தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அமெரிக்காவில் படிக்க யாரை அணுகுவது?

அமெரிக்காவில் படிக்க யாரை அணுகுவது?

அமெரிக்காவில் படிக்க யாரை அணுகுவது?


மார் 16, 2016 12:00 AM

மார் 16, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 16, 2016 12:00 AM மார் 16, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு, அதிகாரப்பூர்வ தகவல்களை வழங்குவதற்காகவே ‘எஜுகேஷன் யு.எஸ்.ஏ.,’ மையம் செயல்படுகிறது!

கடந்த 2010-11ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சற்று பின்னடைவை சந்தித்த நிலையில், 2014-15ம் கல்வியாண்டில் 29.4 சதவீதம் அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது!

அதாவது, 2009-10ம் ஆண்டு 1,04,897 ஆக இருந்த அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, அதற்கடுத்த மூன்று ஆண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 2012-13ல் 96,754 ஆக சரிவடைந்தது. ஆனால், அதற்கடுத்த ஆண்டு 6.1 சதவீதம் அதிகரித்து 1,02,673 ஆக உயர்ந்தது. ஆனால் 2014-15ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் 1,32,888 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் சேர்க்கை பெற்றுள்ளனர்! இதன்படி, அமெரிக்க சென்ற ஒட்டுமொத்த வெளிநாட்டு மாணவர்களில் 13.6 சதவீத மாணவர்கள் இந்தியர்.

3.6 பில்லியன் டாலர்!
இளநிலை பட்டப்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள் 12.4 சதவீதம், முதுநிலை பட்டப்படிப்பிற்கு 64 சதவீதம், இதர பயிற்சிகளுக்கு 22.1 சதவீதம். இவ்வாறு, அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வாயிலாக, அமெரிக்க பொருளதாரத்தில் இந்திய மாணவர்களின் பங்களிப்பு 3.6 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது!

அமெரிக்காவில் படிக்க விரும்பும் எந்த ஒரு தனி மாணவருக்கும் உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது ‘எஜுகேஷன் யு.எஸ்.ஏ.,’ மையம். இந்தியா முழுவதும் சென்னை உட்பட 7 இடங்களில் இம்மையம் செயல்பட்டு வருகிறது. இணையவழி, தொலைபேசி, கருத்தரங்கு வாயிலாக மட்டுமின்றி தனி ஒருவருக்கும் நேரில் உரிய ஆலோசனைகள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டில் மட்டும் ஒருலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் கல்வி ஆலோசனைகளுக்காக இம்மையங்களை தொடர்பு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணமில்லா தொலைபேசி உதவி: 1-800-103-1231 (திங்கள் முதல் வெள்ளி, 2-5 மணி வரை)

இணையதள முகவரி: www.usief.org.in/Chennai.aspx

-பிலிப் ஏ மின், அமெரிக்க துணை தூதர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us