தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/புள்ளியியல் துறை பணி வாய்ப்புகள்

புள்ளியியல் துறை பணி வாய்ப்புகள்

புள்ளியியல் துறை பணி வாய்ப்புகள்


ஜூன் 10, 2011 12:00 AM

ஜூன் 10, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 10, 2011 12:00 AM ஜூன் 10, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனி நபர்களின் குழுக்கள் மற்றும் சோதனைகள் தொடர்பான எண் விவரங்களை, பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான ஒரு சம்பிரதாயமான அறிவியலே "புள்ளியியல்" ஆகும். சேகரிப்பு, பகுப்பாய்வு, மதிப்பீடு மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலான கணித தகவல்களை வழங்குதல் போன்ற அம்சங்கள் புள்ளியியலோடு தொடர்புடையவை. தொழிற்சாலைகள், வணிகம் மற்றும் தரவை சேகரிப்பதற்கான திட்டம் ஆகியவற்றில், சேகரித்தல், வகைப்படுத்தல், தரவுகளை பகுப்பாய்வு செய்தல் போன்ற பணிகளுக்கு புள்ளியியல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

புள்ளியியலின் பலவித பயன்பாடுகள் உள்ளன. அடிப்படையில், தயாரிப்பு, ஆராய்ச்சி, விவசாயம், காப்பீடு, நிதி, பொருளாதாரம், மென்பொருள் மேம்பாடு, சந்தை ஆராய்ச்சி, விளையாட்டு, மருத்துவம், மருந்து சோதனை போன்ற பல பணிகளில் புள்ளியியல் பயன்படுகிறது. நிர்வாக முடிவுகளை வலுப்படுத்தவும், உற்பத்தியில் தரக் கட்டுப்பாட்டை மேற்பார்வையிடவும் புள்ளியியல் வல்லுனர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

புள்ளியல் வல்லுனர்கள் பொதுவாக 2 பெரும் பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகிறார்கள். கோட்பாட்டு அடிப்படையிலான புள்ளியியல் வல்லுனர்கள் மற்றும் பயன்முறை சார்ந்த புள்ளியியல் வல்லுனர்கள் என்பவர்களே அவர்கள். கோட்பாட்டு அடிப்படையிலான புள்ளியியல் வல்லுனர், புள்ளியியல் முறைகள் மற்றும் நுட்பங்களின் மேம்பாடு பற்றிய பணியிலும், பலவித துறைகளில் எழும் சிக்கல்களை தீர்க்க பயன்படுத்தப்படும் புள்ளியல் முறைகள் மற்றும் நுட்பங்களின் பயன்பாடு தொடர்பான பணியிலும் ஈடுபடுகிறார்கள்.

புள்ளியியல் பாடமானது, கல்லூரிகள், பல்கலைகள் தவிர, இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் போன்ற சிறப்பு கல்வி நிறுவனங்களிலும் கற்பிக்கப்படுகிறது. இயக்க ஆராய்ச்சி என்பது கணித அறிவியலின் ஒரு பிரிவு. அது, வணிகம், தொழிற்சாலை, அலுவலகம், பாதுகாப்பு மற்றும் பிற அரசு துறைகளில், நிர்வாகம் மற்றும் முடிவெடுக்கும் நிலைகளில் எழும் சிக்கல்களை தீர்க்க மற்றும் தீர்மானிக்க, அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்துகிறது.

தேவைப்படும் பண்புகள்:

லாஜிக்கலாக சிந்திப்பது, எண்ணிக்கை அடிப்படையிலான திறன், பகுப்பாய்வு திறன், முடிவெடுக்கும் திறன், குழுவாக பணிபுரியும் தன்மை, சிறந்த தகவல் தொடர்பு திறன் போன்றவை ஒரு புள்ளியியல் வல்லுனராக இருப்பதற்கான முக்கிய தகுதிகள்.

இத்துறையில் நுழைவது எப்படி:

பள்ளி படிப்பில் கணிதம் முடித்துவிட்டு, இளநிலை படிப்பிற்கு புள்ளியியல் பாடத்தை தேர்வு செய்யலாம். இந்த படிப்பானது, இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம், மதுரை காமராஜர் பல்கலை, அலிகார் முஸ்லிம் பல்கலை, டெல்லி பல்கலை, குஜராத் பலகை, ஒஸ்மானியா பல்கலை, பஞ்சாப் பல்கலை போன்ற பல முக்கிய கல்வி நிறுவனங்கள் இப்படிப்பை வழங்குகின்றன.

மேலும், நீங்கள் இந்த துறையில் முதுநிலை படிப்பை மேற்கொண்டால் உங்களின் தொழிலில் வளர்ச்சி பெற உதவும். நீங்கள் இளநிலை படிப்பில் கணிதம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களை படித்திருந்தால், IAI நடத்தும் தேர்வுகளை எழுதலாம். மேலும், யு.பி.எஸ்.சி. நடத்தும் இந்திய புள்ளியியல் சேவை தேர்வையும் எழுதலாம்.

சம்பளம்:

இத்துறையில், பொதுவாகவே நல்ல சம்பளம் கிடைக்கிறது. வருடத்திற்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை மாறுபட்ட நிலைகளில் சம்பாதிக்கலாம்.

வேலைவாய்ப்புகள்:

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ஆசிரியப் பணிகள் உண்டு. Acturial கணித நிபுணர்கள், காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களின் வடிவமைப்பில் ஈடுபடுவதுடன், காப்பீட்டு பிரீமிய மதிப்புகளை நிர்ணயிப்பது மற்றும் கவர்ச்சிகரமான பாலிசிகளை உருவாக்குதல் போன்ற பணிகளை செய்கிறார்கள். மேலும் அவர்கள், LIC, GIC, வங்கிகள், பங்கு பரிவர்த்தனை மையங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் பணிபுரிவார்கள். நிதி தொடர்பான பரிமாற்றங்கள் மற்றும் சேவைகள் அதிகரித்திருப்பதால், புள்ளியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

 

 

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us