தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பறவை வளர்ப்புத் தொழில்துறை

பறவை வளர்ப்புத் தொழில்துறை

பறவை வளர்ப்புத் தொழில்துறை


ஜூலை 10, 2011 12:00 AM

ஜூலை 10, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 10, 2011 12:00 AM ஜூலை 10, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருகிவரும் மக்கள்தொகையால், பறவை வளர்ப்புத் தொழில் நடவடிக்கைகளை அதிகப்படுத்தியிருக்கின்றன. கோழிகள், வான்கோழிகள், வாத்துக்கள் மற்றும் கின்னிக் கோழிகளை, முட்டைகள் மற்றும் இறைச்சிக்காக வளர்ப்பது, கால்நடைப் பராமரிப்பில் ஒரு பகுதியாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, அசைவப் பிரியர்களின் முக்கிய உணவாக இருப்பதால், கோழி வளர்ப்பே பிரதான தொழிலாக இருக்கிறது.

பணி வாய்ப்புகள்

பறவை வளர்ப்பு என்பது பெருமளவில் சுயதொழில் சார்ந்ததே ஒழிய, கஷ்டப்பட்டு வேலைத்தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது ஒரு நல்ல வருமானம் தரும் தொழிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பறவை வளர்ப்புத் தொழிலில், முட்டைகள் மற்றும் இறைச்சியின் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் பிராய்லர் கோழிகள் என்றும், முட்டைக்காக வளர்க்கப்படுபவை முட்டையிடும் கோழிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சிலவகை கோழிகள் வருடத்திற்கு 300 முட்டைகள் வரை இடும். கோழிகளின் அதிகபட்ச ஆயுள்காலம் 6 வருடங்கள். தேவையான பொருளாதார வசதியும், பறவை வளர்ப்பு பற்றிய படிப்பும், பயிற்சியும், அடிப்படை அறிவும் மற்றும் தொழில்முனையும் திறனும் கொண்டவர்கள் இத்தொழிலில் சுயமாக ஈடுபடலாம்.

இத்தொழிலுக்குத் தேவைப்படும் பண்புகள்

கற்பனைத் திறனும், பறவை வளர்ப்புத் தொழிலில் ஏற்படும் சிக்கலான பிரச்சினைகளை தீர்க்கும் திறனும் இருக்க வேண்டும்.

இத்துறையில் இருக்கும் பணி வகைகள்

மரபியல் நிபுணர்

முன்பெல்லாம், பறவை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மரபணு தொடர்பான அறிவியல் அறிவு எதுவும் இல்லாததால், ஏதாவது ஒரு நோய் தாக்கி, அவை பெருமளவில் இறக்கையில் பெருத்த நஷ்டம் ஏற்படும். ஆனால் தற்போது கோழிகளை உற்பத்தி செய்வதில் சிறந்த அறிவியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. செயற்கை முறையில் குஞ்சு பொறிக்க வைக்கும் மையங்களில் மரபணு நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டு, தரமான பறவைகள் உற்பத்தி நடைபெறுகிறது. மற்றபடி இந்த மையங்களில், மேலாளர், விற்பனை பிரதிநிதி மற்றும் உதவியாளர் போன்ற வேறுபல பணி நிலைகளும் உள்ளன.

மருந்துகள் தயாரித்தல்

பறவை வளர்ப்புத் தொழிலில் இருக்கும் மிரள வைக்கும் பிரச்சினையே திடீரென நோய்கள் தாக்குவதுதான். இதனால் அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். எனவே நோய் தடுப்புத் திறையில் தகுதி வாய்ந்த நிபுணர்கள், பேக்டீரியாலஜிஸ்ட், பேதாலஜிஸ்ட் மற்றும் செராலஜிஸ்ட் போன்ற பணி நிலைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். இத்தகைய ஆய்வுகளின் மூலம் பறவைகளைத் தாக்கும் கொள்ளை நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இத்துறையில், விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தகவல்தொடர்பு போன்ற பணிகளுக்கு பயிற்சிபெற்ற மனிதவளம் தேவைப்படுகிறது. மேலும், கால்நடை மருத்துவம் மற்றும் தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் அல்லது பிஎச்.டி. முடித்தவர்கள், இத்துறையில் பயிற்சிபெற்று பணியில் சேரலாம்.

ஊட்டச்சத்து நிபுணர்கள்

ஊட்டச்சத்து என்பது மனிதர்களைப் போலவே, பறவைகளுக்கும் முக்கியமானது. பறவை வளர்ப்பாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, முட்டைகள் மற்றும் சிறந்த இனப்பெருக்கத்திற்கு ஏற்ற லாபம் தரும் ஊட்டச்சத்தினை கண்டறிந்து வழங்கும் ஊட்டச்சத்து நிபுணர்களின் தேவை அதிகமாக உள்ளது. கட்டுபடியாகக்கூடிய விலையில், நல்ல பலன் தரும் ஊட்டச்சத்தினை வழங்க வேண்டும் என்பதால், இத்துறையில் போட்டிகளும் உண்டு.

பறவை வளர்ப்பு தொடர்பான பணிகளில் வேலை வாய்ப்பு

பொறியியல் - பறவை வளர்ப்புத் தொழிலில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், வேளாண்மை மற்றும் டிசைன் இன்ஜினியரிங் போன்ற துறைகள் உள்ளடங்கியுள்ளன. தானியங்கி பறவை வளர்ப்பு கருவியை வடிவமைக்க மற்றும் உருவாக்க மற்றும் உருவாக்கத்தை மேற்பார்வையிட இத்தகைய துறைகளின் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உற்பத்தி

நவீன பறவை வளர்ப்பு தொழிலில் சிக்கலான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே இதில் ஈடுபட, மரபணுவியல், ஊட்டச்சத்து, கருவிகள், நோய் தடுப்பு மற்றும் வர்த்தக விதிமுறைகள் போன்றவை பற்றி அடிப்படை அறிவுள்ளவர்களுக்கு இத்துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

ஒரு பறவை வளர்ப்பு பண்ணையை எப்படி நிர்வகிப்பது என்ற அறிவு ஒரு உற்பத்தியாளருக்கு இருக்க வேண்டும். இல்லையெனில், அதுதொடர்பான பணிகளுக்கு ஒரு தகுதியான மேலாளரை நியமிக்க வேண்டும்.

உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்தல்

பறவை வளர்ப்பு பண்ணையின் வளர்ச்சிக்கும், உணவு உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் மேம்பாடுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பறவை வளர்ப்பு பண்ணை உணவு அறிவியலில் முன்னேற்றங்களை கொண்டுவரக் கூடிய திறமை உள்ளவர்களுக்கு இத்துறையில் கடும் கிராக்கி உள்ளது.

வேளாண் வர்த்தகம்

இதன்பொருள் என்னவெனில், வேளாண்மையுடன் தொடர்புடைய வர்த்தகத்தின் ஒரு பகுதியாகும். நுகர்வோரின் தேவைகளை ஈடுசெய்வதற்கான சேவைகள், உற்பத்தி, பதப்படுத்தல், பலதரப்பட்ட வேளாண் பொருட்களை விநியோகித்தல் போன்றவை அடங்கும்.

தற்போதைய நிலையில், அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் பண்ணைத் தயாரிப்புகளை பேக் செய்து, சந்தைப்படுத்தல் ஆகும். மேலும் பறவை வளர்ப்பு பண்ணையின் வேளாண்மை பிரதிநிதிகளாக, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அக்கவுண்டிங் நிறுவனங்களில், பண்ணை உரிமையாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும்பொருட்டு, பணியில் சேரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us