தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தொல்பொருள் ஆய்வு வல்லுநர் ஆகலாம்....

தொல்பொருள் ஆய்வு வல்லுநர் ஆகலாம்....

தொல்பொருள் ஆய்வு வல்லுநர் ஆகலாம்....


ஜூன் 10, 2011 12:00 AM

ஜூன் 10, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 10, 2011 12:00 AM ஜூன் 10, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொல்பொருள் ஆராய்ச்சி என்பது ஆங்கிலத்தில் ஆர்கியாலஜி என்று அழைக்கப்படுகிறது. ஆர்கியாலஜி என்ற வார்த்தை, 2 கிரேக்க வார்த்தைகளிலிருந்து உருவான ஒரு வார்த்தை. பண்டைய அம்சங்கள் மற்றும் அறிவியல் கோட்பாடு என்ற அர்த்தங்களைக் கொண்ட 2 வார்த்தைகள் இணைந்துதான் இந்த வார்த்தை உருவானது.

வரலாற்றை மறு கட்டமைப்பு செய்து, பழைய நிகழ்வுகளுக்கு புத்துயிரூட்ட, அறிவியல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொல்பொருள் ஆய்வு முதன்முதலாக ரோமானியர்களால் மேற்கொள்ளப்பட்டது என்று சொல்லப்படுகிறது மற்றும் ஹென்றிக் சிலிமேன் என்பவர்தான் கிரேக்க நாகரீகத்தைப் பற்றி, தொல்பொருள் ஆய்வுமூலம் ஆராய்ச்சி செய்து அத்துறைக்கு ஒரு துல்லியத்தை வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு தொல்பொருள் நிபுணர், அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் பொருட்களின் மூலம், பண்டைய கலாச்சாரங்கள், மக்கள், சம்பவங்களின் கால கட்டம் ஆகியவற்றை அறிவியல் முறைகளின் மூலம் கண்டறிகிறார். அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம், மனிதனின் கடந்தகால வாழ்க்கையை அறிவதுதான், தொல்பொருள் ஆய்வாளரின் முக்கிய நோக்கம்.

முத்திரைகள், கல்வெட்டுகள், நினைவு சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகிய அனைத்தும் ஆராயப்படுகின்றன. ஆவணக் காப்பகம், மியூசியாலஜி, பண்டைய நாணய ஆய்வு, கல்வெட்டுகள் ஆகியவை தொல்பொருள் ஆய்வு துறையின் முக்கிய பிரிவுகள்.

யாரெல்லாம் இத்துறைக்கு தகுதியானவர்கள்:

பள்ளி படிப்பை முடித்த பிறகு, நாட்டின் பல பல்கலைகளால் வழங்கப்படும் பி.ஏ. ஆர்கியாலஜி படிப்பை முடிக்க வேண்டும். இதேதுறையில் முதுநிலை படிப்பை மேற்கொள்ள, வரலாற்றில் இளநிலைப் பட்டம் முடித்தவர்கள் மற்றும் வேறு பாடங்களை படித்தவர்கள் தகுதியானவர்கள். ஒரு மாணவர், பண்டைய நாணய ஆராய்ச்சி துறைகளிலோ அல்லது கல்வெட்டு ஆராய்ச்சியிலோ சிறப்பு ஆய்வு மேற்கொண்டு, பயிற்சி பெறலாம்.

இத்துறைக்கு தேவைப்படும் பண்புகள்:

வரலாற்றில் சிறந்த ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் நீண்டகாலம் ஆய்வு செய்வதற்கு தேவையான பொறுமை உள்ளவர்கள் இத்துறைக்கு தகுதியானவர்கள். மேலும், பகுப்பாய்வு திறன் மற்றும் உலகை சுற்றுவதற்கு ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். படைப்பாக்க திறனும், தர்க்கரீதியான அறிவும், கலைகளை ரசிக்கும் தன்மையும் இருக்க வேண்டும். இந்த திறன்கள் இருந்தால்தான், பழங்காலத்தை ஆராயும் ஆர்வம் இருக்கும்.

வேலை வாய்ப்புகள்:

தொல்பொருள் ஆய்வு துறைகள், கலாச்சார மையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பல்கலைகளில் இதுதொடர்பாக உள்ள துறைகளில் வேலைவாய்ப்புகள் உண்டு. ஆர்கியாலஜி கல்வி நிறுவனத்தில் படித்து வெளிவரும் மாணவர்கள், இந்திய ஆர்கியாலஜிகல் சர்வே அமைப்பால் அடையாளம் காணப்பட்டு, புதைந்த பொருட்களை தோண்டி எடுத்தல், தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மற்றும் தொடர்புடைய பணிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுவார்கள்.

மேலும், ஆவணக் காப்பகங்கள், மியூசியங்கள், ஆர்ட் கேலரிகள் போன்றவைகளில் பணி வாய்ப்புகள் உண்டு. இதைத்தவிர, உதவி தொல்பொருள் நிபுணர் பணிக்கு, ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் யு.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிடுகிறது. பிஎச்.டி. முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சுற்றுலா துறையிலும் பல்வேறான பணிகள் உள்ளன. இன்றைய நிலையில், கார்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கான ஆவணக் காப்பகத்தை வைத்து பராமரிப்பதால், அங்கேயும் நிறைய பணி வாய்ப்புகள் உள்ளன.

இந்த படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

சென்னை பல்கலைக்கழகம்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் - வாரணாசி.

ஆஜ்மீர் பல்கலைக்கழகம் - ராஜஸ்தான்.

பாட்னா பல்கலைக்கழகம் - பாட்னா.

பஞ்சாப் பல்கலைக்கழகம் - சண்டிகர்.

அலகாபாத் பல்கலைக்கழகம்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us