ஜூலை 10, 2011 12:00 AM
ஜூலை 10, 2011 12:00 AM
இத்துறையில் டிசைன் மற்றும் டெக்னாலஜி என்ற இரு அம்சங்கள் கலந்துள்ளன. இந்தப் படிப்பானது, ஒரு ஒரிஜினல் நூலிழையிலிருந்து, இறுதிவடிவம் பெறும் முழு தயாரிப்பு வரை, டெக்ஸ்டைல் டிசைனின் கருத்தை விளக்கும் வகையில் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இளநிலைப் பட்டப் படிப்பை முடித்தப்பிறகு
துணி மற்றும் கார்மென்ட் தொழிலில் உள்ள வேலை வாய்ப்புகள்
இந்தத் தொழில்துறை
3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது1)
நிறுவனத்தின் அளவு, 2) பேஷன் உள்ளடக்கம், 3) கார்மென்ட் வகை டெய்லரிங் அல்லது கேஷ¤வல் ஆடைகள் அல்லது லேசான ஆடைகள் என்ற அடிப்படைகளில் பிரிவுகள் அமைந்துள்ளன.இத்தகைய வகைப்பாடுகள் நமக்கு சுவாரஸ்யமாக இருந்தாலும்
, பொதுவாக அவை குழப்பம் விளைவிப்பவையாகவும் உள்ளன. உதாரணமாக, ஒரு நிறுவனமானது, இளம் பருவத்தினருக்கான ஆடைகளை விரைவாக தயாரித்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கலாம். இப்பணியில், சந்தை மாற்றங்கள் அடிக்கடி நிகழும் என்பதால், உற்பத்தியானது குறைந்தளவிலேயே நடைபெறுகிறது. விரைவாக உற்பத்தி செய்ய வேண்டுமென்பதால், உற்பத்தியானது அதிக நுட்பத்துடன் செய்யப்படுவதில்லை.அதே சமயத்தில் உயர்வகுப்பை சார்ந்த மக்களுக்கான துணிமணிகளை விற்கும் கடைகளுக்கான ஆடைகளை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்கள்
, தயாரிப்பு நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன. மேலும், பல கார்மென்டுகள், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிகளவிலான ஆடைகளை உற்பத்தி செய்கின்றன. இதிலும் உற்பத்தி நுட்பம் பெரியளவில் பின்பற்றப்படுவதில்லை.இத்துறை சார்ந்த ஒரு நிறுவனத்தில் மக்கள் செய்யும் பணிகள்
, அந்த நிறுவனத்தின் அளவிற்கும், வகைக்கும் மற்றும் சந்தைக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. பெருநகரங்களில் உள்ள, சிறிய, அதேசமயத்தில், உயர்தர உற்பத்தித் தன்மைக் கொண்ட நிறுவனங்களுக்கு, அவற்றில் உள்ள பலவகைப்பட்ட பணிகளுக்கு ஏற்ப திறன்வாய்ந்த பணியாளர்கள் தேவை. இதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள், பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ள முடியும்.டிசைனர் என்பவரின் பணியானது
, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். அதிகளவு ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகையில், குறைந்த விலையில் அமைவதாயும், துணிக்கு ஏற்ற வகையிலும் அவரின் பணி இருக்க வேண்டும். சிறியளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அதிகளவிலான புதிய எண்ணங்கள் தேவைப்படும்.மேலும் நேரடியான ஆடை உற்பத்தியோடு சம்பந்தப்படாத பல பணிகளும் உள்ளன
. அத்தகையப் பணிகளுக்கு தொடர்புடைய பல திறமைகள் தேவை. ஆடைகளின் சில்லறை விற்பனைத் துறையில், தேர்ந்தெடுப்பவர், வாங்குபவர், வணிகர் மற்றும் கார்மென்ட் தொழில்நுட்ப நிபுணர் போன்ற பல பணிகள் உள்ளன.இத்துறை சார்ந்த படிப்புகளை தேர்வுசெய்யும்போது
, உங்களின் வயது, கல்வித் தகுதி, தொழில் லட்சியம், திறன் மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே முடிவுசெய்ய வேண்டும். உங்களுக்கான படிப்பை சரியான முறையில் தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.இத்துறையில் பிரிவுவாரியாக உள்ள வேலைவாய்ப்பு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன
பேஷன் டிசைனிங் துறை
பேஷன் ஒருங்கிணைப்பாளர்
, சாம்ப்ளிங் ஒருங்கிணைப்பாளர், டிசைன் ஒருங்கிணைப்பாளர், பேஷன் டிசைனர், ப்ரீலேன்ஸ் டிசைனர், பேஷன் ஆலோசகர், பேஷன் ஜர்னலிஸ்ட், கோரியோகிராபர்(பேஷன்), கட்டிங் உதவியாளர், வரைபவர், ஸ்டைலிஸ்ட், பேஷன் தொடர்பான கல்வி நிறுவனத்தில் ஆசிரியர், தொழில் முனைதல், துணிக்கடை வியாபாரம் போன்றவை.ஆடை வியாபாரத் துறை
எக்சிகியூடிவ் பயிற்சி பெறுபவர்கள்
, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகர்கள், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர், தரக்கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர், பேஷன் சில்லறை வணிகர், ஏற்றுமதி மேலாளர், ஷோரூம் மேலாளர், வாங்கும் ஏஜென்சிகளின் மேலாளர், பன்னாட்டு நிறுவனங்களில் சர்வதேசப் பணிகளை மேற்கொள்ளுதல், தயாரிப்பு மற்றும் விலைநிர்ணய மேலாளர்.டெக்ஸ்டைல் டிசைனிங் துறை
டெக்ஸ்டைல் டிசைனர்
, எம்ப்ராய்டரி டிசைனர், பட்டுத்திரை வடிவமைப்பாளர், வண்ண அமைப்பாளர், நெசவாளர், சாயம் மற்றும் பிரின்டிங் ஆலோசகர், பேப்ரிக் பகுப்பாய்வாளர், டெக்ஸ்டைல் லேப் மேனேஜர், பேப்ரிக் ஆதார மேலாளர், டெக்ஸ்டைல் தொடர்பான கல்லூரிகளில் பேராசிரியர் பணி.கார்மென்ட் வியாபார நிர்வாகத்துறை
தயாரிப்பு மேலாளர்
, சீனியர் வணிகர், தரக் கட்டுப்பாட்டாளர், ஆவணப்படுத்தல் மேலாளர், வெளிநாட்டு மார்க்கெட்டிங் மேனேஜர், உள்நாட்டு மார்க்கெட்டிங் மேனேஜர், சில்லறை வியாபார வணிகர்.இத்துறை சார்ந்த படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
:College of design, management and technology.
It has its centres at Chennai, Bangalore, Bhopal(Madhya pradesh), Gandhinagar(Gujarat), Hyderabad, Kannur(Kerala), Kolkatta, Mumbai, Patna(Bihar), Raebareli(U.P), Shillong(Megalaya), Kangra(Himachchal pradesh).
