தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அழகுபொருள் வடிவமைப்புத் துறை

அழகுபொருள் வடிவமைப்புத் துறை

அழகுபொருள் வடிவமைப்புத் துறை


ஜூலை 10, 2011 12:00 AM

ஜூலை 10, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 10, 2011 12:00 AM ஜூலை 10, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மனித வாழ்வு நவீன மயமாகி வருகையில், அழகுப் பொருட்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. ஹேண்ட்பேக், ஸ்கார்ப், பெல்ட், நயமான செருப்புகள் மற்றும் ஷ¤க்கள், பெண்களுக்கான அழகூட்டப்பட்ட பணப்பைகள் மற்றும் நகை அணிகலன்கள் போன்றவை இன்றைய வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இத்தகைய பொருட்களை தயாரிப்பவர்கள் மற்றும் வடிவமைப்பவர்கள், மக்களின் மாறிவரும் வாழ்க்கைமுறை, தேவைகள் மற்றும் நளினம் போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். நகை வடிவமைப்பாளர்கள், தொழில் செய்துகொண்டிருக்கும் ஒரு நகை உற்பத்தியாளர்களுக்காக பணியாற்றலாம் அல்லது தேவைப்படும்போது வந்து மாடல்களை செய்து கொடுக்கலாம். நகை உள்ளிட்ட அணிகலன்கள் தவிர, பிற அலங்கார பொருள் வடிவமைப்பாளர்கள், நிரந்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக பணியாற்றலாம். பள்ளிப் படிப்பு அல்லது பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு இந்த வடிவமைப்புத் துறையில் டிப்ளமோ படிப்புகள் உள்ளன மற்றும் கல்லூரி அல்லது பல்கலையில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகள் உள்ளன.

இத்தொழிலுக்கான தனிப்பட்ட பண்புகள்

கலைநயமிக்க படைப்பாக்கத் திறனும், கற்பனை செய்து தெளிவாக வரையும் திறனும் இருக்க வேண்டும். நகை வடிவமைப்பில் ஒரு வெற்றிகரமான மனிதராக இருக்க, வாடிக்கையாளரின் தோற்றம் மற்றும் உருவ அம்சத்திற்கு ஏற்ப சிறந்த வடிவமைப்பைத் திட்டமிடும் வல்லமை இருக்க வேண்டும். பாரம்பரிய முறையிலான வடிவமைப்பாக இருந்தாலும், நவீன முறையிலான வடிவமைப்பாக இருந்தாலும் அல்லது இரண்டையும் கலந்த முறையாக இருந்தாலும், அந்த நகையை காலத்தின் ரசனைக்கேற்ப அல்லது அனைவரையும் ஈர்க்கும்படி வடிவமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சூழலுக்கேற்ப மாறும் திறன் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான முக்கியத் தேவையாகும். அதேசமயம், இவையனைத்தும் அதீத ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

இத்துறையில் கிடைக்கும் சம்பளம்

ஆரம்ப நிலையில் ஒரு வடிவமைப்பாளர் மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை பெறுவார். பின்னர் அவர் அனுபவம் பெற்றபிறகு, மாதம் ரூ,1,00,000 வரை பெறுவார். ஜெம்மாலஜி படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களே நகை வடிவமைப்பு படிப்புகளையும் வழங்குகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us