்துகிறது. கல்வித்துறையை எடுத்துக்கொண்டால், கல்லூரி மற்றும் பல்கலை விரிவுரையாளர், ரீடர், உதவி பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் போன்ற பணிகளோடு, பயிற்சி ஏற்பாட்டாளர் மற்றும் பயிற்சி அசோசியேட் போன்ற பணிகளும் உள்ளன.தனியார்
துறையில் வேலை வாய்ப்புகள்:தொழிற்சாலைகள்
, பண்ணைகள், ஹோட்டல்கள், கட்டுமான நிறுவனங்கள், கோல்ப் விளையாடும் களம் போன்றவற்றில் தோட்ட வேளாண்மை நிபுணர், அதிகாரி, மேற்பார்வையாளர் போன்ற பொறுப்புகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. வேளாண் தயாரிப்பு பதப்படுத்தும் நிறுவனங்களில் தோட்ட வேளாண் அதிகாரியாகவும் பணியாற்றலாம்.சுயதொழில்
வாய்ப்புகள்:தொழில்
நடத்தும் திறனும், நிதி வசதியும் இருந்தால் நீங்கள் தாராளமாக சுயதொழில் தொடங்கலாம். பூ தோட்டங்களை வளர்த்தல், செடிகள் மற்றும் பழத்தோட்டங்களை வளர்த்தல், காளான் வளர்ப்பு, விதை வியாபாரி, பழங்களையும், காய்கறிகளையும் சேமித்து வைப்பதற்கான குளிர்சாதான நிலையங்கள் அமைத்தல், தோட்ட வேளாண்மை ஆலோசகராக பணியாற்றுதல், வேளாண் கிளீனிக் அமைத்தல் போன்ற பல வாய்ப்புகள் இத்துறையில் உள்ளன.தொடர்புடைய
பிற தொழில்கள்:ஆராய்ச்சி
, இயந்திரங்கள், ரசாயன தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற மறைமுக வேலைவாய்ப்புகளும் உள்ளன.இப்படிப்பை
மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:வேளாண்
பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்.அண்ணாமலை
பல்கலைக்கழகம் - தமிழ்நாடு.புனே
வேளாண் கல்லூரி.வேளாண்
கல்லூரி - பெங்களூர்.வேளாண்
கல்லூரி - ஐதராபாத்.குஜராத்
வேளாண் பல்கலைக்கழகம்.கேரளா
வேளாண் பல்கலைக்கழகம்.பஞ்சாப்
வேளாண் பல்கலைக்கழகம்.
