தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எது சேமிப்பு?

எது சேமிப்பு?

எது சேமிப்பு?


பிப் 22, 2016 12:00 AM

பிப் 22, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 22, 2016 12:00 AM பிப் 22, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேமிப்பு என்றவுடன் உங்களது நினைவுக்கு வருவது எது? வங்கிக் கணக்கில் டிபாசிட் தொகை ஏறுவது, லாக்கரில் புதுப்புது நகைகள் சேர்வது, வீடு, நிலம் வாங்கி குவிப்பது போன்றவைகள் தானே?

உங்களது பெற்றோர்களும், உற்றார்களும் அதைப் பற்றித் தான் உங்களிடம் சொல்லியிருப்பார்கள். இந்த சேமிப்புகளை உங்களுக்காக உங்களது பெற்றோர் அல்லது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், யாராலும் உங்களுக்கு சேமித்து தர முடியாத விலை மதிப்பு மிக்க ஒன்று உண்டு! அது தான் நேரம்! அதை நீங்கள் தான் மனசு வைத்து சேமிக்க முடியும்!

பாங்க் பேலன்ஸ், நகை, நிலம் போன்றவற்றைவிட, இந்த நேரத்தை வைத்து பெரியதாக சாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

இந்தக் காலத்தில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சம்பாதிப்பதை விட, சம்பாதித்ததை வைத்துக் காப்பாற்றுவது மிகவும் சிரமம்!  ஏமாற்று வித்தையில் கைதேர்ந்த மோசடிப் பேர்வழிகளை இந்த நவீன காலத்தில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்தே தீர வேண்டும்!

நீங்கள் சம்பாதித்தை பாதுகாக்க உங்களுக்கு போதிய அறிவும், ஆற்றலும் இருந்தால் தான் முடியும். அந்த அறிவையும் ஆற்றலையும் நீங்கள் பெற உங்களுக்கு நல்ல கல்வி தேவை. நல்ல கல்வியை நீங்கள் இளமையில் தேடிக் கொள்ள நிறைய நேரம் தேவைப்படும். இந்த நவீன யுகத்தில் இளைஞர்களின் நேரத்தை அப்படியே மொத்தமாக விழுங்க ஆயிரம் வழிகள் வந்து விட்டன.

இளைஞர்கள் பலர், எந்த நேரமும் தன் கைகளில் இருக்கும் உயர்தர செல்போனிலும் மற்றும் இணைய தளங்களிலும் யாருக்கும் பயனற்ற வகையில் நேரத்தைப் போக்குவதில் ஆர்வமாக உள்ளனர். கேட்டால் பொழுதுபோக்கு என்று சொல்கிறார்கள்.

அவர்கள் பொழுதைப் போக்கவில்லை! தங்கள் பொன்னான எதிர்காலத்தை போக்கிக் கொண்டிருக்கிறார்கள்! அதை என்று அவர்கள் உணர்கிறார்களோ அன்றே அவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கி  விட்டதாக அர்த்தம்!

முயன்றால் முடியாது எதுவுமே இல்லை! இன்று இல்லாவிட்டால் முயற்சி செய்து நாளை எதையும் நம்மால் தேடிக் கொள்ள முடியும் - நேரத்தைத் தவிர! அதைப் புரிந்து கொண்டு இளமையில் உயர் கல்வி தேட வேண்டிய நேரத்தில், ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் நேரத்தை சேமித்துப் பயன்படுத்துங்கள்!

நேரம் ‘பொன்’ போன்றது என்று சொல்வார்கள். அது கூட உண்மையல்ல! இழந்த பொன்னை மீண்டும் முயற்சி செய்து நம்மால் தேடிக் கொள்ள முடியும். நேரம் ‘உயிர்’ போன்றது! போனால் நிச்சயம் வராது!

 உங்கள் வளமான எதிர்காலத்தை நிர்ணயம் செய்வது அந்த நேரம் தான்! நேரத்தை ‘உயிர்’ போன்றது என்று உணர்ந்தவர்களே வாழ்க்கையின் சிகரத்தைத் தொட்டிருக்கிறார்கள்!

-டி.எஸ்.ரகுநாதன், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us