தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எதற்காக ஜி.ஆர்.இ.,!

எதற்காக ஜி.ஆர்.இ.,!

எதற்காக ஜி.ஆர்.இ.,!


பிப் 27, 2016 12:00 AM

பிப் 27, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 27, 2016 12:00 AM பிப் 27, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாடுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களில் தங்களது உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டிய தேர்வாக உள்ளது, ஜி.ஆர்.இ., (கிராஜுவேட் ரெக்காட் எக்சாமினேஷன்ஸ்)!

எஜூகேசன் டெஸ்டிங் சர்விஸ் (இ.டி.எஸ்.,) நடத்தும் இத்தேர்வில் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு, அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பிசினஸ் ஸ்கூல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதிகள்: இத்தேர்வை எழுதுவதற்கு எவ்வித வயது வரம்பும் மற்றும் சிறப்பு தகுதிகளும் தேவை இல்லை. இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது.

தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு (கம்பியூட்டர் பேஸ்டு டெஸ்ட்) மற்றும் எழுத்துத் தேர்வு(பேப்பர் பேஸ்டு டெஸ்ட்) ஆகிய இரண்டு முறைகளில், ஏதேனும் ஒரு முறையை மாணவர்கள் தேர்வு செய்து எழுதலாம்.

2 தாள்கள்: பொதுத் தேர்வு மற்றும் பாடப் பிரிவுத் தேர்வு ஆகிய இரு தேர்வுத் தாள்களை கொண்டது. பொதுத் தேர்வில் வெர்பல், குவான்டிடேடிவ், அனலிடிகல் திங்கிங் என 3 பகுதிகள் உள்ளன.

பாடப் பிரிவுத் தேர்வில், பட்டப்படிப்பு படிப்பதற்குத் தேவையான உளவியல் கோட்பாடுகள் சோதிக்கப்படும். பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்கள் வெர்பல் மற்றும் குவாண்டிடேடிவ் பகுதிகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, கல்லூரிகளில் சேர்க்கைகான அனுமதி பெற முடியும்.

வெர்பல் ரீசனிங்: சொற்கள், வாக்கியங்கள் மற்றும் முழு நூல்களின் அர்த்தங்களை புரிந்து பதில் அளித்தல்.
குவாண்ட்டிடேட்டிவ் அப்டிடியூட்: அல்ஜிப்ரா, ஜியாமெட்ரி, டேட்டா இன்டெர்பிரிடேஷன் போன்ற பகுதிகளில் மாணவர்களின் அடிப்படை கணிதத் திறன்களை ஆராய்தல்.
அனலட்டிக்கல் திங்கிங்: சிக்கலான கருத்துக்களை எவ்வாறு மாணவர்கள் தெளிவாக்குகின்றனர் என்பதும், ஆங்கில மொழி எழுத்து திறனும் சோதிக்கப்படுகிறது.

ஜி.ஆர்.இ. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முழுமையாக நாம் தயாராவது முக்கியம். 3 மணி நேரம் 40 நிமிடம் நடைபெறும் இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். ஒரு ஆண்டில் 5 முறை இத்தேர்வை எழுதலாம்.

மேலும் விவரங்களுக்கு: www.ets.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us