தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை!

வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை!

வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை!


மார் 18, 2016 12:00 AM

மார் 18, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 18, 2016 12:00 AM மார் 18, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஆராய்ச்சி படிப்பு: இந்தியா போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த, பி.எச்டி., பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு ஆராய்ச்சி நிதியுதவி (பி.ஓ.எப்.,) திட்டத்தின் கீழ், உதவித்தொகையை பெல்ஜியத்தில் உள்ள ஜேன்ட் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

நிபந்தனைகள்: இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மாணவர்கள், ஆராய்ச்சி பட்டப் படிப்பை முதல் பாதி அல்லது கடைசி பாதியை ஜேன்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும்.

உதவித்தொகை: விண்ணப்பதாரர்களின் ஆண்டு குடும்ப வாருமானதை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில், தோராயமாக 1,830 யூரோ வரை உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: www.ugent.be

* மேலாண்மை: எம்.பி.ஏ., பட்டப் படிப்பை ஸ்டான்போர்ட் கிராஜூவேட் பிசினஸ் கல்லூரியில் தொடர விரும்பும், பொருளாதாரத்தில் பின்தங்கிய 50 இந்திய மாணவர்களுக்கு, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் உதவித்தொகை வழங்குகிறது.

விண்ணப்பிக்கும் முறை:  ரிலையன்ஸ் திருபாய் பெல்லோஷிப் திட்டத்தின் கீழ், ஸ்டான்போர்ட் கல்லூரியில் எம்.பி.ஏ., பட்டப் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

சேர்க்கை முறை: ஜிமேட் அல்லது ஜி.ஆர்.இ., தேர்வு மற்றும் மொழிப்புலமைத் தேர்வான ஐ.இ.எல்.டிஎஸ்., அல்லது டோபல் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் குடும்ப நிதிநிலை அடிப்படையில் மெரீட் முறையில், இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

உதவித்தொகை: இரண்டு ஆண்டு எம்.பி.ஏ., படிப்பிற்கு, மொத்தம் 1,40,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: www.gsb.stanford.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us