தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஜெம்மாலஜி துறையில் பணிபுரிய விருப்பமா?

ஜெம்மாலஜி துறையில் பணிபுரிய விருப்பமா?

ஜெம்மாலஜி துறையில் பணிபுரிய விருப்பமா?


ஜூன் 28, 2011 12:00 AM

ஜூன் 28, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 28, 2011 12:00 AM ஜூன் 28, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரத்தினக் கற்கள், வைரங்கள், நகைத் தயாரிப்பு மற்றும் நகை வடிவமைப்பு போன்ற துறைகளைப் பற்றி படிப்பது ஜெம்மாலஜி எனப்படும். வைரங்கள் மற்றும் பிற ரத்தினங்கள் மற்றும் தங்க நகை தயாரிப்பு பற்றிய தொழில்நுட்பப் படிப்பாகும் இத்துறை. இன்றைய நிலையில் தொழில்நுட்பம் நன்கு வளர்ந்துள்ளதால், கணினி அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விலையுயர்ந்த கற்களின் அமைப்பு மற்றும் பண மதிப்பு அடிப்படையில், அவற்றை அடையாளப்படுத்தி, தரப்படுத்தி மற்றும் வகைப்படுத்துவது ஒரு ஜெம்மாலஜிஸ்டின் பணியாகும். மேலும் அவை சேதமாகாமல் தடுக்கும் வழிகளையும் அவர்கள் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். விலையுயர்ந்த கற்கள்(ஜெம்ஸ்) மற்றும் தங்க நகை தொழிலானது, இந்தியாவில் அதிக பணம் புரளும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவின் வைரத் தொழில்துறையானது, உலகளவில் புகழ்பெற்ற ஒன்றாகும்.

மதிப்புத் தரக்கூடியதாகவும், ஏற்றுமதிப் பொருளாகவும், அழகுப் பொருளாகவும் இருப்பதால் வைரங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. நமது குணாதிசயத்திலும், அதிர்ஷ்டத்திலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பொருளாக விலையுயர்ந்த கற்கள் இன்றைய நிலையில் மதிக்கப்படுகின்றன. மேலும், தங்கம் மற்றும் வைரங்கள் சேர்க்கப்பட்டு, புதிய புதிய டிசைன்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுவதால், இத்துறையில் நிபுணர்களுக்கான தேவை அதிகம் உள்ளது.

மக்களின் ரசனைகள் மற்றும் மாறும் சூழலைக் கருத்தில்கொண்டு, சந்தையில் செயல்படுபவர்களாக அந்த நிபுணர்கள் இருக்க வேண்டும்.

இத்தொழிலுக்கு தேவைப்படும் பண்புகள்

நல்ல கிரகிக்கும் திறன், கற்பனை மற்றும் படைப்பாக்கத் திறன், வண்ணப் பொருத்தம் பற்றிய அறிவு, அழகுணர்ச்சி, பாரம்பரிய வடிவமைப்புகளைப் பற்றிய அறிமுகம், கடின உழைப்புடன் கூடிய சிறந்த தகவல்தொடர்புத் திறன் போன்றவை அவசியம். ஒருவர் இத்துறையில் வடிவமைப்பாளர், மேலாளர், உற்பத்தியாளர், ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப மதிப்பீட்டாளர் அல்லது இத்துறை சார்ந்த கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் போன்ற பலவிதப் பணிகளில், தனக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்யலாம்.

இத்துறை சார்ந்த பலவிதப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

Arch Academy of Design, Jaipur - www.archedu.org

Delhi Gems and Jewellery Institute, New Delhi

Gemcraft Jewellery Institute - New Delhi

Gemmological Institute of India - Mumbai

Indian Institute of Gemmolgy - New Delhi

Indian Institute of Jewellery - Mumbai

St. Xavier's College - Mumbai

Shingar Institute - Kolkatta.

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us