தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டாக்டர் ஆக எழுதுங்கள் ‘நீட்’!

டாக்டர் ஆக எழுதுங்கள் ‘நீட்’!

டாக்டர் ஆக எழுதுங்கள் ‘நீட்’!


பிப் 09, 2017 12:00 AM

பிப் 09, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 09, 2017 12:00 AM பிப் 09, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

NEET - National Eligibility cum Entrance Test என்பது 2013-ம் ஆண்டில், முன்பிருந்த ஏ.ஐ.பி.எம்.டி., தேர்வுக்கு பதிலாக, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, மருத்துவப் படிப்புக்கான தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு!

முக்கியத்துவம்: ‘நீட் -யு.ஜி.,’ - இளநிலை படிப்புகளுக்கான தேர்வு; ‘நீட்-பி.ஜி.,’ - முதுநிலைப்படிப்புகளுக்கான தேர்வு. இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி., மற்றும் எம்.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளைப் படிக்க, இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்பது அவசியம்.

இத்தேர்வில் மாணவ, மாணவியர் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ‘ரேங்க்’ பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதன்படி, மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். இத்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஒதுக்கீடு மற்றும் விதிவிலக்கு: மாநிலங்களிலிருந்து, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இத்தேர்வில் இருந்து எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சட்டதிருத்தம் மற்றும் நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து, சில மாநிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படலாம்.

வயது வரம்பு: நீட்-யு.ஜி., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களை முதன்மை பாடமாகக் கொண்டு, குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் ஒரு பாடமாக பயின்றிருப்பதும் அவசியம். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்களும் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு முறை: அறிவியல் அறிவை பரிசோதிக்கும் வகையில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் இடம் பெறும். கால அவகாசம் 3 மணி நேரம். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பின் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) மற்றும் என்.சி.ஆர்.டி., தரத்திலான பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த ஆண்டு முதல் கேள்விகள் தமிழிலும் கேட்கப்படும்.

விபரங்களுக்கு: http://cbseneet.nic.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us