தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மாற்றத்தை மாற்றத்தால் கையாள்வோம்!

மாற்றத்தை மாற்றத்தால் கையாள்வோம்!

மாற்றத்தை மாற்றத்தால் கையாள்வோம்!


மார் 24, 2026 09:03 PM

மார் 24, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

மார் 24, 2026 09:03 PM மார் 24, 2026 09:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்லூரியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் சில பிரதான எதிர்பார்ப்புகள் இருக்கும். தரமான கல்வி, ஆரோக்கியமான எதிர்காலம், வலிமையான விளையாட்டு பயிற்சி, மகிழ்ச்சியான கல்லூரி சூழல், சிறப்பான கலாசார நிகழ்ச்சி ஆகியவை பொதுவான மற்றும் அவசியமான எதிர்பார்ப்புகளாக உள்ளன. ஆகையால் தான், இன்று பெரிய பல்கலைக்கழகங்கள் முதல் சிறு கல்லூரிகள் வரை அனைவரும், நினைவில் நீங்கா 'கேம்பஸ் லைப்' எனும் வளாக வாழ்க்கையை மாணவர்களுக்கு வழங்க முக்கியத்துவம் அளிக்கின்றன.

எங்கள் கல்வி நிறுவனங்களிலும், அருமையான எதிர்கால வாழ்க்கை மாணவர்களுக்கு அமைத்துக்கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். செயல்முறை பயிற்சியுடன் மாணவரது திறன்களை மேம்படுத்தும் வகையில் 'ஸ்கில் பாஸ்போர்ட்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். ஒவ்வொரு மாணவரும் அவரது துறை சார்ந்து தேவையான திறன்களை படிப்படியாக வளர்க்க இத்திட்டம் உதவுகிறது. துறை சார்ந்து அடிப்படை சவால்கள் முதல் மேம்பட்ட சவால்கள் வரை மாணவர்களை தீர்வுகாண தூண்டும் வகையிலான செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். இத்தகைய முறை இன்ஜினியரிங் மட்டுமின்றி அனைத்து பாடப்பிரிவுகளிலும் அமல்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

ஒவ்வொரு பாடத்தையும் எதற்காக படிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை புரியவைத்து, அதற்கான நோக்கத்தையும் சரியாக மாணவர்களிடம் விதைத்து, தொடர்ந்து ஆர்வத்தை தூண்டி, பாடம் சார்ந்த வளங்களை தேடி கண்டறியவும் ஊக்கப்படுத்துகிறோம்.

'ரத்தினம் குளோபல்' என்ற திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் பல்வேறு சர்வதேச சான்றிதழ்களை பெறவும், சர்வதேச 'இன்டர்ன்ஷிப்' மற்றும் வேலை பெறவும் ஊக்கம் அளிக்கிறோம். எதிர்காலம் சிறப்பானதாக அமைய வாழ்க்கை திறன்களை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்காகவே, பல்வேறு விளையாட்டுகளிலும் பங்குபெறும் வாய்ப்பை வழங்குகிறோம்.

கம்ப்யூட்டர் போல் அனைத்து துறைகளிலும் ஏ.ஐ., பயன்படுத்தப்படுவதால், அவரவர் துறையில் ஏ.ஐ., எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்களை கண்டு அச்சப்படாமல், அவற்றை நமக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் நாம் தான் ராஜா!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், வகுப்பறைகளில் ஆசிரியர் பாடம் நடத்தும் முறை வெகுவாக மாறிவிட்டது. அதற்கு ஏற்ப அனைத்து கல்வி நிறுவனங்களும் சர்வதேச தரத்திற்கு மாற வேண்டியது மிகவும் அவசியம்.

- டாக்டர் மதன் ஏ செந்தில், தலைவர், ரத்தினம் கல்வி நிறுவனங்கள், கோவை.
chairman@rathinam.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us