தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எழுதுங்கள் ஜிமேட்!

எழுதுங்கள் ஜிமேட்!

எழுதுங்கள் ஜிமேட்!


மார் 04, 2016 12:00 AM

மார் 04, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 04, 2016 12:00 AM மார் 04, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில், மேலாண்மை கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் அவசியம் எழுத வேண்டிய தேர்வு, ‘ஜிமேட்’ எனும் கிராஜூவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்!

இது கணினி வழி தரநிர்ணய சோதனைத் தேர்வாகும். ஜிமேட் தேர்வில் மாணவர்களது, பகுப்பாய்வு, ஆங்கில மொழி மற்றும் கணிதத் திறன் பரிசோதிக்கப்படுகிறது. இவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பெரும்பாலான புகழ்பெற்ற சர்வதேச வணிகக் கல்வி நிறுவனங்கள்,  மாணவர்களை சேர்த்துக்கொள்கின்றன.

தகுதிகள்

கிராஜூவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில் (ஜி.எம்.ஏ.சி.,) மூலம் நடத்தப்படும் ஜிமேட் தேர்வுக்கு, எவ்வித வயது வரம்போ, சிறப்புத் தகுதிகளோ தேவை இல்லை. இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு பகுதிகள்

அனலடிக்கல் ரைட்டிங்: மாணவர்களது பகுப்பாய்வு திறன்கள் ஆராயப்படும்.
இன்டர்கிரேட் ரீசனிங்: கிராபிக்ஸ் இன்டர்பிரிட்டேஷன், டேபிள் அனாலிசிஸ், மல்டி சோர்ஸ் ரீசனிங், டூ பார்ட் அனாலிசிஸ் போன்றவை சோதிக்கப்படும்.
குவான்டிடேடிவ்: அடிப்படை கணிதத் திறனை சோதிக்கும் பகுதி.
வெர்பல்: மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமையை கணக்கிடும் பகுதி.

3 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும் ஜிமேட் தேர்வில், 800 மதிப்பெண்கள் வரை மாணவர்கள் எடுக்க முடியும், இருப்பினும் 710 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் தான் சிறந்த வணிகக் கல்லூரிகளில் சேர்க்கை பெற முடியும்.

ஜிமேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இந்தியாவில் 25 மாநிலங்களில், ஜிமேட் தேர்வு மையங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் இத்தேர்வுக்கான மையங்கள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு: www.mba.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us