sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

அரசியல் அறிவியல் படிக்க விரும்புவோருக்கு...

/

அரசியல் அறிவியல் படிக்க விரும்புவோருக்கு...

அரசியல் அறிவியல் படிக்க விரும்புவோருக்கு...

அரசியல் அறிவியல் படிக்க விரும்புவோருக்கு...


ஜூலை 19, 2014 12:00 AM

ஜூலை 19, 2014 12:00 AM

Google News

ஜூலை 19, 2014 12:00 AM ஜூலை 19, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசியல் அறிவியல் என்பது, உலகின் மிகப் பழமையான துறைகளில் ஒன்று. கிரேக்க ஞானிகளான, பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரின் எழுத்துக்களுடன் அது தொடங்குகிறது என்று கூறுகிறார்கள்.

இப்படிப்பு, தியரி மற்றும் அரசியல் தொடர்பான நடைமுறை அறிவு ஆகியவை இணைந்த ஒன்றாகும். அரசியல் என்பது, அதிகாரம் சார்ந்த சமூக உறவுகள், ஒரு அரசியல் அமைப்பிற்குள் பொது விவகாரங்களை ஒழுங்குபடுத்துதல், கொள்கை பயன்பாட்டிற்கும், உருவாக்கத்திற்குமான திட்டங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றோடு தொடர்புடையதாகும்.

அரசியல் அறிவியல் பாடத்தின் பல துணைப் பிரிவுகளைப் பற்றி ஆழமாக படிப்பதென்பது, அரசியல் தன்மையின் நிறை மற்றும் குறைகளை நுணுக்கமாக பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் அமைந்ததாகும். அந்த நிறை-குறைகள், ஏற்கனவே, மனித நாகரீகத்தில் உள்ளவைதான்.

அரசியல் அம்சங்களை நுணுக்க பகுப்பாய்வு செய்வதன் மூலமாக, சிறப்பான நிர்வாகத்திற்கு பயன்படுகிறது. அரசியல் அறிவியல் என்பது, ஆன்த்ரோபாலஜி, பொருளாதாரம், உளவியல், சமூகவியல் மற்றும் வரலாறு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையதாகும்.

அரசியல் அறிவியல் படிப்பு, அரசியல் தியரி, பொதுக் கொள்கை, தேசிய அரசியல், ஒப்பீட்டு அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் ஆகிய அம்சங்களில் ஸ்பெஷலைசேஷன்களை வழங்குகிறது.

அரசியல் அறிவியல் படிப்பு, ஒரு மாணவரின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உதவி புரிகிறது. ஒரு மாணவரின் பேச்சுத்திறனை மட்டுமின்றி, எழுத்துத் திறனையும் வளர்ப்பதோடு, அவரின் பகுப்பாய்வு திறனையும் மேம்படுத்துகிறது.

அரசியல் அறிவியல் பின்புலம் கொண்ட மாணவர்கள், பெடரல், ஸ்டேட் மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள், செயல்திட்ட மேலாண்மை(campaign management) மற்றும் ஓட்டுப்பதிவு மற்றும் தேர்தல் அரசியல் ஆகிய துறைகளில், பணி வாய்ப்புகளை பெற விரும்புகிறார்கள்.

இத்துறை படிப்பை மேற்கொள்ளும் பல மாணவர்கள், ஏதேனும் ஒரு பிரிவைத் தேர்வுசெய்து, அதில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும் ஆர்வம் செலுத்துகிறார்கள்.

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற விரும்பும் மாணவர்கள் பலரால், அரசியல் அறிவு படிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அரசியல் அறிவு படிப்பை முடித்த பட்டதாரிகள், சர்வதேச அமைப்புகளிலும் பணி வாய்ப்புகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பை எங்கே மேற்கொள்ளலாம்?

இந்தியாவின் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்

பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் - லக்னோ
ஜவஹர்லால் நேரு பல்கலை - டில்லி
பாண்டிச்சேரி பல்கலை - புதுச்சேரி
காமராஜர் பல்கலை - மதுரை
பெரியார் பல்கலைக்கழகம் - சேலம்
அண்ணாமலை பல்கலை - சிதம்பரம்
பஞ்சாப் பல்கலையின்  ஆர்யா கல்லூரி - லூதியானா
பனஸ்தாலி பல்கலை - ஜெய்ப்பூர்
பெங்களூர் பல்கலை - பெங்களூர்
செளத்ரி சரண்சிங் பல்கலை - மீரட், உத்திரப்பிரதேசம்
குல்பர்கா பல்கலை - கர்நாடகா
இமாச்சல பிரதேச பல்கலை - சிம்லா
இக்னோ - டில்லி
ஜாதவ்பூர் பல்கலை - ஜாதவ்பூர், மேற்குவங்கம்
ஜாமியா மிலியா இஸ்லாமியா - டில்லி
காஷ்மீர் பல்கலை - காஷ்மீர்
காகத்தியா பல்கலை - வாரங்கல், தெலுங்கானா
அலிகார் முஸ்லீம் பல்கலை - அலிகார், உத்திரப் பிரதேசம்
கிரைஸ்ட் பல்கலை - பெங்களூர்
அசாம் பல்கலை - அசாம்
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகம் - ஆக்ரா, உத்திரப்பிரதேசம்
குவகாத்தி பல்கலை - குவகாத்தி, அசாம்
கோவா பல்கலை - கோவா
குருநானக் தேவ் பல்கலை - அமிர்தசரஸ், பஞ்சாப்
ஒஸ்மானியா  பல்கலை - ஐதராபாத்
ரபீந்திர பாரதி பல்கலை - கொல்கத்தா
பஞ்சாப் பல்கலை - சண்டிகர்
புனே பல்கலை - புனே
கோழிக்கோடு பல்கலை - கோழிக்கோடு, கேரளா
டில்லி பல்கலை - டில்லி
கொல்கத்தா பல்கலை - கொல்கத்தா
கேரளா பல்கலை - கேரளா
லக்னோ பல்கலை - லக்னோ
மைசூர் பல்கலை - மைசூர்
உத்கல் பல்கலை - புபனேஷ்வர், ஒடிசா
ராஜஸ்தான் பல்கலை - ஜெய்ப்பூர்






      Dinamalar
      Follow us