/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
சுற்றுலா படிப்பில் சூப்பர் வாய்ப்புகள்
/
சுற்றுலா படிப்பில் சூப்பர் வாய்ப்புகள்
மே 31, 2025 12:00 AM
மே 31, 2025 12:00 AM

இன்று பல நாடுகளில், சுற்றுலாத்துறை ஒரு பிரதான நிதி ஆதாரமாக உள்ளது. ஆன்மிகம், மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், வரலாற்று பாரம்பரிய இடங்கள் என இந்தியாவிலும் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன.
மருத்துவ சுற்றுலாவிற்கான சிறந்த மாநிலமாக திகழும் தமிழகத்திற்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டினர் பல்வேறு விதமான சிகிச்சைகளுக்காக வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்கும், வழிநடத்துவதெற்கும் அதிகளவிலான நிறுவனங்களும், மனிதவளமும் தேவைப்படுகிறது.
படிப்புகள்
இளநிலை பட்டப்படிப்பாக பி.ஏ.,- டூரிசம் மற்றும் டிராவல் மேலாண்மை, பி.காம்.,- டிராவல் மற்றும் டூரிசம், முதுநிலை பட்டப்படிப்புகளாக எம்.பி.ஏ.,- டூரிசம் மேலாண்மை, எம்.பி.ஏ.,-டூரிசம் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி மேலாண்மை, எம்.ஏ.,-டூரிசம் மேலாண்மை, எம்.ஏ., / எம்.எஸ்சி.,- டூரிசம் உட்பட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. பட்டப்படிப்புகள் மட்டுமின்றி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.
கல்வி நிறுவனங்கள்
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்டு டிராவல் மேனேஜ்மெண்ட்' ஒரு முக்கிய கல்வி நிறுவனம். தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் சுற்றுலாத் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன. அழகப்பா பல்கலை, தமிழ்நாடு மத்திய பல்கலை, தஞ்சை தமிழ் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை உட்பட பல பல்கலைக்கழகங்களிலும், அரசு கல்லூரிகளிலும் சுற்றுலாத்துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பாடத்திட்டங்கள்
கணக்கியலின் அடிப்படைகள், வணிக புள்ளி விவரங்கள், வணிக பொருளாதாரம், வணிக மேலாண்மை, வணிக சட்டம், பயண மேலாண்மை, சுற்றுலா சந்தைப்படுத்துதல், சுற்றுலா பொருள்கள், சுற்றுலா புவியியல், நிலையான சுற்றலா, இலக்கு திட்டமிடல் மற்றும் மேம்பாடு ஆகியவை உள்ளடக்கி உள்ளன.
தகுதி
10ம், 12ம் வகுப்புகளில் எந்த பிரிவு எடுத்திருந்தாலும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேரலாம்.
வேலை வாய்ப்புகள்
பயண ஆலோசகர், சுற்றுலா அதிகாரி, ஹோட்டல் மேலாளர், விமான வாடிக்கையாளர் சேவை முகவர், பயண எழுத்தாளார், டூர் ஆபரேட்டர், குரூஸ் ஷிப் மேலாளர், சுற்றுலா நிபுணர், உலகளாவிய பயண ஆலோசகர், விடுமுறை மேலாளர், பயண நிர்வாகி போன்ற பல பணி நிலைகளில் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பெறலாம். சுய வேலைவாய்ப்பும் உண்டு.

