தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பரீட்சைக்கு நேரமாச்சு!

பரீட்சைக்கு நேரமாச்சு!

பரீட்சைக்கு நேரமாச்சு!


மார் 15, 2016 12:00 AM

மார் 15, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 15, 2016 12:00 AM மார் 15, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூளைப்போர் புரிவதற்கு முரசு ஒலித்துவிட்டது; போர்க்களம் புகுவதற்குப் புறப்பட்டு விட்டீர்களா?

தாள் நிலத்தில் விதைப்பதற்குத் தருணம் வந்துவிட்டது. ஏர் எடுத்து உழுவதற்கு எழுதுகோல் தயாரா? அயர்வைப் போக்குங்கள். ஆயத்தமாகுங்கள். இதுதான் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நேரம்!

அறைக்குள் நுழையும் முன் அச்சம் தவிர். பொதுத்தேர்வு ஒன்றும் புதுத்தேர்வு அல்ல. தாள் வேறு... அறை கண்காணிக்கும் ஆள் வேறு... தாள் கட்டிமுடிக்கும் நூல் வேறு... வேறு என்ன வித்தியாசம் கூறு?

கற்ற கல்வியே கைகொடுக்கும் கை. பெற்ற ஞானமே கனவின் திரிகளுக்கு நெய்! எனவே, சலித்துக் கொள்பவனுக்குத்தான் தேர்வு பரீட்‘சை’. சாதிக்க துடிப்பவனுக்கு அதுவே பலப்பரீட்சை!

மாணவர்களே, மழுங்கிப்போன பென்சில் முனைகளைக் கூர்மையாக்கிக் கொண்டீர்களா? புத்தக அறிவைப் பேனாக்களின் வயிற்றில் மையை ஊற்றி நிரப்பிக் கொண்டீர்களா? நீங்கள் வரைய வேண்டிய, எழுத வேண்டிய, அறிவையும் சேர்த்துத்தான்... ரப்பரை எடுத்து செல்லுங்கள். அதற்குமுன் சினிமா போவாதையும், சின்னத்திரை பார்த்தலையும், சில நாட்களுக்காவது சிந்தனையிலிருந்து அழித்துவிடுங்களேன்.

நில்-கவனி, ‘வெல்’. நினைவிருக்கட்டும் தோல்விகளுக்குத் தோள்கொடுப்பது ‘செல்’. வாழ்க்கையை வென்றெடுக்கப் போர்க்களம் போகிறீர்கள்... ஆயுதங்களுடன் ஆயத்தமாகிவிட்டீர்களா? அதற்காக சொருகி வைத்திருக்கும் சின்ன காகிதங்களை ஆயுதமாகக் கருதி அறைக்குள் நுழையாதீர்கள். பறக்கும் படையிடம் நீங்கள் தோற்றுப் போகலாம்.

முழு ஆண்டும் முயற்சித்த உழைப்பு சில மணிநேரத்தில் சிதைந்துவிடக்கூடாது... அதற்காகத்தான் அரை மணிக்கொருமுறை அடிக்கப்படுகிறது எச்சரிக்கை மணி. மாணவச் சிற்பிகளே! மறந்து விடாதீர்கள், தாள் எழுத்து தரமாயிருந்தால், தலையெழுத்து தலைப்பாகை சூடும்!

வறுமையைச் சுமக்க வழிதெறியாமல் குடும்பத்தின் தோள்கள், கூன் விழுந்த நிலையில் நீங்களாவது அவைகளை நிமிர்த்த வேண்டாமா? மரணத்தைக் கொல்லும் மருத்துவர்களையும், ஆகாயம் செல்லும் அறிஞர்களையும், இந்திய தேசம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க உங்களில் யார் அப்படி உயரப்போகிறீர்கள்?

-எல்.பிரைட், ஆசிரியர், தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us