மார் 18, 2026 12:10 PM
மார் 18, 2026 12:10 PM

'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' அல்லது செயற்கை நுண்ணறிவு என்பது பூமியில் இருந்தோ, வானத்தில் இருந்தோ தன்னிச்சையாக தோன்றியதல்ல; மனிதரால் மனிதர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒன்றே!
குறைவான உற்பத்தி செலவில், எளிதாகவும், விரைவாகவும், ஆற்றல் மிக்கதாகவும் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் வகையில் காலங்காலமாக தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இத்தகைய ஓட்டத்தில் தொழில்நுட்ப மாற்றத்திற்கு இணையாக இன்றைய பேராசிரியர்களையும், மாணவர்களையும் தயார்படுத்த வேண்டியுள்ளது. இல்லையென்றால் அவர்கள் பின் தங்கிவிடும் நிலை உருவாகும்.
ஆகவேதான், எங்கள் கல்வி நிறுவன பேராசிரியர்களையும், மாணவர்களையும் தயார்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். நாடு முழுவதிலும் ஏ.ஐ., துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை கல்வி நிறுவனத்திற்கு அழைத்துவந்து, பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆழ்ந்த பயிற்சி அளிக்கிறோம். மேலும், ஏ.ஐ., சார்ந்த பல்வேறு 'புராஜெக்ட்'களில் அவர்களை ஈடுபடச் செய்கிறோம்.
வரும் காலங்களில், மெக்கானிக்கல், விவசாயம் என எந்த துறையை எடுத்துக்கொண்டாலும், அவற்றில் ஏ.ஐ., யின் பங்கு அளப்பரியதாக இருக்கும். ஆகவே, மாற்றத்திற்கும், தேவைக்கும் ஏற்ப திறன்களை வளர்த்துக்கொண்டால் எந்த தொழில்நுட்பத்தாலும் வேலைவாய்ப்பை பறிக்க முடியாது.
மனித மூளை அடுத்தடுத்த மேம்பாட்டை பற்றியே சிந்திக்கும். அதன் பலனே இத்தனை ஆண்டுகால வளர்ச்சி. சக்கரம், மாட்டுவண்டி என ஆரம்பித்து தற்போது நவீன வாகனங்கள் வரையிலான வளர்ச்சியை இதற்கு உதாரணமாக கூறலாம். அடுத்ததாக, நிலம், நீர், ஆகாயம் என மூன்றிலும் சிறப்பாக செயல்படும் வாகனத்தையும், அவற்றைவிட அதிநவீன வாகனத்தையும் உருவாக்க மனிதமூளை விரும்பும். ஆகவே, எந்த ஒரு இன்னோவேஷனும் நீண்ட காலத்திற்கு நீடித்து இருக்காது. அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் நிகழவே செய்யும்.
முன்பு ஆண்டுக்கு 5 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இன்று ஆண்டுக்கு 30 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் அளவிற்கு நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. இனிவரும் காலங்களிலும், இதைவிட உற்பத்தி அதிகமாகவே இருக்கும்.
மனிதமூளை என்றுமே புதிது புதிதாக கண்டறியவே விரும்பும். ஏ.ஐ.,க்கு அடுத்ததாக வேறு ஒரு தொழில்நுட்பத்தை கண்டறியவும் மனித மூளை விரும்பும். உற்பத்தி, வாழ்க்கை தரம், கல்வி, சிந்தனை அனைத்தும் தொடர்ந்து மேம்படும்.
- டாக்டர் எஸ்.தங்கவேலு, தலைவர், ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, கோவை.
chairman@siet.ac.in
