ஜூன் 23, 2011 12:00 AM
ஜூன் 23, 2011 12:00 AM
அ நிறம் | அளவு
உள்நாட்டில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகளில், ஏராளமான பொறியியல் இடங்கள் காலியாக இருக்கையில், ஏன் பலரும் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல. சமீபத்திய கண்டுபிடிப்புகளைப் பற்றிய அறிவு மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை தருவது போன்றவை முக்கியமான காரணங்கள். மேலைநாடுகள் மட்டுமின்றி, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் பொறியியல் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு
காரணம் அவற்றில் உள்ள செயல்முறை கல்வி, சர்வதேச தொடர்புகள் மற்றும் நிறைய வேலைவாய்ப்புகள் போன்றவையே. சர்வதேச கல்வியின் முக்கியத்துவத்தை, உலகளாவிய நிறுவனங்கள் அதிகளவில் அங்கீகரிக்கின்றன. இந்தியாவில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் எது என்பதை பற்றி ஒரு உறுதியான கணிப்பு இல்லாததால், பல இந்திய மாணவர்கள், வெளிநாட்டிற்கு விண்ணப்பிக்கிறார்கள்.பொறியியல்
படிப்பிற்காக வெளிநாட்டு பல்கலையை தேர்வு செய்வதும் அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் குவிந்திருப்பதால், எதை தேர்வுசெய்வது என்பதில் பெரும் குழப்பமே ஏற்பட்டுவிடும். அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இருக்கின்றன. பல வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், தங்களுக்குள் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்டு, மாணவர்களை பரஸ்பரம் அனுமதிக்கின்றன.ஒரு
வெளிநாட்டு கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வதில், நீண்டகால திட்டங்கள், வேலைவாய்ப்புகள், கற்பித்தல் மொழி, அணுகும் தன்மை, கற்பதற்கான செலவு போன்ற பல அம்சங்கள் பங்கு வகிக்கின்றன. தற்போதைய நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வெளிநாட்டு பொறியியல் படிப்பிற்கான மாணவர்களை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ளன.மாணவர்
சேர்க்கை நிபந்தனை:ஒவ்வொரு
நாடும் தனக்கென தனிவித மாணவர் சேர்க்கை செயல்முறையைக் கொண்டிருக்கும். ஆனால் பல நாடுகளிலும் பொதுவாக இருக்கக்கூடிய சில விதிமுறைகளை இங்கே காணலாம்.*
மேல்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் நாட்டிற்கு சமமான உயர்நிலைப் பள்ளி கல்வியை முடித்திருக்க வேண்டும். அது 12 ம் வகுப்பு சி.பி.எஸ்.சி. படிப்பாக கூட இருக்கலாம் அல்லது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் படிப்பாக இருக்கலாம். அதேசமயம், படிப்பில் சிறப்பான செயல்பாடும், மதிப்பெண்ணும் இருப்பது முக்கியம்.*
சிறந்த ஆங்கில புலமை இருக்க வேண்டும். மேலும், TOEFL மற்றும் IELTS தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று உங்களின் ஆங்கில அறிவை நிரூபித்திருக்க வேண்டும்.*
வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், தன்னில் சேர விரும்பும் மாணவர்கள் SAT-I மற்றும் SAT-II தேர்வை எழுதியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவிலுள்ள பல பொறியியல் படிப்புகளுக்கு, மேற்கூறிய 2 தேர்வுகளின் முடிவுகள் அவசியம்.*
மாணவர்களின் பாடமல்லாத, இதர திறன்சார்ந்த நடவடிக்கைகளுக்கும் சில வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதேசமயம் இதை பல கல்வி நிறுவனங்கள் படிப்பிற்கான தகுதியாக கருதவில்லை.*
சில நாடுகளில், பட்டப்படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.*
பல வெளிநாட்டு பொறியியல் படிப்புகளில், நீங்கள் உயர்நிலை கல்வியில் 4 வருடங்கள் கணிதப் பாடத்தை நன்றாக படித்திருப்பீர்கள் என்று நினைத்து உங்களை சேர்த்துக் கொள்வார்கள். அதேசமயம், சில கல்வி நிறுவனங்களில் கணிதத்துடன் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களும் முக்கியத்துவம் பெறும்.விண்ணப்பிக்கும்
காலம்:ஒரு
படிப்பானது தொடங்கப்படுவதற்கு முன்பாக, சேர்க்கை நடைமுறைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இதனால், 10 ம் வகுப்பிலேயே, மாணவர்கள், சேர்க்கைக்கான தகுதிகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தகுதி தேர்வுகளை சிறப்பாக எழுத, சிறந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.ஒரு
வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில் ஒரு மாணவர் விண்ணப்பிக்கும் முன்பாக, சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.*
உங்களின் எதிர்கால தொழில் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டம் இருக்கிறதா?*
அங்கீகாரம்.*
படிப்பிற்கான செலவு.*
படிப்பின் கால அளவு.ஆன்லைன்
விண்ணப்பமுறை சில ஆண்டுகளாகவே வழக்கத்தில் இருப்பதால், விண்ணப்பித்தல் என்பது எளிதான ஒன்றாகவே உள்ளது. பொதுவாகவே, அனைத்து கல்வி நிறுவனங்களும், சில முக்கிய விஷயங்களையே எதிர்பார்க்கின்றன.*
உங்கள் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் ஜர்னல்களில் வெளியான உங்களின் ஏதேனும் ஆராய்ச்சி பேப்பர்கள்.*
உங்களது ஆசிரியர்களின் பரிந்துரை கடிதங்கள்.*
தனிப்பட்ட அறிக்கைகள்.*
நிதி ஆதார ஆவணங்கள்.போன்றவை
முக்கியமான அம்சங்கள். இவை, ஏறக்குறைய அனைத்து வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கவும் அவசியமானவை. மற்றபடி, உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கல்வி நிறுவனத்தைப் பற்றி அதிகமான விவரங்கள் தெரிய வேண்டுமெனில், அந்தந்த கல்வி நிறுவன வலைதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
