தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கணிதத்துறை வேலை வாய்ப்புகள்

கணிதத்துறை வேலை வாய்ப்புகள்

கணிதத்துறை வேலை வாய்ப்புகள்


ஜூன் 10, 2011 12:00 AM

ஜூன் 10, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 10, 2011 12:00 AM ஜூன் 10, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆதிகால திராவிடர்களின் காலம்தொட்டு, இன்றைய காலம்வரை, கணிதம் என்பது ஏராளமான துறைகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கொள்ளளவு, எங்கள் மற்றும் குறியீடுகள் தொடர்பான படிப்புதான் கணிதம். பலவித பாடங்களைப் புரிந்துகொள்ள, கணித அறிவு அவசியமாக இருக்கிறது.

எனவேதான், பல நிலைகளிலான பள்ளி படிப்புகளில் கணிதப் பாடம் முக்கியமானதாக இருக்கிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், பௌதீக அறிவியல், புள்ளியியல், கணிப்பொறி, வணிகம், பொருளாதாரம், பாதுகாப்பு நிதி கணிதம் மற்றும் வாழ்க்கை அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் கணிதப் பயன்பாடு முக்கியமாக உள்ளது.

கணிதமானது, தூய கணிதம்(pure mathematics) மற்றும் துணைநிலை கணிதம்(applied mathematics) என்று 2 பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. தூய கணிதம் என்பது, கணிதத்தின் கோட்பாடுகள், கருத்துக்கள் ஆகியவற்றை, அதன் நடைமுறை பயன்பாட்டைப் பற்றிய கவலையின்றி பின்பற்றுவதாகும்.

ஆனால், துணைநிலை கணிதம் என்பது, பிற துறைகளில் உள்ள சிக்கல்களை கணிதத்தை கொண்டு தீர்ப்பதாகும். இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகம், தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் கணிதத்தை பயன்படுத்துவதாகும்.

பணியின் தன்மை:

துணைநிலை கணித நிபுணர், பல துறைகளை சேர்ந்தவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பலவித சிக்கல்களை அடையாளம் காண வேண்டும். அவரின் அணுகுமுறையானது, நெகிழ்வுத்தன்மை உடையதாகவும், தர்க்கரீதியாகவும் இருக்க வேண்டும். அவரிடம் கொடுக்கப்பட்ட பிரச்சினையின் பௌதீக பரிமாணங்களையும், நுட்பங்களையும் புரிந்துகொள்வதோடு, அதை தீர்ப்பதிலும் உண்மையான ஆர்வம் இருக்க வேண்டும்.

கணிதத்தின் ஒரு பிரிவான அல்ஜீப்ராவில், எழுத்துக்களும், குறியீடுகளும் கொள்ளளவைக் குறிக்கும். ஜியோமெட்ரியில், வரிசை சாய்வுகள், மேற்பரப்புகள், திடப்பொருட்கள் ஆகியவற்றின் அளவுகள் மற்றும் தொடர்புகளை ஆராய்கின்றன. ட்ரிக்னோமெட்ரி என்பது, ஒரு முக்கோணத்தின் சாய்வுகள் மற்றும் புறங்களுக்கு இடையேயான தொடர்புகளை ஆராய்கிறது. கணிதம் என்பது ஒரு தனிப்பட்ட பாடமாக இருந்தாலும், அது, இயற்பியல், வேதியியல், உளவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் பயன்படுகிறது.

ஒருவர் கணித ஆராய்ச்சியாளராக இருக்க விரும்பினால், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில் பல வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவர் கணித ஆசிரியராக இருக்க விரும்பினாலும், பல பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் நல்ல சம்பளத்திற்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும், கணிதத்தை, சிக்கல் தீர்ப்பதற்கான அம்சமாக பயன்படுத்த விரும்புபவர்களுக்கு கடந்த பல வருடங்களாக ஏராளமான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

பல நிதி சேவை நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சி கூடங்கள் போன்றவை இந்திய கணித நிபுணர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்துகின்றன. அவர்களுக்கு, ஐ.டி. துறை பணியாளர்களை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. தூய கணிதத்தில் பயிற்சி பெற்றவர்களையும் இந்த நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us