மே 09, 2024 12:00 AM
மே 09, 2024 12:00 AM

இன்று மாணவர்கள் நிறைய திறமைகளை பெற்றிருக்கும் அதேநேரம் கவனச்சிதறல்களுக்கான சூழலும் அதிகமாக உள்ளன. அவர்கள் அத்தகைய கவனச்சிதறல்களுக்கு ஆளாகமல், கல்வியிலும், அவர்களது திறமையை வெளிக்கொணரும் செயல்களிலும் ஈடுபட உதவியாய் இருப்பது கல்வி நிறுவனங்களின் கடமை!
'டிசைன் திங்கிங்' எங்கள் அணுகுமுறை
26ம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ள எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களில், கடந்த சில ஆண்டுகளாக 'டிசைன் திங்கிங்' என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறோம். சலுப்பைத்தரும் இடமாக அல்லாமல், சுவாரஸ்யமாக கல்வி கற்கும் இடமாகவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இடமாகவும் வகுப்புகறைகள் பங்காற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த அணுகுமுறையை கடைபிடிக்கிறோம். சமூகத்தில் நாம் காணும் ஒவ்வொரு துறைகளிலும், ஒவ்வொரு விதமான சிக்கல்கள் உள்ளன. அவற்றை கண்டு ஒதுங்காமல், அத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காணும் சிந்தனையுடன் முயல்வதே 'டிசைன் திங்கிங்'
இத்தனை ஆண்டுகளாக, வேலை வாய்ப்பிற்கான திறன்களை வளர்க்கும் ஒரு கருவியாக கல்வி இருந்து வந்துள்ளது. தற்போது அதனை கடந்து, சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறனை வளர்க்கும் கல்வியை பெற துவங்க வேண்டும். அதற்காக, தற்போதைய கல்வி முறையை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டிய அவசியமில்லை. படிப்படியான மாற்றத்தை பின்பற்றினால், அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு சிறப்பான கல்வி முறையை நம்மால் பெற இயலும்.
தொழில்நுட்பம் எதற்காக...
பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவையே, தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு மாணவரும் அவரவர் அறிந்த ஒரு பொதுவான சமூக சிக்கலுக்கு உரிய தீர்வு காண முடிந்த, பிடித்தமான மற்றும் அவரவர் திறமைக்கு ஏற்ப ஒரு துறையை தேர்வு செய்து படிக்கலாம். அத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். தொழில்நுட்ப படிப்புகளையே அனைவரும் பாடப்பிரிவாக தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உதாரணமாக, சிவில் இன்ஜினியரிங் மிகவும் பிடித்தமான துறையாக இருக்கும்பட்சத்தில், அதில் எவ்வாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலநடுக்கத்தை கண்டறிய முடியும் என்று சிந்திக்கலாம். அதேபோல், நர்சிங் பிரிவாக இருந்தாலும் சரி, பி.காம்., படிப்பாக இருந்தாலும் சரி அவற்றில் ஏ.ஐ., போன்ற புதிய தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தி அத்துறை சார்ந்த சிக்கல்களை தீர்க்க முடியும் என்று சிந்திக்க வேண்டும். மிகவும் பெரிய எண்ணிக்கையிலான நுகர்வோரை சென்றடைய தொழில்நுட்பம் உதவுகிறது. குறிப்பாக, தொழில்நுட்பம் இன்றி ஓலா, ஊபர், சுவுங்கி போன்ற பெரும் நிறுவனங்கள் செயல்பட முடியாது.
மாணவர்கள் தான் மிகப்பெரிய சக்தி. வளர்ச்சிக்காக முயற்சி செய்ய வேண்டுமே தவிர, செல்வத்தை நோக்கமாகக் கொண்டு மட்டுமே முயற்சி இருத்தல் கூடாது. வளர்ச்சியை நோக்கிய மனப்பான்மையும், அதற்கான முயற்சியும் இருக்குமேயானால் செல்வம் தானாக வரும்.
-நளின் விமல்குமார், இயக்குனர், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கோவை.