தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கேரியர் கவுன்சிலிங் தொழில் மீது ஆசையா?

கேரியர் கவுன்சிலிங் தொழில் மீது ஆசையா?

கேரியர் கவுன்சிலிங் தொழில் மீது ஆசையா?


ஜூன் 10, 2011 12:00 AM

ஜூன் 10, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 10, 2011 12:00 AM ஜூன் 10, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல பெற்றோர்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி, பள்ளி படிப்பை முடித்த பிறகு எதை படிப்பது என்ற குழப்பம் நிறையவே இருக்கிறது. சில பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்கின்றனர். சிலர் குழந்தைகளின் விருப்பத்திற்கே விட்டுவிடுகின்றனர். அதேசமயம், பல மாணாக்கர்கள், மேற்படிப்பில் எதை தேர்ந்தெடுப்பது என்று திணறுகின்றனர். எனவே இத்தகைய சூழலில்தான், அவர்களுக்கு ஒரு நிபுணரின் ஆலோசனை தேவைப்படுகிறது.

கேரியர் கவுன்சிலிங்:

கேரியர் கவுன்சிலிங் என்பது, பள்ளி கல்வியை முடித்த மாணவர்களுக்கு, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்கலாம், எந்த தொழில் அவர்களுக்கு உகந்தது, ஒவ்வொரு படிப்பிலும் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி ஆலோசனை கூறுவதாகும். மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலுள்ள படிப்புகள் மற்றும் குறிப்பிட்ட மாணவருக்கு எந்தமாதிரியான பல்கலை அல்லது கல்லூரிகளில், எதுபோன்ற பாடப்பிரிவுகள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தெளிவான ஆலோசனை வழங்குவது கேரியர் கவுன்சிலரின் தொழில்.

தன்னிடம் ஆலோசனை கேட்டு வரும் ஒரு மாணவர் அல்லது மாணவியிடம் நேரடியாக அமர்ந்து பேசி, படிப்பு மற்றும் தொழில் சம்பந்தமாக அவர்களின் விருப்பங்களை பொறுமையாக கேட்டு, அவர்களுக்கு ஏற்ற ஆலோசனையை கேரியர் கவுன்சிலர் அளிக்கிறார். கேரியர் கவுன்சிலர்களுக்கான வேலை வாய்ப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை கல்வி நிறுவனங்களில் உள்ளது.

இத்தொழிலுக்கு தேவைப்படும் தகுதிகள்:

* மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை.

* தனியாகவும், குழுவாகவும் வேலைசெய்யும் திறன்.

* கேரியர் விவரங்களைப் பற்றிய ஆழமான அறிவு.

* இளைய தலைமுறையினரின் சிக்கல்களையும், விருப்பங்களையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப பதிலளிக்கும் திறன்.

இத்தொழிலில் எப்படி நுழைவது:

மானுடவியல் அல்லது அறிவியல் பாடங்களுடன் பள்ளி படிப்பை முடித்திருக்க வேண்டும். பிறகு உளவியல் பிரிவில், இளநிலை படிப்பை மேற்கொள்ள வேண்டும். பின்னர், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பிரிவில், முதுநிலை டிப்ளமோ படிப்பை முடிக்க வேண்டும்.

சம்பளம்:

இத்தொழிலில் நுழையும் ஒருவர் ஆரம்ப நிலையில் ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பெறுவார். இந்த சம்பளமானது ரூ.35 ஆயிரம் வரை உயரும். மிடில் லெவல் மற்றும் சீனியர் லெவல் பணியின்போது சம்பளம் அதிகமாக கிடைக்கும்.

முக்கிய கல்வி நிறுவனங்கள்:

கேரியர் கவுன்சிலிங்கில் முதுநிலை டிப்ளமோ படிப்பு பல கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

* அண்ணாமலை பல்கலை.

* மும்பை பல்கலை.

* பஞ்சாப் பல்கலை.

* கர்நாடகா பல்கலை.

* அமிட்டி பலகலை - நொய்டா.

* இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலை.

* மகாராஜா சாயாஜிராவ் பல்கலை - வதோதரா.

உள்ளிட்ட பல பல்கலைகளில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us