ஜூன் 10, 2011 12:00 AM
ஜூன் 10, 2011 12:00 AM
கடந்தகால சம்பவங்களைப் பற்றி படிப்பதே வரலாறு என்று மேலோட்டமாக சொல்லப்பட்டாலும், அதன்மூலம் பாதுகாப்பான மற்றும் பிரச்சினையில்லாத எதிர்காலத்திற்கான படிப்பினைகளை பெறுவது என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். இன்றைய நிலையில் நாம் வாழும் உலகம், இதற்கு முன்பு எப்படி இருந்தது? முன்பு எப்படி இருந்ததால், இன்று இப்படி இருக்கிறது? மற்றும் எதிர்காலத்தில் அது எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வரலாறு மிகவும் அவசியம். மனித இனத்தின் இருப்பை உறுதிசெய்ய வரலாறு மிகவும் முக்கியம். நாம் யார் என்று அறிந்துகொள்ள வேண்டுமெனில் வரலாறு மிகவும் முக்கியம். இன்றைய காலத்தில், வரலாற்று பாடம் என்பது ஒரு தேவையற்ற விஷயம் என்ற மனப்பாங்கு மாணவர் மத்தியில் உருவாகியுள்ளது. இது ஒரு ஆபத்தான கருத்தாக்கம்.
வரலாற்றை
படிக்கும்போது, கடந்தகால ஆதாரங்களை பகுப்பாய்வு செய்கிறோம். இதன்மூலம், நமது திறனாய்வு சிந்தனை மற்றும் சுதந்திரமாக கற்கும் திறன்கள் மேம்படுகிறது.வரலாற்று
துறையில் தொழில் வாய்ப்புகள்:ஆசிரியர்
தொழில்:பள்ளி
அளவில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிய, வரலாற்று பாடத்தில் இளநிலை பட்டத்துடன், ஒரு பி.எட். பட்டம் போதும். 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்க, பி.எட். பட்டத்துடன் முதுநிலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம் கல்லூரியில் அல்லது பல்கலையில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிய, முதுநிலை பட்டத்துடன், பிஎச்.டி. முடித்திருக்க வேண்டும் அல்லது தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்" தேர்விலோ(வருடம் 2 முறை தொடர்ச்சியாக) அல்லது மாநில அளவில் அவ்வப்போது நடத்தப்படும் "செட்" தேர்விலோ தேர்ச்சிபெற வேண்டும். நெட் தேர்வில் தேறினால், நாடு முழுவதும் உள்ள பல்கலை-கல்லூரிகளுக்கு செல்லலாம். செட் தேர்வின் மூலம் அந்தந்த மாநிலங்களின் எல்லைக்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்குத்தான் செல்ல முடியும்.ஆராய்ச்சியாளர்
மற்றும் வரலாற்று அறிஞர் பணி:மேற்கூறிய
தகுதிகளில் ஒன்றை பெற, கடந்தகால சம்பவத்தைப் பற்றி தெளிவாக படித்து, அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் ஒரு பதிவு குறிப்பேடு(ரெக்கார்ட்) தயார்செய்ய வேண்டும். ஒரு ஆராய்ச்சியாளரின் பணி என்பது, அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து, இறுதியில் அதுதொடர்பான ஒரு கருத்தை உருவாக்குவதாகும். ஒரு வெற்றிகரமான வரலாற்று ஆய்வாளர், தனது பாடம் சம்பந்தமாக ஆழமான அறிவைக் கொண்டிருப்பார். வரலாற்றில், முதுநிலைப் பட்டம் அல்லது பிஎச்.டி. முடித்திருப்பது இதற்கு பெரும் உதவியாக இருக்கும். வரலாற்று பாடத்தின்பால் அதீத ஆர்வமும், ஆராய்ச்சி பணியின்மீது காதலும் கொண்டவர்கள் இந்த பணியில் சிறப்பாக செயல்படுவார்கள்.தொல்பொருள்
ஆய்வாளர்:வரலாற்று
துறையுடன் தொடர்புடைய தொல்பொருள் துறை மற்றும் ஆவணக் காப்பக துறையிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.ஒரு
தொல்பொருள் ஆய்வாளர் என்ற முறையில், கடந்த காலம் தொடர்பான ஆதாரங்கள், சூழல்கள், தேதிகள் மற்றும் பொருள் கலாச்சாரம் ஆகியவற்றை நீங்கள் ஆராய வேண்டும். மேலும், அகழ்வாராய்ச்சி செய்து, தோண்டியெடுக்கப்பட்ட பொருட்களையும் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அதேசமயத்தில், இத்தொழிலுக்கு வரலாற்று பாடப் பின்னணி இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள "ஆர்கியாலஜிகள் சர்வே" -தான் இத்துறை சார்ந்த முக்கிய அரசாங்க அமைப்பு.ஒரு
சிறந்த தொல்பொருள் வல்லுனராக விளங்க, வரலாற்று பாடத்தில் ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிப்பவராகவும், படைப்பு திறன் உள்ளவராகவும், நுட்பம் உள்ளவராகவும், தர்க்க ரீதியான சிந்தனை உள்ளவராகவும், கலையை விரும்புபவராகவும், அதை பாராட்டுபவராகவும் இருக்க வேண்டும். மேலும், வெளியிடங்களில் பணிபுரியும்போது உள்ள சூழலை தாங்கும் வகையில் நல்ல உடல்திறன் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.அருங்காட்சியக
பொறுப்பாளர்:மியூசியம்
, நூலகம், கேலரி, ஆவணக் காப்பகம் போன்ற இடங்களில் பொறுப்பாளராக பணிபுரியும் வாய்ப்பும் உண்டு. ஒரு பொறுப்பாளர் என்ற முறையில், வரலாறு தொடர்பான ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல் மற்றும் கண்காட்சி போன்றவற்றில், திரட்டுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் பொருட்களை பார்த்துக் கொள்ளுதல் போன்ற பணிகளை இவர் செய்கிறார். மேலும், வரலாற்றாளர் மற்றும் அறிஞர்களுடன் கூட்டாக இணைந்து ஆராய்ச்சியும் நடத்துகிறார்.ஆவண
காப்பாளர்:அச்சிடப்பட்ட
சேகரிப்புகள், ஓவியங்கள், புகைப்படங்கள், எழுத்துப் பிரதிகள், நிருபங்கள் உள்ளிட்ட பல வரலாற்று ஆவணங்களை திரட்டி சேமித்து வைக்குமிடம் ஆவணக் காப்பகம் எனப்படும். இத்தகைய சேகரிப்புகள் தேவையானபோது எடுத்து படிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படும். இந்த ஆவண காப்பகத்தை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பு ஆவண காப்பாளரை சேரும். மேலும், மதிப்பிடுதல், திரட்டுதல், ஒருங்கிணைத்தல், பராமரித்தல் மற்றும் பாதுகாக்கும் பணியும் அவருடையது.வரலாற்று
எழுத்தாளர்:வரலாறு
தொடர்பான நிகழ்வுகள் உங்களை எப்போதுமே பரவசமடைய செய்தால், வரலாற்றை படிப்பதில் நீங்கள் பேரார்வம் கொண்டிருந்தால், உங்களுக்கு நல்ல எழுத்து திறமை இருந்தால், நீங்கள் ஒரு வரலாற்று எழுத்தராக உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.பாடப்
புத்தகங்கள் எழுதுவதோடு, செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளிலும் எழுதலாம். மேலும், உங்களின் ஆராய்ச்சி கட்டுரையை ஜர்னல்களிலும் வெளியிடலாம். இதைத்தவிர, வரலாற்று படங்களுக்கு கதை வசனமும் எழுதலாம்.சிவில்
சர்வீஸ் தேர்வுகள்:யு
.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முக்கிய தேர்வுக்கு, எப்போதுமே ஒரு சிறந்த விருப்பப் பாடமாக வரலாற்றுப் பாடம் உள்ளது. மேலும் மற்ற பல போட்டித் தேர்வுகளிலும் வரலாறு பயன்படுகிறது.வேலை
வாய்ப்புகள்:வெளியுறவுத்
துறை அமைச்சகத்தின் கலாச்சார விவகாரங்கள் பிரிவில் உள்ள வரலாற்று துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளன. வரலாறு/அரசியல் அறிவியல்/நவீன வரலாறு ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் முதுநிலை பட்டம் முடித்து, இரண்டாம் வகுப்பு மதிப்பெண் பெற்றவர்களுக்கு, அதேசமயம் வெளிநாட்டு மொழியின் அறிவும் இருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சர்வதேச உறவுகள் என்ற பாடத்தை படித்திருந்தாலும் முன்னுரிமை கிடைக்கும்.மேலும்
, திரைப்பட தணிக்கைக்கான மத்திய வாரியம், இந்திய அரசின் திரைப்பட பிரிவு, தகவல்தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், பாதுகாப்பு துறை, அனைத்திந்திய கைவினைப்பொருள் வாரியம், கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.சம்பளம்
:ஒரு
உதவி தொல்பொருள் ஆய்வாளர், ஆரம்பத்தில் ரூ.10௦ ஆயிரம் முதல் 15 வரை பெறுகிறார். அதேசமயம் அவர் இயக்குனராக பதவி உயர்வு பெறும்போது சம்பளமும் கூடுகிறது. செயல்பாட்டைப் பொறுத்தே பதவி உயர்வும் கிடைக்கிறது. அதேசமயம் தனியார் நிறுவனங்களில், கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவோ, பொறுப்பாளராகவோ பணிபுரியும்போது, கைநிறைய சம்பளம் கிடைக்கிறது.வாய்ப்பை
பெறுவது எப்படி:நீங்கள்
வரலாற்று துறையில் பணிபுரிவதை ஒரு லட்சியமாக கொண்டிருந்தால், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வரலாறு பட்டப் படிப்பு(பண்டையகாலம்-மத்திய காலம்-நவீன காலம்) படிக்க வேண்டும். மேலும், வரலாற்று பாடத்திலேயே, எம்.ஏ., எம்.பில் மற்றும் பிஎச்.டி. போன்றவையும் மேற்கொள்ளலாம். தொல்பொருள் ஆய்வு அல்லது பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிகளில் முதுநிலை படிப்பை மேற்கொண்டால், நீங்கள் பயிற்சியளிக்கப்பட்டு தொல்பொருள் ஆய்வக துறைகளில் பணியமர்த்தப்படுவீர்கள்.முதுநிலை
படிப்பில் வரலாறு முடித்துவிட்டு, ஆவண காப்பக படிப்பில் டிப்ளமோ முடித்திருந்தால், தேசிய ஆவணக் காப்பகத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். டெல்லியிலுள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் ஒருவர், இந்திய கலாச்சாரம் பற்றியும், அதன் கடந்தகால வரலாறு பற்றியதுமான அனைத்து தரவுகளையும் காண முடியும். இந்த தேசிய காப்பகத்தின் பிராந்திய அலுவலகங்கள் போபால் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ளன.தேசிய
ஆவணக் காப்பகத்தில் ஆட்களை பணியமர்த்துவதற்கான நுழைவுத்தேர்வை யு.பி.எஸ்.சி. நடத்துகிறது. இதைத்தவிர மற்றொரு முக்கிய நிறுவனம் என்னவெனில், டெல்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள "ஆர்கியாலஜிகள் சர்வே ஆப் இந்தியா" ஆகும். மேலும் இந்த நிறுவனமானது, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தொல்பொருள் துறைகளைக் கொண்டுள்ளது. மேலும் இதன் சிறப்பு கிளைகள், கோயில்கள் மற்றும் கல்வெட்டுக்களில் ஆராய்ச்சி செய்கிறது.வரலாற்றுக்
கல்வி:இந்தியாவின்
அனைத்து அரசு பல்கலை மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைகளிலும் வரலாற்று பட்டப் படிப்பு இருக்கிறது. முதுநிலை படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள், நேஷனல் மியூசியம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹிஸ்டரி, கான்செர்வேஷன் அண்ட் மியூசியாலஜி, ஆவணக் காப்பக படிப்புகள் கல்வி நிறுவனம், இந்திய தேசிய ஆவணக் காப்பகம், காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகம், ஒஸ்மானியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலை, டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஹெரிடேஜ் அண்ட் மேனேஜ்மென்ட் போன்றவை.நீங்கள்
கீழ்கண்ட முதுநிலை படிப்புகளை படிக்கலாம்.*
எம்.ஏ. மியூசியாலஜி.*
எம்.ஏ./பிஎச்.டி - கான்செர்வேஷன் அண்ட் ரெஸ்டோரேஷன் ஆப் வொர்க்ஸ் ஆப் ஆர்ட்.*
டிப்ளமோ - மியூசியம் அட்மின், மியூசியம் மாடலிங் அண்ட் மியூசியம் போட்டோகிராபி.*
டிப்ளமோ - ஆவணக் காப்பக படிப்புகள்.*
பி.ஜி. டிப்ளமோ - ஆவணக் காப்பக மற்றும் ஆவணப்படுத்தல் மற்றும் மேலாண்மை.*
பி.ஜி. டிப்ளமோ - ஆவணக் காப்பக பராமரிப்பு, ரேப்ரோகிராபி சான்றிதழ் மற்றும் புத்தகமற்ற பிற பொருட்கள்.*
பி.ஜி. டிப்ளமோ - ஆவணக் காப்பக அறிவியல் மற்றும் கையெழுத்துப்பிரதி இயல்.*
பி.ஜி. - சான்றிதழ் - ஆவணக் காப்பகம்.*
பி.ஜி. டிப்ளமோ - மியூசியாலஜி.*
எம்.ஏ. - மியூசியாலஜி.*
டிப்ளமோ - மியூசியாலஜி.
