தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தேர்வு எனும் நண்பன்!

தேர்வு எனும் நண்பன்!

தேர்வு எனும் நண்பன்!


மார் 03, 2016 12:00 AM

மார் 03, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 03, 2016 12:00 AM மார் 03, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நெருங்கி வரும் நேரம் இது. தேர்வுகள் என்றாலே ஒரு வித பய உணர்ச்சி தோன்றுவது இயல்பு தான்!

அதற்கான காரணங்களில் ஒன்று, பெற்றோர்களின் மிரட்டல்..., மற்றொன்று, சக மாணவனை விடவோ, நண்பனை விடவோ மதிப்பெண்கள் குறைந்து விடுமோ என்ற அச்சம். இதை தவிர, தான் விரும்பும் படிப்பு படிக்க இடம் கிடைக்குமோ என்ற சந்தேகம். விட்டொழியுங்கள் உங்கள் சந்தேகங்களை!

தேர்வு என்பது மற்றவர்கள் நம் அறிவை சோதிப்பது அல்ல. நம் முயற்சியை நாமே அளக்கும் அளவு கோல் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ‘உங்களை பற்றி உயர்வாக சொல்லுங்கள்’ என்றால் தயங்குவீர்களா? இல்லையே... அது போல தான்.

மற்றொரு பயம், நாம் படிப்பது மறந்து போகுமோ, படிக்கும் கேள்விகள் வராமல் போகுமோ என்ற அச்சம். உங்களுக்கு பிடித்த ஒரு திரைப்படத்தை எப்படி நினைவில் காட்சி வாரியாக நினைவில் வைத்துள்ளீர்களோ, அது போல பாடத்தையும் மனப்பாடம் செய்யாமல், வரிசைப்படி மனதில் நினைவு படுத்திப்பாருங்கள்.

தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் உங்கள் பாடத்தில், உங்கள் புத்தகத்தில் இருந்து மட்டுமே கேட்கப்படுகிறதே தவிர, வேறு இல்லை. அதனால் தயக்கம் வேண்டாம்!

தேர்வு நெருங்கி விட்டதே என்ற பீதி வேண்டாம். தேர்வை என்றேனும் ஒரு நாள் நாம் சந்தித்துதான் ஆக வேண்டும். சற்றே, பின்னோக்கி பாருங்கள்... நர்சரி பள்ளியில் இருந்து ஒன்பதாம் வகுப்போ, பதினொன்றாம் வகுப்போ தேர்ச்சி பெற்று வந்தாகி விட்டது. இவ்வளவு தூரம் வெற்றி பெற்ற நாம் இந்த முறை வெற்றி பெற முடியாதா என்ன? அப்பொழுதெல்லாம் இல்லாத தயக்கம், சோர்வு இப்பொழுது மட்டும் ஏன்? விரட்டுங்கள் உங்கள் மனச் சோர்வை...

தேர்வு அறை உங்கள் மைதானம், நீங்கள் மட்டுமே உள்ளீர்கள். உங்களுக்கான கால அவசாகத்தில் நீங்கள் தான் ராஜா. உங்களுடன் போட்டியிட யாரும் இல்லை. எங்கே துணிந்து இறங்கி செயல்படுங்கள்!

இறுதியாக உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம், உங்களை போலத் தான் உங்கள் சக நண்பரும், மாணவரும்... உங்கள் பள்ளியில் தான், உங்கள் வகுப்பில் தான், நீங்கள் படிக்கும் பாடத்தை தான் அவரும் படிக்கிறார். அவரால் முடிவது உங்களால் ஏன் முடியாது? பிறகு ஏன் அச்சம், எங்கே தேர்வை புன்னைகையுடன் நோக்குங்கள் பார்க்கலாம்!

-எம்.விக்னேஷ், மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us