தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நீங்களும் ஆகலாம் நியூரோ டெக்னாலஜிஸ்ட்!

நீங்களும் ஆகலாம் நியூரோ டெக்னாலஜிஸ்ட்!

நீங்களும் ஆகலாம் நியூரோ டெக்னாலஜிஸ்ட்!


பிப் 27, 2016 12:00 AM

பிப் 27, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 27, 2016 12:00 AM பிப் 27, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவ துறையை தேர்வு செய்ய விரும்பும் அனைவரும் எம்.பி.பி.எஸ்., படிக்கவே ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் சீட் கிடைப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அதேசமயம் எம்.பி.பி.எஸ்., மட்டும் தான் மருத்துவப் படிப்பு என்றில்லை!

அதற்கு இணையாக ஏராளமான படிப்புகள் மருத்துவத் துறையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான், ’நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி’. இப்படிப்பினை, மாணவர்கள் தேர்வு செய்வதன் மூலம் நரம்பியல் துறையில் சிறந்து விளங்கலாம்.

துறை அறிமுகம்
மருத்துவ அறிவியல் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறை தான் ’நியூரோ எலக்ட்ரோ பிசியாலாஜி’.

நியூரோ சயின்ஸ், செல்லுலார் இன்ஜினியரிங் மற்றும் சிக்னல் பிராசசிங் உள்ளிட்டவற்றை விரிவாகப் படிப்பதினால், நரம்பியல் மருத்துவர்க்கு இணையாக செயல்புரிகின்றனர். ‘எலக்ட்ரோ டயக்னாஸ்டிக்’ முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி படிப்பு மிகவும் இன்றியமையாததாய் உள்ளது.

‘விஷுவல் எவோக்ட் பொட்டன்ஷியல், சொமேட்டோசென்சரி எவோக்ட் பொட்டன்ஷியல், பிரைன்ஸ்டெம் ஆடிட்டரி எவோக்ட் ரெஸ்பான்ஸ் குறித்து படிப்பது மட்டுமல்லாமல், அவை குறித்த தொழில்நுட்ப ரீதியான அடிப்படை விஷயங்களையும் கற்கலாம். ஆய்வகங்களில் நோய்க் கூறுகள் பற்றி தொழில்நுட்ப சோதனை நடத்துவது, குறிப்பாக தூக்கம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிய நடத்தப்படும் ‘பாலிசோம்னாகிரபி’ குறித்தும் விரிவாக கற்றுக்கொள்ளலாம்.

கல்வித் தகுதிகள்
இளநிலை பட்டப் படிப்பில் சேர, மேல்நிலை வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் போன்றவற்றை முதன்மை பாடமாக பயின்று, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை பட்டப் படிப்பில் சேர, இளநிலை பட்டப் படிப்பில், பயாலஜி, பயோடெக்னாலஜி, நியூரோ பயாலஜி, பயோ கெமிஸ்டரி, நியூரோ சயின்ஸ், பி.டெக்(பயோடெக்னாலஜி) போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகள்
நரம்பியல் துறையில், ஒருங்கிணைந்த பகுதியாக ‘நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி’ இருப்பதால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல மருத்துவமனைகளில், நரம்பியல் தொழில்நுட்பவியலாளரின் தேவைகள் அதிகமாகவே உள்ளது. எனவே, படித்து முடித்தவுடன் மாணவர்கள் வேலை பெறுவது உறுதி.

முக்கிய கல்வி நிறுவனங்கள்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்
அமிர்தா பல்கலைக்கழகம், கேரளா
எஸ்.ஜி.டி., பல்கலைக்கழகம், டெல்லி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us