தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ரெசியூம் தயாரிக்க சில யோசனைகள்

ரெசியூம் தயாரிக்க சில யோசனைகள்

ரெசியூம் தயாரிக்க சில யோசனைகள்


ஜூலை 06, 2011 12:00 AM

ஜூலை 06, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 06, 2011 12:00 AM ஜூலை 06, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களில் இருந்து பணி அனுபவம் பெற்றவர் வரை வேலைக்காக விண்ணப்பிக்க "ரெசியூம்' தயார் செய்வது அவசியம். "ரெசியூம்', "கரிகுலம் வீட்டே' (சி.வி.,) என்று அழைக்கப்படும். இதை தயார் செய்வதில் அதிக கவனம் தேவை. விண்ணப்பதாரரைப் பார்க்காமல், அவரை அடையாளம் கண்டு கொள்ள "ரெசியூம்' உதவுகிறது. இதை சிறப்பாக தயாரித்து, தேர்வாளரை கவர்ந்தாலே பணி ஓரளவுக்கு உறுதியாகிவிடும்.

"ரெசியூம்' தயாரிக்கும் சில வழிமுறைகள்:
* இரண்டு பக்கத்துக்கு உள்ளாக "ரெசியூமை' முடித்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் படிக்க யாருக்கும் நேரம் இருக்காது. அதற்குள் தங்களது முழு விபரத்தையும் பதிவு செய்து விடுங்கள்.

* நீங்கள் எதற்காக பணிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தெளிவாக முதலில் கூறிவிட வேண்டும். உங்களது தனித்திறமைகளை பற்றி சிறு அறிமுகத்தையும் முதலில் பதிவு செய்யலாம்.

* உங்களது இமெயில் முகவரி, மொபைல் நம்பர் போன்ற முக்கிய தகவல்களை "பேன்ஸி'யான எழுத்துக்களில் குறிப்பதை தவிர்க்கவும். தெளிவாக புரியும் எழுத்து வகைகளை மட்டுமே பயன்படுத்தவும். இமெயில் முகவரியை தேவையில்லாத வார்த்தைகளைக் கொண்டு உருவாக்குவதை தவிர்க்கவும்.

* பிராக்டிகல், புராஜக்ட் போன்றவற்றை குறிப்பிடும் போது அதன் தலைப்பு, முக்கிய அம்சத்தை மட்டும் குறிப்பிட்டாலே போதும்.

* விளையாட்டு வீரராக இருந்தால் குழு விளையாட்டா அல்லது, தனிநபர் விளையாட்டா என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும்.

* உங்களது தனித்திறமையை தெளிவாக குறிப்பிட வேண்டும். "புல்லட்' பயன்படுத்தி ஒரு வரிக்கு மிகாமல் குறிப்பிடலாம். "ரெசியூமில்' எல்லா விபரமும் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.

* ஒரு நிறுவனத்துக்கு "ரெசியூமை' அனுப்பும் போது கையெழுத்திடாமல் அனுப்பக் கூடாது. இடம், தேதி ஆகிய வற்றையும் குறிப்பிட வேண்டும். நிறுவனம் புகைப்படம் கேட்டிருந்தால் அதையும் ஒட்டி அனுப்ப வேண்டும்.

* தங்களது படிப்பு விபரத்தை குறிப்பிடும் போது, நிறுவனத்துக்கு தகுந்த படி குறிப்பிடவும். சில நிறுவனங்களுக்கு பள்ளிப்படிப்பு முதல் குறிப்பிட வேண்டிய திருக்கும். சில நிறுவனங்களுக்கு அதிகபட்ச படிப்பை கூறினாலே போதும். எது தேவையோ அதை மட்டும் குறிப்பிடவும்.

* குறிப்பிட்ட கால அளவுக்குள் "ரெசியூமை' "அப்டேட்' செய்வது அவசியம். பயிற்சி வகுப்புகள் முடிக்கும் போதும், பணி அனுபவம் கூடும் போதும் "அப்டேட்' செய்வது நலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us