தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/‘அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ்’

‘அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ்’

‘அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ்’


மார் 11, 2016 12:00 AM

மார் 11, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 11, 2016 12:00 AM மார் 11, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் மற்றும் தொழில்நுடப் துறைகளுக்கு அடுத்தபடியாக வேளாண்மை துறையை தேர்ந்தெடுக்க துவங்கியிருப்பது வரவேற்கக்கூடிய விஷயம்!

பி.எஸ்சி., பி.இ., மற்றும் பி.டெக்., போன்ற இளநிலை பட்டப் படிப்புகளில் விவசாயம், தோட்டக்கலை, காடுகள், வேளாண் வணிக மேலாண்மை (அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட்), பட்டுப்புழு வளர்ப்பு,ஹோம் சயின்ஸ், வேளாண் பொறியியல், விவசாய தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏரளாமான துறைகள் உள்ளன.

முதுநிலை படிப்பு
முதுநிலை பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, இளைஞர்களிடையே பிரபலமடைந்து வரும் ஒரு படிப்பு ‘அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ்’.

எதனால் அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ்?
வேளாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு துறைகளை ஒருசேர பெற்றது, ‘அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ்’. பொருளாதார கோட்பாடுகளை வேளாண் வணிகத்தில் மேற்கொள்வது, உற்பத்தி முறைகள் மற்றும் வேளாண் வணிகத்தில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பது போன்ற நுணுக்கங்களை எம்.எஸ்சி., படிப்பதன் மூலம் நன்கு ஆராய்ந்து கற்று கொள்ளலாம்.

பணியின் தன்மை
உலக சந்தைகளில் வேளாண் பொருட்களின் மதிப்பு மற்றும் தேவையை கணித்தல், பயிர்களை மேற்பார்வையிடுதல், விலைகளை நிர்ணயித்தல், கால்நடைகளின் நலனை கவனித்தல் ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் உற்பத்தி தொடர்பான புதிய முறைகள் போன்றவற்றையும் வேளாண் பொருளாதார நிபுணரின் (Agricultural Economist) பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கல்வி நிறுவனம்
வேளாண்மை துறையில் பிரத்தியேக படிப்பாக அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்
பிர்சா வேளாண் பல்கலை-  ராஞ்சி, ஜார்க்கண்ட்
சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலை - கான்பூர், உத்திரப் பிரதேசம்
வேளாண்மை கல்லூரி - பிகானீர், ராஜஸ்தான்
கேரள வேளாண்மை பல்கலை - திருச்சூர்
சர்தார் வல்லபாய் பட்டேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலை - மீரட், உத்திரப் பிரதேசம்
வேளாண் அறிவியல் பல்கலை - பெங்களூர்
சத்ரபதி சாகுஜி மகராஜ் பல்கலை - கான்பூர், உத்திரப்பிரதேசம்
இந்திரா காந்தி வேளாண் பல்கலை - ராய்ப்பூர்
அலகாபாத் பல்கலை - அலகாபாத், உத்திரப் பிரதேசம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் - டில்லி
பனாரஸ் இந்து பல்கலை - பனாரஸ்
ஆச்சார்யா என்.ஜி. ரங்கா வேளாண் பல்கலை - ஐதராபாத்.

வாய்ப்புகள்
கிராமப்புற நிதி மற்றும் நிறுவனங்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள பொருளாதாரம் ஆகிய பல்வேறு பிரிவுகளை இத்துறை உள்ளடக்கியுள்ளதால், இத்துறைக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். ‘அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ்’ படித்தவர்கள், கமர்ஷியல் மற்றும் பண்ணை வங்கிகள் போன்ற கடன்தரும் நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us