ஜூன் 04, 2026 12:32 PM
ஜூன் 04, 2026 12:32 PM

இன்றைய உலகில், மனிதர்கள் செய்த பல வேலைகளை இயந்திரங்கள் தானாகவே செய்து முடிக்கின்றன. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம், 'ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்'.
ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல; அது
எதிர்கால மனித வாழ்க்கையை மாற்றப்போகும் புரட்சி. தொழிற்சாலை முதல்
மருத்துவமனை வரை, விவசாயம் முதல் விண்வெளி வரை உலகையே மாற்றி வருகிறது.
தற்போது ரோபோக்கள் வெறும் இயந்திரங்கள் அல்ல. செயற்கை நுண்ணறிவுடன் இணைவதால் அவை, மனித குரலை புரிந்துகொள்ளல், முகத்தை அடையாளம் காணுதல், சுயமாக முடிவெடுத்தல் மற்றும் சுயமாக கற்றல் போன்ற நிலைகளை அடைகின்றன. இதனால் 'ஸ்மார்ட் ரோபோக்கள்' காலம் தொடங்கியுள்ளது. கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீது ஆர்வம் உள்ள மாணவர்கள் ரோபாட்டிக்ஸ் துறையை தேர்வு செய்யலாம்.
படிப்புகள்
ரோபாட்டிக்ஸ் இன்ஜினியரிங், ரோபாட்டிக்ஸ் அண்டு ஆட்டோமேஷன், மெக்கட்ரானிக்ஸ், ஏ.ஐ., அண்டு ரோபாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பு வழங்கப்படுகிறது. மேலும், சில பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
கற்க வேண்டிய திறன்கள்
பைத்தான், சி++, எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் டிசைன், ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜென்ஸ், சென்சார் டெக்னாலஜி, எம்பெடட் சிஸ்டம்ஸ் மற்றும் மிஷின் லேர்னிங்
எதிர்கால வளர்ச்சி
உற்பத்தி, ஆட்டோமொபைல், ஹெல்த்கேர், வேளாண்மை, பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, லாஜிஸ்டிக்ஸ், ஸ்மார்ட் பேக்ட்டரி, டிரோன் டெக்னாலஜி, டிபன்ஸ் ரோபாட்டிக்ஸ், மெடிக்கல் ஆட்டோமேஷன் ஆகிய துறைகளில் வளர்ச்சி அதிகம். மேலும், ஓட்டுநர் இல்லா வாகனங்கள் தயாரிப்பும், வீடுகளில் ஏ.ஐ., ரோபோக்களின் பயன்பாடும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இத்துறை நிபுணர்களுக்கு வாய்ப்புகள் ஏராளம்.
