ஜூன் 10, 2011 12:00 AM
ஜூன் 10, 2011 12:00 AM
அ நிறம் | அளவு
நிதி திட்டமிடுதல்(Financial planning) என்பது ஒரு முக்கிய தொழிலாக வளர்ந்துள்ளது. வேகமாக வளர்ந்துவரும் இந்த தொழில், பணி திருப்தியையும், தனிப்பட்ட வளர்ச்சியையும் தருகிறது.
ஒவ்வொரு
லட்சியமுள்ள மனிதருக்கும், அறிவார்ந்த முறையில் பணம் சம்பாதிக்க வேண்டும் மற்றும் அந்த சம்பாத்தியம் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த எண்ணத்தை நிஜமாக்க, ஒருவர், வர்த்தக நிதி பரிமாற்றத்தை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அதேசமயத்தில், இது ஒரு குழந்தை விளையாட்டும் அல்ல. இதற்கு, நுட்பம், பயிற்சி மற்றும் அனுபவம் போன்றவை தேவை. சுருக்கமாக சொல்வதென்றால், இத்துறைக்கு தொழில்சார்ந்த நிபுணர்கள் தேவை.நிதி
திட்டமிடுனர்கள், ஒரு வாடிக்கையாளரின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால விருப்பங்களை தீர்மானிக்கிறார்கள். தங்களின் வாடிக்கையாளரது விவரங்களை சேகரிப்பது, அவர்களின் நிதிநிலையை மதிப்பிட்டு, பகுப்பாய்வு செய்வது, மேம்படுத்துவது, நிதி திட்டமிடுதல் பரிந்துரைகளை வழங்குவது, அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது, அந்த பரிந்துரைகள் அந்த பரிந்துரைகளை கண்காணிப்பது போன்றவை நிதி திட்டமிடுனர்களின் பணி.தேவைப்படும்
குணாதிசயங்கள்:நல்ல
பகுப்பாய்வு திறனும், பிறருக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவர்கள் இத்தொழிலுக்கு தகுதியானவர்கள். எந்த படிப்பு பின்னணி உடையவர்களும் இந்த தொழிலுக்கு தகுதியானவர்கள்தான். அதேசமயம், கவுன்சிலிங், அக்கவுண்டன்சி, சட்டம், இன்சூரன்ஸ், இன்வெஸ்ட்மென்ட், பைனான்ஸ், டேக்சேஷன் போன்ற படிப்புகளை படித்தவர்கள் இத்தொழிலை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.படிப்புகள்
:நிதி
திட்டமிடுதலில் முதுநிலை டிப்ளமோ படிப்பு(பி.ஜி.டி.எப்.பி - முழுநேரம்), சான்றளிக்கப்பட்ட நிதி திட்டமிடுனர்(சி.எப்.பி) மற்றும் நிதி மற்றும் முதலீட்டு திட்டமிடுதலில் முதுநிலை டிப்ளமோ ஆகிய படிப்புகளை பல கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.இப்படிப்புகளுக்கான
தகுதிகள்:ஒவ்வொரு
கல்வி நிறுவனமும் இந்தவகை படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, தங்களின் சொந்த விதிமுறைகளை வைத்துள்ளன. பல கல்வி நிறுவனங்கள், விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.சம்பளம்
:இந்தியா
மற்றும் உலகளவில் மிக அதிக சம்பளம் பெறக்கூடியவர்களாய் நிதி திட்டமிடுனர்கள் விளங்குகிறார்கள். இவர்களுக்கு பல வழிகளில் வருமானம் வருகிறது. நிலையான அதிக வருமானத்தைக் கொண்டதாய் இத்தொழில் விளங்குகிறது.வேலை
வாய்ப்புகள்:வங்கிகள்
, நிதி திட்டமிடும் நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், அக்கவுண்டிங் மற்றும் சட்ட நிறுவனங்கள், பங்குகள் மற்றும் பாதுகாப்பு தரகு நிறுவனங்கள், கிரடிட் கவுன்சிலிங் நிறுவனங்கள் ஆகியவற்றில் பல பணிகள் உள்ளன. இவைத்தவிர, நிதி மேலாளர்கள் போன்ற பணிகளும் உள்ளன.இத்துறை
தொடர்பாக படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:BLB Institute of Financial Market(BIFM) - New Delhi
MIS Proschool - Mumbai
The Indian Institute of Financial planning - New Delhi
The Indian Institute of Financial planning & Management - Bangalore
International College of Financial planning - New Delhi
