தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஐ.டி. துறையில் மோசடியை தவிர்க்கவும்.....

ஐ.டி. துறையில் மோசடியை தவிர்க்கவும்.....

ஐ.டி. துறையில் மோசடியை தவிர்க்கவும்.....


ஜூன் 23, 2011 12:00 AM

ஜூன் 23, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 23, 2011 12:00 AM ஜூன் 23, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமீபத்தில், போலி பைலட் லைசன்ஸ் முறைகேடு வெளிவந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியாவில் பல விமான நிறுவனங்கள், தங்களின் வியாபாரத்தை பெரியளவில் தொடங்கிய நேரம்தான், இந்த மோசடி அம்பலமானது. விமானிகளின் தேவை அதிகளவில் வேண்டியிருந்ததால், பல கல்வி நிறுவனங்கள், பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்தன. அப்படியானால், பல காலமாக(இடையில் சில காலம் தவிர) வளர்ச்சி நிலையில் இருக்கும் ஐ.டி. துறையில், மோசடிகள் இருக்காதா என்பதுதான் கேள்வி.

ஐ.டி. துறையில் ஒரு தடவை போலி சான்றுக்காக பிடிபட்டால், வாழ்க்கையே மிகவும் சிரமமாகிவிடும். ஒரு நல்ல வேலையை விரைவாக பெற வேண்டும் மற்றும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற நெருக்கடி உடையவர்கள் போலித்தனம் செய்ய துணிகின்றனர். அவர்கள், நெருக்கடி மற்றும் கஷ்டத்தில் இருந்து விடுபட, மோசடியே ஒரே எளிமையான மற்றும் சிறந்த வழி என்று நினைக்கின்றனர். இது தவறு என்று அவர்கள் பிற்காலத்தில் உணரும்போது, நடந்ததை சரிசெய்ய முயல்கின்றனர் அல்லது அதை மறந்துவிட்டு, அடுத்து ஆகவேண்டியதைப் பார்க்கிறார்கள்.

உங்களின் அனுபவத்தையோ அல்லது திறமையையோ போலியாக காட்டி மனிதர்களை ஈர்க்காதீர்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு அதையே கூறுங்கள் என்றுதான், நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

மோசடி செய்த பலரிடமும் விசாரித்தால், அவர்கள் அதற்கு பின்னணியாக ஒரு சென்டிமென்ட் கதையை கூறுகிறார்கள். தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டியிருந்தது மற்றும் ஒரு குறிப்பிட்ட கடமையை முடிக்க வேண்டியிருந்தது போன்ற காரணங்களாலேயே, இந்த மோசடியில் ஈடுபட வேண்டியிருந்தது என்கிறார்கள். அதாவது, அவர்களுடைய தகுதிகளையும், திறமைகளையும் வளர்க்க கடினமாக இருந்ததால், எளிய வழியான மோசடியை கையாண்டார்கள் என்பதே இதன் பொருள்.

பல ஐ.டி. நிறுவனங்களுக்கு, ஊழியர்களின் பின்னணிகளை ஆராய நேரம் இருப்பதில்லை என்பதால், பலரும் மோசடியான ஆதாரங்களை காட்ட தயங்குவதில்லை. சிலர், இதுபோன்ற மோசடிகளால் ஒன்றும் ஆகிவிடாது என்று சவால்விட்டு, பலரையும் அதுபோல் செய்யத் தூண்டுகின்றனர். ஆனால் அவர்கள் நினைப்பது தவறு.

ஐ.டி. துறைசார்ந்த ஒருவர், பின்னணி பற்றி எந்த நிறுவனமும் ஆராயாது என்று சவால்விட்டு, போலியான சான்றுகளை சமர்ப்பித்து, ஒரு நடுத்தர நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அந்த நடுத்தர நிறுவனத்தை, சிறிதுகாலம் கழித்து ஒரு பெரிய நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன்பிறகு, அந்த நடுத்தர நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களின் பின்னணிகளும் ஆராயப்பட்டன. இந்த குறிப்பிட்ட நபர் மாட்டிக்கொண்டு அவதிக்குள்ளானார். இப்போது வருந்திக்கொண்டுள்ளார். முன்பே, நல்லது சொல்லும்போது கேட்டிருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்காது.

ஒரு ஐ.டி. பயிற்சி நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் தரமானது, அதில் படித்த எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது என்பதை பெரிதும் சார்ந்துள்ளது. சில பயிற்சி நிறுவனங்களின் இணையதளங்களைப் பார்த்தால், வேலைவாய்ப்பு என்ற பகுதி முக்கியத்துவப் படுத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் அவர்கள் பலரையும் கவர முயற்சிப்பார்கள். இதைப் பார்க்கும் ஒரு சாதாரண நபருக்கு, இந்த ஐ.டி. நிறுவனத்தில் பயிற்சி பெற்றால், கட்டாயம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும். இதுதான் அவர்களின் வியாபார தந்திரம்.

ஐ.டி. பயிற்சி பெற்றும், வேலை கிடைக்காமல் இருக்கும் நபர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பல நிறுவனங்கள் இன்று முளைத்துள்ளன. அதுபோன்ற நிறுவனங்களில், ஒரு குறிப்பிட்ட அளவிலானவை, தங்களிடம் பயிற்சி பெற்றவர்களை மோசடி செய்யத் தூண்டுகின்றன. தயங்குபவர்களுக்கு தைரியம் ஊட்ட, "பல மாணவர்கள் இவ்வாறு மோசடி செய்து நல்ல பணிகளை பெற்றுள்ளார்கள்" என்று கூறி அந்த நிறுவனங்கள் தைரியம் கொடுக்கின்றன. ஆனால் இதன் விளைவு பலரை சிறையில் தள்ளியிருக்கிறது, பலரை வாழ்நாள் முழுவதும், எங்கும் வேலைசெய்ய விடாமல் அவதிப்பட வைத்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, இதுபோன்ற பயிற்சி நிறுவனங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஐ.டி. நிறுவனங்கள் நடத்தும் நேர்காணல்கள் பொதுவாக, தரமுள்ளவையாக இருப்பதில்லை. அவர்கள் அறிவை மட்டுமே சோதிக்கிறார்கள், திறனை சோதிப்பதில்லை. எனவே, நல்ல மனப்பாட திறனுள்ள ஒருவர், இதுபோன்ற நேர்காணல்கள் மற்றும் நேர்காணல் தேர்வுகளில் எளிதாக வென்றுவிடுவார். எனவே, இந்த அறிவு சோதனை முறையை மாற்ற வேண்டும்.

ஏனெனில், பல பெரிய ஐ.டி. நிறுவனங்கள் நேர்காணலில் நடத்தும் எழுத்து தேர்வுகளில், எந்த மாதிரியான கேள்விகளை கேட்கின்றன மற்றும் அதற்கான பதில்கள் என்ன என்பதை பலர் இணையத்தளங்களிலேயே கண்டுபிடித்து விடுகிறார்கள். எனவே, திறன் சோதனை முறையே சிறந்தது. திறன் சோதனை தேர்வுகள் நடந்தால், மோசடி முன்னனுபவ சான்றுகள் கொடுப்பவர்கள் மாட்டிக் கொள்வார்கள். ஏனெனில் அவர்களால் தாங்கள் குறிப்பிட்டுள்ள அனுபவத்திற்கான திறனை நிரூபிக்க முடியாது. எனவே, இந்த விஷயத்தில் ஐ.டி. நிறுவனங்களும் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

நாஸ்காம்:

மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய சங்கம்தான், நாஸ்காம் எனப்படுகிறது. இந்த நாஸ்காம், மோசடி சான்றளிப்பவர்களின் ஒரு பட்டியலை வைத்துள்ளது. ஐ.டி. நிறுவனங்கள், தங்களுக்கு தெரிந்த மோசடி பேர்வழிகளின் பெயர்களை இங்கே தெரிவிக்கலாம். இதன்மூலம் மற்ற நிறுவனங்கள், இவர்களைப் பணியில் எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். ஆனால் இதன் பயன்விளைவு சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், நாஸ்காமில் பதிவுசெய்த பல நிறுவனங்களிலும் மோசடி பேர்வழிகள் பணிபுரிகிறார்கள்.

மேலும், மோசடி சான்றுகளை தயாரித்து, அதன்மூலம் வேலைபெற உதவும் பயிற்சி நிறுவனங்களின் பட்டியலும் உண்டு. அந்த பட்டியல், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, அதன்மூலம், அதுபோன்ற நிறுவனங்களில் பயிற்சி பெற்று வெளியில் வரும் நபர்களைக் கண்காணிக்க ஏதுவாகிறது.

 

 

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us