தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பால்பண்ணைத் துறையில் பணி வாய்ப்புகள்

பால்பண்ணைத் துறையில் பணி வாய்ப்புகள்

பால்பண்ணைத் துறையில் பணி வாய்ப்புகள்


ஜூன் 24, 2011 12:00 AM

ஜூன் 24, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 24, 2011 12:00 AM ஜூன் 24, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பால் பண்ணைத் தொழில், ஆதிகாலம் தொட்டே, இந்தியாவின் முக்கிய தொழில்களில் ஒன்றாக இருக்கிறது. இத்தொழிலில், அதிக பால் தரும் கால்நடைகளை வளர்ப்பது, கால்நடை பராமரிப்பு, பால் சேகரித்தல் மற்றும் பால் பொருட்கள் தயாரித்தல் போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கியது இந்த துறை.

இத்துறையில் பணிபுரிய, தகுதிவாய்ந்த பொறியாளர்கள், பால் உற்பத்தி நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள், தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் குழுவினர் போன்றோர் தேவைப்படுகின்றனர். தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்(NDDB), தேசிய அளவில், இத்துறையின் உயர்ந்த அமைப்பாகும். பால்வளத் துறையின் மேம்பாட்டிற்கு இந்த அமைப்பு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கள ஆய்வு:

கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து, கால்நடை வளர்ச்சி, இனப்பெருக்கம், கால்நடை இயங்கியல் மற்றும் போதுமான அளவிலும், பொருளாதார நிலையிலும், பால் தாயாரிப்பை நிர்வகித்தல் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வுசெய்தல்.

பால் பதப்படுத்துதல் செயல்முறையானது, வேதியியல், மைக்ரோபயாலஜி, தரக்கட்டுப்பாடு, பால் மற்றும் பால் பொருட்களின் தொழில்நுட்பம், பால் பண்ணை சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.

இத்துறைக்கான தகுதிகள்:

மேல்நிலைப் படிப்பில், வேதியியல், இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களைப் படித்து, ஒட்டுமொத்தமாக, குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களை பெற்றவர்கள், 2 வருட பால்பண்ணை டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றவர்கள். மேலும் பால்பண்ணைத் தொழில்நுட்பத்தில் 4 வருட பி.டெக் படிப்பும் உள்ளது. நுழைவுத்தேர்வின் மூலம் இப்படிப்பிற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இத்துறையின் வேலைவாய்ப்புகள்:

அரசு மற்றும் தனியார் துறைகளில், பால்பண்ணைத் தொழில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. பால் பண்ணைகள்இ கூட்டுறவு துறைகள், கிராம வங்கிகள், பால் பொருள் பதப்படுத்தும் நிலையங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைகள், தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் போன்ற பல இடங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

பால்பண்ணை தொழில்நுட்ப வல்லுநர்கள், தரக்கட்டுப்பாட்டு துறைகளிலும் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் இந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், சொந்தமாகவே சிறிய அளவிலான பால் நிலையங்கள், பால் பொருள் தயாரிப்பு மையங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு மையங்கள் ஆகியவற்றை நிறுவி சம்பாதிக்கலாம். இதைத்தவிர அவர் தனியார் துறைகளில் ஆலோசகராகவும் பணியாற்றலாம்.

இத்துறையில் வழங்கப்படும் சம்பளம்:

பொதுவாக, பால்பண்ணை தொழில்நுட்ப பட்டதாரிகள், பால் நிலையங்களில், பயிற்சிபெறுபவர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் மாதம் ரூ.5000 உதவித்தொகையாகப் பெறுவார்கள். அதிகாரி நிலையில் உள்ளவர்கள், மாதம் ரூ.12000 வரை பெறுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us