மே 20, 2026 11:02 AM
மே 20, 2026 11:02 AM

இன்ஜினியரிங், பார்மசி, நர்சிங், மெடிக்கல் சயின்ஸ், கலை மற்றும் அறிவியல் என பல்துறை கல்வியை ஒரே வளாகத்தில் ஒருங்கிணைத்து வழங்குவது யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தனிச்சிறப்பு.
இன்குபேஷன் சென்டர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை ஒன்றிணைந்து செயல்படுவதால், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்திறன் மேம்பாடு ஆகியவை ஒரே சூழலில் மாணவர்களுக்கு கிடைக்கின்றன. கற்றல், ஆராய்தல் மற்றும் கண்டறிதல் என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு இயங்கும் யுனைடெட் கல்வி நிறுவன மாணவர்களின் படைப்பாற்றல், புதுமை சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் கல்வி முறையை பின்பற்றுகிறது.
சிந்திக்கத் தூண்டும் மற்றும் வகுப்பறையை சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றும் வகையில் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். வளாகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு, இயற்கை சூழலுடன் கூடிய அமைதியான கற்றல் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வி பயிலுபவர்களில் 65 சதவீதம் பேர் மாணவிகள் மற்றும் 35 சதவீதம் பேர் மாணவர்கள். நர்சிங், பார்மசி மற்றும் மெடிக்கல் சயின்ஸ் துறைகளில் மாணவிகள் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. கோடத்தான், ஹேக்கத்தான், ஐடியாதான், கேமைதான் போன்ற போட்டிகள் முறையாக நடத்தப்படுகின்றன.
கடந்த ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் “Shine Healthcare Hackathon” யுனைடெட் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல மாணவர்கள் புதுமைக்கான அங்கீகாரம் பெற்றதுடன், சுமார் 10 திட்டங்கள் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் இன்குபேஷன் மையத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டன. காப்புரிமை மற்றும் தயாரிப்பு வளர்ச்சிக்காக நிதி நிறுவனங்களுடன் இணைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய டிஜிட்டல் காலத்தில் மாணவர்கள் சமூக ஊடகங்கள், ஷார்ட்ஸ் வீடியோக்கள் மற்றும் மொபைல் பயன்பாட்டால் கவனச்சிதறலுக்கு ஆளாகும் சூழலில், யுனைடெட் கல்வி நிறுவன தனிமனித ஒழுக்கம், நேர மேலாண்மை மற்றும் இலக்கு நோக்கிய வாழ்க்கை முறையை வலியுறுத்துகிறது. மாணவர்கள் தங்கள் இலக்குகளை எழுதிக் கொண்டு செயல்படவும், டிஜிட்டல் அடிமைத்தனத்திலிருந்து விலகி படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
எதிர்கால நோக்கில், ஒரு முழுமையான பல்கலைக்கழகமாக உருவெடுக்கத் திட்டமிட்டு, கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை இணைக்கும் முன்னோடியான கல்வி மையமாக வளர்ந்து வருகிறது.
கோவிட் காலத்திற்கு பிறகு ஆன்லைன் கல்வியிலிருந்து நேரடி கற்றலுக்குத் திரும்பிய மாணவர்கள் சந்தித்த சவால்களை கருத்தில் கொண்டு, மாணவர்களை மீண்டும் செயல்வீரியமிக்க கற்றல் சூழலுக்கு கொண்டு வர பல புதுமையான கற்பித்தல் முறைகளை செயல்படுத்தி வருகிறோம்.
-சண்முகம், தலைவர், யுனைடெட் கல்வி நிறுவனங்கள், கோவை.
