தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பணத்தை அள்ளித்தரும் மாடலிங் துறை

பணத்தை அள்ளித்தரும் மாடலிங் துறை

பணத்தை அள்ளித்தரும் மாடலிங் துறை


ஜூன் 25, 2011 12:00 AM

ஜூன் 25, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 25, 2011 12:00 AM ஜூன் 25, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொருளாதார தாராளமய உலகில், எங்கும் நவீனம் மற்றும் எதிலும் நவீனம் என்று ஆகிவிட்ட நிலையில், உலகமே வணிகமயமாகிவிட்டது. இந்த வணிக உலகில், மாடலிங் துறையானது, ஏராளமான ஆண்களையும், பெண்களையும் தன்பால் கவர்ந்திழுக்கிறது. இது ஒரு கவர்ச்சியான துறை என்றாலும், மலர் தூவிய படுக்கை என்று நினைத்துவிடக் கூடாது.

இந்தத் துறையில் முன்னுக்கு வர, மாதக்கணக்கில் மற்றும் வருடக்கணக்கில் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். மாடலிங் தொடர்பாக நாம் லயித்து அமர்ந்து, தொலைக்காட்சிகளில் பார்க்கும் ஷோக்கள் கடும் உழைப்பில் உருவானவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மாடலிங் துறையில் இருக்கும் ஒரு மாடல், பார்ப்பதற்கு ரம்மியமாகவும், எதிர் நபர்களை பிரமிக்க செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். இது எளிதல்ல. இதற்கு கடும் உழைப்பும், சுயக் கட்டுப்பாடும் தேவை. உணவுக்கட்டுப்பாடு முக்கியம். தோற்றத்தை மிக நேர்த்தியாக பராமரிக்க வேண்டியிருப்பதால், சமயத்தில் பட்டினியாகக்கூட இருக்க வேண்டிவரும்.

ஒரு மாடலுக்கு அனைத்து வகையான ஆடைகளும் கச்சிதமாகப் பொருந்தி அழகாக காட்சித்தர வேண்டும். மாடலிங் தொழிலில் பல வகைகள் உள்ளன. ஆடைகளுக்கான மாடலிங், புகைப்பட அமர்வுகள் மற்றும் தொலைக்காட்சி வணிக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விளம்பரங்களுக்கான மாடலிங் என்ற பல வகைகளில் உள்ளன.

தோற்றம் மற்றும் உடல் கூறுகள்

ஒரு மாடலாக இருப்பவரின் முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவரின் உடல் தோற்றம்தான் முக்கியம். தேவையான அளவில் உயரமாகவும், பார்ப்பவரை கவரும் விதமாகவும், பிரமிப்பூட்டும் விதமாகவும், ஸ்லிம் தோற்றத்திலும் இருக்க வேண்டும். அதேநேரத்தில், உணர்வுகளை வெளிக்காட்டும் முகபாவனை, சொக்க வைக்கும் சிரிப்பு மற்றும் சிறப்பான உடலசைவுகள் வேண்டும். மேலும் இத்துறையில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அடிக்கடி மாறிச்செல்ல வேண்டும் என்பதால், ஒரு மாடல், பயணம் செய்வதில் ஆர்வமுள்ளவராக இருப்பதும் அவசியம்.

பயிற்சி

மாடலிங் தொழில் என்பது ஒரு வெற்றிகரமான மாடலுக்கு, வசீகரமான வாழ்க்கைமுறையை ஏற்படுத்தித் தருவதோடு, பணத்தையும், புகழையும் அள்ளித் தருகிறது. இத்தொழிலுக்கான முறையானப் பயிற்சி மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமே சாத்தியம். இத்துறையை தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள், பயிற்சி மையங்களின் மூலம் பலவித தொழில்சார் நன்மைகளைப் பெறுகிறார்கள்.

இத்துறையில் தற்போதைக்கு குறைந்தளவு பயிற்சி நிலையங்களே உள்ளன. சில பேஷன் இல்லங்கள், பேஷன் ஷோ அமைப்பாளர்கள் மற்றும் சில விளம்பர நிறுவனங்கள், மாடலிங் துறையில் கால்பதிக்க விரும்புபவர்களுக்கு பயிற்சியளிக்கின்றன. இத்துறைக்காக விண்ணப்பம் செய்பவர்கள், தங்களின் பயோடேட்டாவுடன், அவர்களின் விதவிதமான புகைப்படங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். அந்த புகைப்படங்கள், உடலின் தன்மை, முக பாவனை, முக லட்சணம், ஆடை ரசனை உள்ளிட்ட பல அம்சங்களை வெளிப்படுத்துவதாய் இருக்க வேண்டும்.

மேலும் வயது,உயரம், மார்பு சுற்றளவு, இடுப்பு அளவு, கண்களின் நிறம் மற்றும் முடியின் நிறம் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.

சம்பளம்

ஆரம்பத்தில் ஒரு ஷோ -க்கு ரூ.4000 முதல் ரூ.6000 வரை ஒரு மாடல் பெறுவார். 2 அல்லது 3 வருட அனுபவத்திற்கு பிறகு, ஒரு ஷோ -க்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை பெறுவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us