ஜூலை 31, 2026 07:48 PM
ஜூலை 31, 2026 07:48 PM

இசை, திரைப்படம், விளம்பரம், ஏ.ஆர்.,/வி.ஆர்., போன்ற துறைகளில் பயன்படும் ஒலியின் பதிவு, கலவை, மாற்றம் மற்றும் வெளியீடு குறித்து ஆராயும் துறை, 'சவுண்டு இன்ஜினியரிங்'. இது தொழில்நுட்ப அறிவையும் கலைத் திறனையும் ஒருங்கிணைக்கும் துறையாக விளங்குகிறது.
இளநிலை படிப்பு
ஒலியியல் அடிப்படைகள், ஒலி பதிவு மற்றும் திருத்தம், இசை உற்பத்தி தொழில்நுட்பம், டிஜிட்டல் சிக்னல் செயலாக்கம், மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் தொழில்நுட்பங்கள், ஒலி கலவை மென்பொருட்கள், ஸ்டுடியோ வடிவமைப்பு ஆகியவற்றை மாணவர்கள் கற்கின்றனர். இப்படிப்பில் சேர்வதற்கு, பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலை படிப்பு
இசை உற்பத்தி, அகோஸ்டிக்ஸ், ஒலி வடிவமைப்பு, டிஜிட்டல் சிக்னல் செயலாக்கம், வன்பொருள்-மென்பொருள் ஒருங்கிணைப்பு ஆகியவை உள்ளடங்கும். இதில் சேர, பி.இ., / பி.டெக்., அல்லது இத்துறை சார்ந்த பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு
ஒலி வடிவமைப்பாளர், இசை தயாரிப்பாளர், ஒலி பதிவாளர், ஒலி இன்ஜினீயர், மீடியா மற்றும் பிராட்காஸ்ட் தொழில்நுட்ப நிபுணர், பாக்ட்ரூம் தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பணிகளில் வேலைவாய்ப்பு பெறலாம். திரைப்படம், டிவி, விளம்பரங்கள், விளையாட்டு, மென்பொருள் மற்றும் ஏ.ஆர்., / வி.ஆர்., துறைகளில் அதிக தேவை உள்ளது.
