தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பாரம்பரிய கலை படிப்புகள்

பாரம்பரிய கலை படிப்புகள்

பாரம்பரிய கலை படிப்புகள்


ஜூன் 11, 2025 12:00 AM

ஜூன் 11, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 11, 2025 12:00 AM ஜூன் 11, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளில் கவின் கலை, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்லூரி:
அரசு கட்டடக்கலை மற்றும் சிற்ப கலை கல்லூரி, மாமல்லபுரம்

கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை படிப்புகள்:
பி.டெக்., - மரபு கட்டடக்கலை - டெரடிஷனல் ஆர்க்கிடெக்ச்சர்
பி.எப்.ஏ., - மரபு சிற்பக்கலை - டெரடிஷனல் ஸ்கல்ப்ச்சர்
பி.எப்.ஏ., - மரபு ஓவியம் மற்றும் வண்ணம் - டெரடிஷனல் டிராயிங் அண்டு பெயிண்டிங்

படிப்பு காலம்:

4 ஆண்டுகள்

தகுதிகள்:
பி.டெக்., படிப்பிற்கு கணிதப்பாடத்துடன் கூடிய 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி. பி.எப்.ஏ., படிப்புகளில் சேர 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரிகள்:

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அரசு கவின் கலை கல்லூரி - சென்னை, கும்பகோணம், மதுரை.

கவின் கலை படிப்புகள்:

பேச்சுலர் ஆப் பைன் ஆர்ட்ஸ் - பி.எப்.ஏ., - 4 ஆண்டுகள்
மாஸ்டர் ஆப் பைன் ஆர்ட்ஸ் - எம்.எப்.ஏ., - 2 ஆண்டுகள்

பாடப்பிரிவுகள்:


காட்சி தொடர்பு வடிவமைப்பு - விசுவல் கம்யூனிகேஷன் டிசைன்
வண்ணக்கலை - பெயின்டிங்
சிற்பக்கலை - ஸ்கல்ப்ச்சர்
சுடுமண் ஆலையக வடிவமைப்பு - இண்ட்ஸ்ட்ரியல் டிசைன் இன் செராமிக்
துகிலியல் ஆலையக வடிவமைப்பு - இண்ட்ஸ்ட்ரியல் டிசைன் இன் டெக்ஸ்டைல்
பதிப்போவியம் - பிரிண்ட் மேக்கிங்

தகுதிகள்:

பி.எப்.ஏ., படிப்பில் சேர்க்கை பெற 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி. எம்.எப்.ஏ., படிப்பில் சேர துறை சார்ந்த பிரிவில் பி.எப்.ஏ., படித்திருக்க வேண்டும்.

விபரங்களுக்கு:

https://artandculture.tn.gov.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us